Published:Updated:

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா காலமானார்

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா காலமானார்
பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா காலமானார்
பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகை ராஜசுலோக்சனா சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78.

சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ராஜசுலோசனா, கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் அவர் நடித்துள்ளார். நல்லவன் வாழ்வான், வணங்காமுடி, துணிவே துணை, அம்பிகாபதி உள்ளிட்ட பல புகழ் பெற்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

நடிகை ராஜசுலோசனாவின் உடல், இறுதிச் சடங்குக்காக சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மலரஞ்சலி செலுத்தினார்.

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா காலமானார்

அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. ராஜசுலோசனாவுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

நடிகை ராஜசுலோசனா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.