Published:Updated:

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிக்கு பதில் தேர்வான நடிகர்!

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிக்கு பதில் தேர்வான நடிகர்!
தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிக்கு பதில் தேர்வான நடிகர்!

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிக்கு பதில் தேர்வான நடிகர்!

ப.பாண்டி படத்துக்குப் பிறகு மீண்டுமொருமுறை இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் தனுஷ். வெற்றி மாறனின் `வட சென்னை', கெளதம் மேனனின் `எனை நோக்கிப் பாயும் தோட்டா', பாலாஜி மோகனின் `மாரி-2' ஆகிய படங்கள் தனுஷ் நடித்து இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. மேலும், `தி ஜர்னி ஆஃப் த ஃபக்கிர்' 'எனும் ஆங்கில-பிரெஞ்சு திரைப்படத்துக்காகச் சென்ற மாதம் நடந்த கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் கலந்துகொண்டார். தற்போது, நாகர்ஜுனா மற்றும் மோகன்லால் நடிக்கும் பன் மொழித் திரைபடத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசை. ஆனால், ரஜினி தற்போது அரசியல் களத்தில் இறங்குவதில் பிஸியாக இருப்பதால் இந்த ரோலுக்கு நாகர்ஜூனாவைத் தேர்வு செய்திருக்கிறார் தனுஷ். மேலும், இப்படத்துக்கான டைட்டில் மற்றும் ஷூட்டிங் தேதி விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். ரஜினி நடித்துள்ள `காலா' திரைப்படம் வருகிற 7- ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு