
‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியன் பாடகியாகவும் அறிமுகம் ஆகிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கவண்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் மடோனா. இந்தப் படத்தில் டி.ராஜேந்தருடன் சேர்ந்து ஒரு பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார்.
ரஜினி முதல் ஆர்யா வரை பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, மீண்டும் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். நான்கு வயது குழந்தைக்குத் தாயாக நயன் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அக்கா - தம்பி சென்டிமென்ட் கரைபுரளுமாம். அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ அதர்வா.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ் சினிமாவின் புத்தகப்புழு இயக்குநர், மிஷ்கின். தனது படங்களில் வித்தியாசமான முத்திரை பதித்துவரும் மிஷ்கின், இப்போது விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி வருகிறார். எப்போதும் அப்பாவி வேடத்தில் அதகளப்படுத்தும் பாக்யராஜை ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்குமாறு கேட்க, அவரும், டபுள் ஓ.கே சொல்லிவிட்டார். இதே மிஷ்கின்தான், ‘அஞ்சாதே’ படத்தில் பாக்யராஜின் சிஷ்யன் பாண்டியராஜனை வில்லனாக நடிக்கவைத்தார்.
மியாவ் பதில்:
நடிகர் சங்கத்தில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடந்ததே?
‘ஆணாதிக்க சமூகத்தில் போராடி ஜெயித்த ஜெயலலிதா, கோஹினூர் வைரம்’ என்று புகழாரம் சூட்டினார் ரஜினி. ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற பாடலைப்பாடி அஞ்சலி செலுத்தினார் வடிவேலு. ‘என்னுடைய ‘சூரியகாந்தி’ படத்தில் ஜெயலலிதா நடனம் ஆடிய பாடலுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த டான்ஸ் மாஸ்டர் கமல்ஹாசன்’ என்று முக்தா சீனிவாசன் சொல்ல... பார்வையாளர்கள் விழிகள் ஆச்சர்யத்தில் உயர்ந்தன.