Published:Updated:

சர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா? - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா? - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்
சர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா? - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்

சர்ரியலிசத் திரைப்படங்களுக்கு இது சரியான ஆரம்பமா? - `பஞ்சு மிட்டாய்’ விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன் `கலரு’ குறும்படம் மூன்று டீ ஸ்பூன், `தபேலா வாசித்த கழுதை’ குறும்படம் ஒரு டீ ஸ்பூன் மற்றும் இன்னபிற சமாசாரங்களைச் சேர்த்து இந்தப் ‘பஞ்சு மிட்டாய்’ செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோகன். புது முயற்சி, டீசென்டான படைப்பு எனக் களமிறங்கி இருக்கும் இயக்குநருக்கு ஒரு பஞ்சுமிட்டாய் பார்சல். 

மா.கா.பா.ஆனந்தும் நிகிலா விமலும் புதுமணத் தம்பதி. சென்ராயனும் மா.கா.பாவும் டவுசர் போட்டுத் திரிந்த காலத்திலிருந்தே நண்பர்கள். மா.கா.பா.-நிகிலா தம்பதிக்கிடையே சென்ராயனால் புதுப்புது பிரச்னைகள் வருகின்றன. அது என்ன, ஏன் என்பதை நகைச்சுவையும் சென்டிமென்ட்டும் கலந்து மாய யதார்த்த பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். அது என்ன மாய யதார்த்தம்? படம் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். 

நாயகன் அப்புவாக மா.கா.பா. நடிப்பு ஃபர்ஸ்ட் க்ளாஸ். அடுத்தமுறை டிஸ்ட்டிங்ஷனுக்கு முயற்சி பண்ணுங்கள் மாகாப்ஸ். நிகிலா விமலுக்குத் தமிழ் சினிமாவின் தொன்றுதொட்ட லூஸு ஹீரோயின் கதாபாத்திரம். சென்ராயன், பஞ்சு மிட்டாயின் ஸ்வீட்னஸ். அப்புவின் நண்பன் குப்புவாக நடித்திருக்கிறார். நடிப்பில் அனுபவம் தெரிகிறது ப்ரோ! வாழ்த்துகள்! நிகிலாவின் தந்தையாக நடித்திருப்பவரைப் பார்த்தாலே குபீர் சிரிப்பு கியாரன்டி. 

நாய் குரைக்க, காக்கா கத்த அடர் மஞ்சள் நிற காஸ்ட்யூமில் அறிமுகமாகும் நண்பன் சென்ராயனைப் பார்த்ததுமே பதறுகிறார் மா.கா.பா. அடுத்தடுத்த காட்சிகளில் சென்ராயன் தன் காஸ்ட்யூம் கலரை மாற்றினாலும் மா.கா.பாவின் பதற்றம் மட்டும் தொடர்கிறது. இப்படி சென்ராயன் தன் காஸ்ட்யூம் கலர் மாற்றி  மா.கா.பாவை பதற்றமடைய வைப்பது ஏன் என்பதற்கான பதிலை மேஜிக் ஃபேன்டஸி திரைப்படமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

நண்பனின் ஒவ்வொரு கலர் காஸ்ட்யூம் குடைச்சல் பற்றியும் மனநல மருத்துவர் பாண்டியராஜனிடம் சொல்லும்போது அவரின் முகம் அதே கலரில் மாறுவது, பன்றிகளையே பாதைக் கல்லாகத் தாவி வருவது உள்பட சென்ராயனின் உடல்மொழி, உடைந்த ஆங்கிலத்தில் பேசும் கிராமத்து மாமனார்... என்று கதாபாத்திர வடிவமைப்பு ஓ.கே. சென்ராயன் பற்றிய ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நிறையவே உருக்கம். 

ஆனால் மேஜிக் ஃபேன்டஸி, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம்... இப்படி ட்ரீட்மென்ட் இருந்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதை, ரசிகர்களை ஈர்க்கும் வகையான காட்சிகள் படத்தில் நிறையவே மிஸ்ஸிங். சென்ராயன் ஒவ்வொரு காட்சியிலும் வெரைட்டியான கலர் காஸ்ட்யூமில் வந்து மா.கா.பாவை டார்ச்சர் பண்ண காரணம் என்ன என்ற இந்தக் கேள்விக்கான பதிலை நோக்கிப் போகவேண்டிய திரைக்கதையில் தொடர்ச்சியான சில காட்சிகள் ரிப்பீட் அடிப்பது கொஞ்சம் அயர்ச்சி. 

காட்சியமைப்புகளைவிட வசனங்களில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர். மகேஷ் கே.தேவின் ஒளிப்பதிவில், சில கோணங்கள் அதிஅற்புதம். டி.இமான் இசையில் ஆல்ரெடி `மை வொய்ஃபு ரொம்ப ப்யூட்டிஃபுல்லு’ பாடல் ஹிட். மீத பாடல்கள் திரையிலும் சோபிக்கவில்லை. பின்னணி இசை உண்மையில் இமான்தானா? முடியல... பஞ்சுமிட்டாயைத் தாங்கியிருக்கும் குச்சி, படத்தொகுப்பாளர் ராம சுதர்சன். பின்னியிருக்கிறார் மனிதர்.

ஆனாலும், இது புதுமையான முயற்சியே. எதிர்காலத்தில் சர்ரியலிச திரைப்படங்கள் வெளியாக, `பஞ்சுமிட்டாய்’ ஓர் அடித்தளமாக அமையலாம். இந்தப் `பஞ்சுமிட்டா’யின் மேக்கிங் சிலருக்கு ஸ்சொப்பா என்றிருக்கும், சிலருக்கு இந்தப் படம் பா என்றிருக்கும். ஆனால், சூப்பர்ப்பா என்று சொல்வார்களா என்பது சந்தேகமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு