Published:Updated:

“அம்மாவாக நடிக்கச் சொன்னதும் அழுதேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அம்மாவாக நடிக்கச் சொன்னதும் அழுதேன்!''
“அம்மாவாக நடிக்கச் சொன்னதும் அழுதேன்!''

முகங்கள்சாஹா

பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவாக நடிக்கச் சொன்னதும் அழுதேன்!''

‘`நான் சூப்பர் ஃபிட் இல்லை. சைஸ் ஜீரோ இல்லை. என் இடுப்பளவு 26 இல்லை. ஆனாலும், தமிழ் மக்களுக்குப் பிடிச்ச முகங்கள்ல நானும் ஒருத்தி. அது போதும் எனக்கு’’ - தன்னடக்க இன்ட்ரோ கொடுக்கிறார் பூர்த்தி பிரவீண்!

‘`மூணு மாசக் குழந்தையா இருந்தபோதே    மாடலானவளாம் நான். `கொழுக் மொழுக்'னு, வெள்ளை வெளேர் குழந்தையா இருந்தேன்னு ஒரு பவுடர் விளம்பரத்துக்குத் தூக்கிட்டுப் போனாங்களாம். விட்ட குறை தொட்ட குறையா, ஸ்கூல் படிக்கிறபோது, ஹீரோயினோட தங்கச்சி, ஃப்ரெண்டுனு ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்ல முகம் காட்டியிருக்கேன். பாக்கெட் மணிக்கான பார்ட் டைம் வேலையா ஆரம்பிச்சது, இன்னிக்கு எனக்கான அடையாளமா மாறும்னு நினைக்கலை. தி.நகர் பக்கம் போனீங்கன்னா, ஏராளமான  புடவை, நகைக் கடைகள்ல என் போட்டோவை பார்க்கலாம். படம் பண்ணினபோதும் மக்கள் என்னோட விளம்பரங்களை ஞாபகம் வெச்சுக்கிட்டு, ‘கிளாமரா நடிக்காதீங்க. விளம்பரங்களைப் போலவே பண்ணுங்க’னு சொல்ற அளவுக்கு அதோட ரீச் எங்கயோ போயிடுச்சு...’’ - படபடக்கிறார் பூர்த்தி!

‘`மாடலிங் பண்ண வந்ததுலேருந்து படங்கள்ல நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள்... ஆனா, நான் அநியாயத்துக்கு சோம்பேறி. அந்த வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு செட் ஆகாது. ‘தங்கமகன்’ படத்துல எமி ஜாக்சன் ஃப்ரெண்டா நடிக்கக் கேட்டபோது ‘நோ’ சொல்ல முடியலை. தனுஷ் என்னோட நல்ல நண்பர். அவருக்காக ‘யெஸ்’ சொன்னேன். ‘முதல் படம்... ஒருவேளை சரியா போகலைனா மாடலிங்லேருந்தும் நம்மளை ஓரம் கட்டிடுவாங்களோ’னு ஒரு பயம்... படம் ரிலீஸான அன்னிக்கே என் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டீஆக்டிவேட் பண்ணிட்டேன். ‘நீ பயந்த மாதிரி இல்லை. உன் கேரக்டரும் சூப்பர்’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்ன பிறகுதான், மறுபடி ஃபேஸ்புக் பக்கம் வந்தேன். இன்னிக்கு ‘தங்கமகன் ரேவதி'னு கூப்பிடற அளவுக்கு அந்தப் படத்துல எனக்கு நல்ல பேர் கிடைச்சிருச்சு...’’ - பூரிக்கிற பூர்த்திக்கு இதற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்கிற திட்டம் இல்லையாம்!

‘`ஒரு மாடலா எனக்குனு ஒரு இடத்தைத் தக்க வெச்சிருக்கேன். 20 வயசுல என்னை ஒரு விளம்பரத்துல குழந்தைக்கு அம்மாவா நடிக்கச் சொல்லிக் கேட்டப்ப ஷாக் ஆயிட்டேன். ‘என் இடுப்பளவுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து நடிக்கச் சொல்றீங்களே... நியாயமா’னு அழுதேன். ஆனா, அதே விளம்பரத்துல எனக்கு முன்னாடி அம்மா கேரக்டர் பண்ணியிருந்தாங்க த்ரிஷா. விளம்பர உலகத்தைப் பொறுத்தவரை இளமையான அம்மா கேரக்டர்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம்னு புரிய வெச்சாங்க. ஒரு நகைக்கடை விளம்பரத்துல எனக்கு தாலி கட்டுற மாதிரி சீன்ல, ‘அதெல்லாம் முடியாது... நான் ரொம்ப சென்டிமென்டல்’னு சொன்னபோதும், ‘அது வெறும் விளம்பரம்தான்... நிஜமில்லை’னு புரிய வெச்சாங்க. அந்தப் புரிதல் வரவே பல காலமாச்சு...’’  - மறைக்காமல் பேசுபவருக்கு காஸ்ட்யூம் டிசைனர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

எனக்குள் ஒருவன்’, ‘டிமாண்டி காலனி’ படங்களைத் தொடர்ந்து, ‘முப்பரிமாணம்’, ‘யானும் தீயவன்’, ‘இமைக்கா நொடிகள்’ என, பூர்த்தி இன்று பிஸியான காஸ்ட்யூம் டிசைனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு