கலாய்
Published:Updated:

மாடல் மடோனாக்கள்!

மாடல் மடோனாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடல் மடோனாக்கள்!

மாடல் மடோனாக்கள்!

மாடல் மடோனாக்கள்!

மாடலிங்கில் மையம் கொண்டு தமிழ் சினிமாவை நோக்கி நகர்ந்து வரும் அழகுப் புயல்களின் பெர்ஷனல் லைக்ஸ் அண்ட் பிளான் பற்றிய பக்கங்கள்!

பாயல் திரிவேதி

பாயல்னா கொலுசுன்னு அர்த்தம். சென்னை வந்த நாலு வருடத்துல நல்லாவே தமிழ் பேசும் கொல்கத்தா பொண்ணு நான்.

முதல் மாடலிங் : `ப்ளஸ்டூ படிக்கும்போது பண்ணினேன். இப்போ ஜெயின் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் பி.காம் ஸ்டூடண்ட். வீட்டுக்கு ஒரே பொண்ணு. வீட்டுலேயும் செம்ம சப்போர்ட்' எனச் சொல்லும் பாயல் ஃபாக்ஸ் ஸ்டுடியோவின் காலண்டர் மாடல்.

பிடிச்ச விஷயம் : சாப்பாட்டு விஷயத்துல பானிபூரியும் காஃபியும் ஃபேவரைட், அட்வென்சர் பிடிக்கும், ஷாப்பிங். (அது விண்டோ ஷாப்பிங்கா இருந்தாலும்!)

உங்களைப் பத்தி ஒரு வார்த்தை : சின்ன கிராமத்துல இருந்து பெரிய வெளிச்சத்திற்காகக் காத்திருக்கும் ஃபிரீசியா பூ நான்.

சினிமா ஆசை : இப்போ நிதின் சத்யா ஜோடியா ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன். எந்த மாதிரி கேரக்டர்னாலும் நடிக்கணும். ஆனா ஆடியன்ஸ் மனசுல பதியுற மாதிரியான கேரக்டர் பண்ணணும்.

பயோடேட்டா : வயசு 19 உயரம்  5.6 எடை 56 கிலோ

ஃபேவரைட் ஹீரோ : தனுஷ்

ஹீரோயின் : நயன்தாரா

ஸ்ரீ நிதா

மாடல் மடோனாக்கள்!

‘அப்பா இன்ஜினியர். அம்மா வழியில எல்லோருமே டாக்டர், நீ மட்டும் என்ன சம்பந்தமே இல்லாம மாடலிங் எடுத்துப் பண்ற?’னு ஆரம்பத்துல கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது எனச் சொல்லும் நிதா, ஆர்.எம்.கே.வி, புரொபசனல், கொரியர், கோ-ஆப்டெக்ஸ் மாடல்.

மாடலிங் மீது விருப்பம் : `சின்ன வயசுல இருந்தே ஸ்கூல்ல மாறுவேடப் போட்டிக்கு விதவிதமான ட்ரெஸ் பண்ணிட்டுப் போனதுல இருந்தே ஒருவிதமான ஈர்ப்பு. அதுதான் என்னை மாடலிங் பக்கம் கொண்டுவந்து சேர்த்திருக்கும்'னு நம்புறேன்.

பயோடேட்டா : வயசு 20, உயரம் 5.6, எடை 50 கிலோ. மூன்றாமாண்டு இன்ஜினீயரிங் படிக்கிற சென்னைப் பொண்ணு.

முதல் மாடலிங் ஷோ : காலேஜ் ஃபேஷன் ஷோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். அப்படியே ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிச் சொல்லி வெளியிலயும் மாடலிங் பண்ணிட்டு இருக்கேன்.

பிடிச்ச விஷயம்: நிறைய மனிதர்களைச் சந்திச்சுப் பேசப் பிடிக்கும். அதனால் டிராவல் பிடிக்கும்

மறக்க முடியாத நிகழ்வு : என்னோட முதல் ராம்ப்வாக் ஷோ. எல்லாத்தையும் வெளியில இருந்து பார்த்துட்டு, முதல் தடவை வாக் போகும்போது இது நமக்கான உலகம் அப்படின்னு ஒரு ஃபீல் வந்தது.

சினிமா வாய்ப்பு : நிறைய வருது. சமீபத்துல சிம்பு படத்தோட ஷூட்டிங்ல கலந்துகிட்டேன். ஆனா எக்ஸாம் செமினார்னு மாட்டிக்கிட்டதால கண்டினியூ பண்ண முடியலை. சீக்கிரமே படிப்பை முடிச்சிட்டு சினிமாதான்.

ஃபேவரைட் ஹீரோ :
விக்ரம்

ஒரு தத்துவம் : நம்மனாலதான் நம்மள சந்தோஷமா வெச்சுக்க முடியும். அதனால live the moment தான்!

பவித்ரா

மாடல் மடோனாக்கள்!

கோயம்புத்தூரில் பி.காம் முடித்த கையோடு மாடலிங்கில் அடியெடுத்து வைத்தவர். மாடலிங் ரியாலிட்டி ஷோ, சினிமா என பிஸி கேர்ள்.

2010ல இருந்து மாடலிங் ஆரம்பிச்சேன். மிஸ் மெட்ராஸ் 2015 அவார்டு வாங்கினேன். ஆரம்பத்துல மாடலிங்கைவிட டான்ஸ்லதான் அதிக கவனம் எடுத்தேன். அதுக்குப் பிறகு முழுநேர மாடல் ஆகிட்டேன்.

பயோடேட்டா : என்னோட உயரம் 5.2 சில நேரங்கள்ல அதுதான் பாசிட்டிவாகவும் இருக்கும். நெகட்டிவாகவும் இருக்கும். எடை, 46 கிலோ

சினிமா : faces of chennai ஷோ முடிஞ்சதும் `ஓகே கண்மணி'ல துல்கர் கூட நடிச்சேன். இப்போ `அதே கண்கள்'ல ரிப்போர்ட்டர் கேரக்டரைப்  பண்ணியிருக்கேன். சீக்கிரமே பெரிய பெரிய ரோல்லயும் எதிர்பார்க்கலாம்.

பிடிச்ச விஷயம் : எனக்கு கேமரா பிடிக்கும். அந்தக் கேமரா முன்னால பெர்ஃபார்ம் பண்றது ரொம்பப் பிடிக்கும். வீட்டுல எனக்கு நானே ஆக்‌ஷன் கட் சொல்லிட்டு நடிச்சுப் பார்ப்பேன். சாக்லேட்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஷாப்பிங் பிடிக்கும். சில நேரங்கள்ல தொடர்ந்து ரெண்டு நாள்கூட சினிமா பார்த்திருக்கேன்.

ஃபேவரைட் நடிகர் : தல அஜீத், சிம்பு

நடிகை : நயன்தாரா

கேரக்டர் விருப்பம் : `நானும் ரெளடிதான்', நயன்போல கேரக்டர்ஸ் பண்ணணும்!

அகிலா நாராயணன்

மாடல் மடோனாக்கள்!

அமெரிக்கப் பொண்ணு! இப்போ சென்னையில ‘miss teen india USA 2015',  `miss teen india New England 2015' எனப் பல டைட்டில்களில் ரன்னர்-அப்பாகக் கலக்கியவர்!

பொழுதுபோக்கு : டான்ஸ் தான். அஞ்சு வயசுல இருந்தே கிளாசிகல் டான்ஸ் பண்ணிட்டு இருக்கேன். பாட்டு பாடுவேன்.

நெக்ஸ்ட் பிளான் : பின்னணிப் பாடகியா வரணும். அதே நேரத்துல மாடலிங்லயும் நல்ல பேர் எடுக்கணும். இப்போ ஏ.ஆர்.ரஹ்மான் சார் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கேன். படிப்பு முடிஞ்சதும் உலகம் முழுதும் பயணப்படணும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசையமைக்க கத்துக்கொடுக்கணும்னு நிறைய பிளான் இருக்கு.

சினிமா நடிப்பு : இப்போ நிறைய குறும்படங்கள்ல நடிக்க வாய்ப்பு வருது. சீக்கிரம் ஒரு நாள் பெரிய திரையிலயும் பார்க்கலாம்.

ஒரு தத்துவம் : follow your heart!

- ந.புஹாரிராஜா