Published:Updated:

"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive

"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive

"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive

"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive

"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive

Published:Updated:
"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive

குட்டி பத்மினி... பெயரைத் தாண்டி அறிமுகம் தேவைப்படாத செலிபிரிட்டி ஆளுமை. மீ டு (me too) போன்ற சுயசரிதைப் புத்தகம் ஒன்றை எழுதிவருகிறார், புழல் சிறை கைதிகளுக்குத் தியானம் சொல்லித்தருகிறார், பகவத் கீதை வகுப்பு எடுக்கிறார் எனப் பட்டியல் போடுகிறது செய்திகள். ஒரு புன்னகை வணக்கத்துடன் அவரைச் சந்தித்தோம்.

"ஆமாம்மா, நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். திட்டம் போட்டு குற்றம் பண்றவங்க பற்றி நான் பேசலை. ஆனால், ஜெயிலில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் ஒரு நிமிஷம் உணர்ச்சிவசப்பட்டு செய்த தப்பினால், தண்டனைக் காலம் தாண்டியும் ஜெயிலில் இருக்காங்க. அவங்களின் மன அமைதிக்காக என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு'' என்கிறார் குட்டி பத்மினி.

"எப்படி ஆரம்பித்தது இந்த எண்ணம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பகவத் கீதை வகுப்பு எடுக்கலாமே என்று நினைச்சு அனுமதி வாங்கி அங்கே போனேன். புழல் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைக் காலம் முடிஞ்சும் இருக்காங்க. இத்தனைக்கும் அவங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் உட்பட எல்லா புரொஸிஜரையும் முடிச்சும் விடுதலை பண்ணாம இருக்காங்க. ரொம்பவும் வயதானவர்களும் அப்படி இருக்கிறதைப் பார்த்து வேதனைப்பட்டேன். இவங்களுக்கு ஏதாவது செய்யணுமே என நினைச்சு, அப்போ முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திச்சேன். அப்புறம் எடப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன் என எல்லோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி, புழல் சிறையில் 10 வருடங்களாகத் தண்டனை அனுபவிச்சு வந்த 67 கைதிகளை விடுதலை பண்ணியிருக்காங்க. இதைக் கேள்விப்பட்டதும் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ஒரு பேட்ச்தான் வெளியே வந்திருக்கு. இன்னமும் இப்படி நிறைய பேர் இருக்காங்க. அவங்களும் வெளியே வரணும்.''

''உங்க சுயசரிதையைப் புத்தகமாக எழுதுறீங்களாமே...''

''கிட்டத்தட்ட எழுதி முடிச்சுட்டேன். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அதனால், என் மனசும் பிஞ்சிலேயே பழுத்துடுச்சு. யார் யாருக்கு நல்லது பண்றாங்க, கெடுதல் பண்றாங்க எனச் சின்ன வயசிலேயே தெரிஞ்சுக்க முடிஞ்சது. அந்த விஷயங்களைச் சம்பந்தப்பட்டவங்க பெயர்களோடு சுயசரிதையில் எழுதியிருக்கேன். சிவாஜி, எம்.ஜி.ஆர், சாவித்திரி, ஜெயலலிதா உள்ளிட்ட அத்தனை ஜாம்பவான்களும் என் புத்தகத்தில் கடந்துபோவாங்க. இந்தப் புத்தகத்தை என் லாயரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர், 'நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் பாலிஷ்டா பெயர் குறிப்பிடாமல் எழுதுங்களேன்' என்றார். சுயசரிதை என்பது உண்மையை எழுதறதுதானே. பெயரில்லாமல் எழுதறது, பாலிஷ்டா எழுதறதெல்லாம் எப்படிச் சரியாகும்? 'அப்படியே வெளியிட்டால் எக்கச்சக்க கோர்ட் நோட்டீஸ் வர்றது நிச்சயம்'னு சொல்றார். இதுக்கெல்லாம் பயந்து எழுதினதை மாற்றுவதாக இல்லை. 'நான் செத்த அடுத்த நிமிஷம் புத்தகத்தை ரிலீஸ் பண்ணிடு'னு என் மகளிடம் சொல்லியிருக்கேன். ஸோ, என் சுயசரிதை புத்தகம் நிச்சயம் வெளிவரும்.''

"'நடிகையர் திலகம்’ படம் பார்த்தீங்களா?’’

"பார்த்துட்டேன். படம் முடிகிற வரை அவ்ளோ அழுதேன். ஏன்னா, நான் அவங்க பக்கத்துல பல காலம் இருந்திருக்கேன். 'பாசமலர்' படத்தில் குட்டி சாவித்திரியா நடிச்சது நான்தான். அவங்களின் பிஸி ஷெட்யூலில் அவங்க குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட முடிஞ்சுதான்னு தெரியலை. ஆனால், எத்தனையோ படங்களில் அழுதுகிட்டே எனக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சாப்பாடு ஊட்டியிருக்காங்க. படத்தில்தான் அழுகை. நிஜத்தில் ஜாலியான டைப் அவங்க. ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டு, இடது கையால் பிளைமோத் காரை ஓட்டிட்டு வரும்போது அவ்ளோ ஸ்டைலிஷா இருப்பாங்க. கடைசியில் அவங்க நிலைமையை நினைச்சுப் பார்க்கவே முடியலை. ஒருதடவை ரேடியோவில் என் நிகழ்ச்சித் தொடர்பான ஷூட் போயிட்டிருந்துச்சு. அப்போ சாவித்திரியம்மா வந்திருக்காங்க. அவங்களை 3 மணி நேரம் வெயிட் பண்ணவெச்சுட்டாங்க. விஷயம் கேள்விப்பட்டதும் பதறிப்போய் வருத்தம் தெரிவிச்சேன். ஆனால், அவங்க அதைப் பெருசு பண்ணிக்கவே இல்லை.''

''நீங்கள் நடித்த காலத்தில், வாய்ப்புக்காக நடிகைகளைத் தவறாகப் பயன்படுத்துவது இருந்ததா?''

''அப்போ இந்த அளவுக்கு இல்லை. நிறைய கதாநாயகிகள் கல்யாணம் முடிஞ்சும் நடிச்சாங்க. அதனால், காஸ்ட்டிங் கவுச் பிரச்னை குறைச்சலா இருந்திருக்கலாம்.''

''சின்னத்திரையில் இந்தப் பிரச்னைகள் இருக்கா?''

''பொதுப்படையா எதுவும் குறிப்பிட விரும்பலை. என் சீரியல்களில் நடிக்கிற நடிகைகள் அத்தனை பேரிடமும் என் பர்சனல் நம்பர் கொடுத்திருக்கேன். என் யூனிட்டை சேர்ந்த யாராவது, காஸ்ட்டிங் கவுச் செய்ய முயற்சி பண்ணினா உடனே எனக்குப் போன் பண்ணச் சொல்லியிருக்கேன். இப்போ பண்ணிட்டிருக்கும் இந்தி வெப் சீரிஸ் வரைக்கும், என்னிடம் வொர்க் பண்ணும் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச் நடக்க விடமாட்டேன்.''