கலாய்
Published:Updated:

‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’

‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’

‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’

‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’

‘`ஒரு ரூம்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம். அது ஒரு காடு, நைட்டு நேரம், விடாம மழை... இது தான் சீன். அந்தக் காட்சிக்கான டயலாக்கைத் தவிர்த்து கதை நடக்குற சூழல், இடம் என எல்லாவற்றையும் ஆடியன்ஸுக்கு சவுண்ட் மூலமாகவே கடத்தணும். சவாலான வேலைங்குறதைவிட ஒரு கிரியேட்டிவான வேலைதான் ஆடியோகிராஃபி!’’- பேஸ் வாய்ஸிலேயே பேசுகிறார் சுரேன். ‘வணக்கம் சென்னை’யில் தொடங்கி ‘மதயானைக் கூட்டம்’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அச்சம் என்பது மடமையடா’ என சவுண்ட் இன்ஜினீயரிங் மூலமாக வேறொரு அனுபவத்தைக் கொடுத்த ஒலிப்பதிவாளர்.

‘`சவுண்ட் டிசைனர், சவுண்ட் மிக்ஸர்... எப்படிக் கூப்பிடுறது உங்களை?”

(சிரிக்கிறார்) ``ஆடியோகிராஃபியில நிறைய பிரிவு இருக்கு. ஆரம்பத்துல நானும், அழகியகூத்தனும் சேர்ந்துதான் டிசைனிங் பண்ண ஆரம்பிச்சோம். பிறகு அனிருத் ‘காக்கிசட்டை’க்கு   சவுண்ட் மிக்ஸிங் பண்ணச் சொன்னார். சவுண்ட் டிசைனிங் அந்தக் கதைக்கும் காட்சிக்கும் என்னென்ன சவுண்ட் தேவைங்கிறத முடிவு பண்ணும். அது எந்த அளவுல வேணும்கிறதை சவுண்ட் மிக்ஸிங் தீர்மானிக்கும். சவுண்ட் இன்ஜினீயரிங்ல ரெண்டுமே அடங்கிடும். பாண்டிச்சேரி பையன் நான். இசைமேல உள்ள ஆர்வத்துல இன்ஜினீயரிங் முடிச்சு, சென்னை வந்ததும் சவுண்ட் இன்ஜினீயரிங் கோர்ஸ் பண்ணேன். ரேடியோவுல சவுண்ட் இன்ஜினீயரிங் இன்டர்ன்ஷிப் கிடைச்சது. முடிச்சுட்டு, சவுண்ட் இன்ஜினீயர் உதயகுமார் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன்.'' 

‘`உங்க படங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச காட்சிகள்?’’

‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’

`` ‘நானும் ரெளடிதான்’ ஃபிளாஷ்பேக்ல பாம் வெடிக்குற சீன்ல ஒரு சவுண்ட் வரும். அந்த இடத்தை வெறும் சைலன்ஸ் வெச்சுட்டுப் போயிருக்கலாம். ஆனா, திபெத்தியன் கோவில்ல இருக்குற கருவிகளை வெச்சு சவுண்ட் கொடுத்திருப்போம். அதேமாதிரி, ‘மாரி’ படத்துல க்ளைமாக்ஸ்ல புறா சத்தமும், இறகு சத்தமும் டிசைன் பண்ணியிருப்போம். இப்படி எல்லா படமுமே சீனுக்கான மூடுக்குக் கொண்டு போகணும்னுதான் உழைக்கிறோம்.''

‘`மெளனக் காட்சிகளுக்கு, உங்க மெனக்கெடல் எப்படி இருக்கும்?”

``எல்லா இடத்துலேயும் நாம சைலன்ஸ் பிளே பண்ணிட முடியாது. அதே நேரத்துல சைலன்ஸ் தவிர்த்தும் நாம வேலை பண்ணிட முடியாது. ‘ராஜதந்திரம்’ சவுண்டுக்கு ரொம்ப வேலை இருந்த படம். ஓபனிங் சீன்ல பார்த்தீங்கன்னா, ஏதோ ஒண்ணு நடக்கப் போகுதுங்கிற எதிர்பார்ப்பு இருந்துட்டே இருக்கும். அதுல நிறைய சைலன்ஸ் வொர்க் பண்ணியிருப்போம்.''

‘`சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற படங்கள் தமிழ் சினிமாவுல அவ்வளவா வருதா?’’

``சுத்தமா இல்லைனு சொல்லிடமுடியாது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, சவுண்ட் டிசைனிங் ஆரோக்கியமாதான் இருக்கு. எதையுமே அந்தந்தக் கதை தீர்மானிக்கிறதைப் பொறுத்துதான் சவுண்டோட பங்களிப்பு இருக்கும். காமெடிப் படம், பேய்ப் படம், ஆக்‌ஷன் படம்னு எல்லாத்துக்கும் ஒரு டோன் இருக்கும். அதோட இயல்புல ஒர்க் பண்ணணும்!''

‘`சில நேரங்கள்ல வசனத்தையும், அந்தக் கேரக்டரையும் சவுண்ட் ஆக்கிரமிக்குதே... ஏன்?”

``பெரும்பாலும் ஒரு மாஸ் ஹீரோவோட இன்ட்ரோ சீன்தான் நீங்க சொல்ற மாதிரி இருக்கும். அங்கே அவங்க வந்து நின்னாலே போதும்னு நினைப்பாங்க. அப்போ, வசனத்தைவிட சவுண்டோட தாக்கம் அதிகமா இருக்கணும்னு முடிவு பண்ணுவோம். இது தனித்து எடுக்குற முடிவு இல்லை. இயக்குநரோட எதிர்பார்ப்பு, ஆடியன் ஸோட பல்ஸ்... எல்லாம் இதுல அடக்கம்!''

‘` ‘அச்சம் என்பது மடமையடா’வுக்குப் பிறகு திரும்பவும் கெளதம் மேனன்கூட ஒர்க் பண்றீங்க போல?”

‘`சும்மா தோட்டா தெறிக்கும்!’’

`` ‘மின்னலே’ படம் வரும்போது நான் ஸ்கூல் பையன். நான் கொண்டாடுன ஒரு ஆளுமை அவர். எனக்குக் கால் பண்ணி, ‘இந்த சீன் நாம இப்படிப் பண்ணலாமா சுரேன்?’னு கேட்கும்போதும், மாத்துறதுக்காக அவர் என் பக்கத்துலேயே உட்கார்ந்து கரெக்‌ஷன்ஸ் சொல்லும்போதும்... ஜிவ்வுனு இருக்கும் எனக்கு. திரும்பவும் அவரோட படத்துல வேலை பார்க்குறது சந்தோஷம். ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வுல சவுண்ட் டிசைனுக்கு நிறைய ஸ்கோப் இருக்கு. படம் பாருங்க... சும்மா தோட்டா தெறிக்கும்!''

‘`சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவான படங்களில் உங்களுக்குப் பிடிச்சது?”

``அனுராக் காஷ்யப்போட ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’.''

‘`சுரேன் ஸ்டைல் என்ன?”

``ஒரு மாஸ் படம்னாலும் அதோட தேவைகள், ஒரு கிளாஸ் படத்துக்கான டீடெயில் வொர்க்... இப்படி ரெண்டு ஜானர்லேயும் பண்ண முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்கு கெளதம் மேனன் சார்கிட்ட இருந்த ரெண்டு என்ஃபீல்டு புல்லட்டையும் வாங்கிட்டுப் போய் சவுண்ட் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டோம். ‘மதயானைக் கூட்டம்’ பண்ணும்போது, அந்த ஊருக்கே போய் ராத்திரி முழுக்கச் சுத்தி தேவையான சவுண்டை ரெக்கார்ட் பண்ணிக்கிட்டோம். நான் வொர்க் பண்ற சீன் முடிஞ்ச அளவுக்கு உயிர்ப்போட இருக்க, என்னோட சவுண்ட்ஸும் ஒரு காரணமா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அதான் என் இலக்கும்!''

- ந.புஹாரி ராஜா