கலாய்
Published:Updated:

செம கலாய் சினிமாக்கள்!

செம கலாய் சினிமாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
செம கலாய் சினிமாக்கள்!

செம கலாய் சினிமாக்கள்!

செம கலாய் சினிமாக்கள்!

ஹாலிவுட்டைக் கலாய்ப்பதில் டைம்பாஸோடு போட்டி போடுவது சாட்சாத் ஹாலிவுட்டேதான். `வெளியாள் எல்லாம் வேணாம், நாங்களே கலாய்ச்சுக்குவோம்' என்ற ரீதியில் அவர்கள் எடுக்கும் ஸ்பூஃப் படங்களுக்கு வரவேற்பும் ஏகபோகமாக இருக்கிறது. அப்படி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எகிறியடித்த சில `ஸ்பூஃப்' படங்களின் லிஸ்ட் இது.

Scary Movie

ஆக்‌ஷனில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றால் ஹாரரில் Scream series படங்கள். 90-களில் இளசுகளை அலறவைத்த இந்தப் படங்களை வைத்துச் செய்வதற்கென்றே Scary movie படங்களை எடுத்தார்கள் குசும்புக்காரர்கள். மாஸ்க் அணிந்த கொலைகாரன் ஒரு காலேஜ் கும்பலைத் தேடித் தேடிக் கொல்வதுதான் மூலக்கதை. அதை எந்த அளவுக்கு காமெடியாகச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு இறங்கியடித்தார்கள். அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரங்களும் எக்கச்சக்கம். குபீர் சிரிப்பிற்கு கியாரன்டி.

The Naked Gun: From the Files of Police Squad

செம கலாய் சினிமாக்கள்!

அந்தக் காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர க்ரேஸ். பலப்பல கேட்ஜெட்களை வைத்து உட்டாலக்கடி வேலைகள் காட்டும் பாண்ட் வரிசைகளைக் கலாய்ப்பதையே முதல் வேலையாகக் கொண்டு படம் எடுத்தார்கள். வயசான போலீஸ் அதிகாரி எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக்கொண்டு வில்லன் கும்பலைக் கைது செய்யக் கிளம்புவார். அவரால் நடக்கும் குபீர் சம்பவங்கள்தான் கதை. டைட்டில் கார்டிலேயே கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள். மொத்தம் மூன்று பாகங்கள் என்றாலும் முதல் பாகம்தான் கெத்து.

Airplane

செம கலாய் சினிமாக்கள்!

டிஸ் ஆர்டர் வகைப் படங்களை குறிவைத்து இறங்கிய காமெடிப் படம். 1957-ல் `ஜீரோ ஹவர்' என்ற படம் வெளியானது. நடுவானில் பயணிகள், பைலட்கள் என அனைவரும் உணவு காரணமாக நோய்வாய்ப்பட, ஆபத்திலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. அந்தப் படத்தை தரைலோக்கல் அளவிற்குக் கிண்டலடித்து 1980-ல் வெளியானது இந்தப் படம். வசூல் ஒரிஜினல் படத்தைவிட அதிகம். இன்றுவரை ஆல்டைம் காமெடிப் படங்களின் லிஸ்ட்டில் நச்சென நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கிறது. மறக்காம பாருங்க மக்களே.

Monty Python and the Holy Grail

செம கலாய் சினிமாக்கள்!

பீரியட் படங்களைப் பொறுத்தவரை கிங் ஆர்தர்தான் கெத்து. அவரை வைத்தே பல மில்லியன்கள் சம்பாதித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இது சேட்டைக்காரர்களின் கண்ணை உறுத்த, உடனே கலாய்த்து ஒரு படம் எடுத்தார்கள். `ராஜாவே ஆனாலும் விட மாட்டோம்' என பாரபட்சமில்லாமல் பங்கமாக்கிய இந்தப் படம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட். 1975-ல் ரிலீஸானதால் ஒருவகையில் ஸ்பூஃப் ஜானரில் வெளியான முதல் தலைமுறை படங்களுள் ஒன்று என இதைச் சொல்லலாம். கடந்த ஆண்டு படத்தை ரீ- ரிலீஸ் செய்தார்கள்.

Young Frankenstein

செம கலாய் சினிமாக்கள்!

ஃப்ரான்கன்ஸ்டைன் - ஹாரர் பட விரும்பிகள் மத்தியில் இந்தப் பெயர் மிகவும் பிரபலம். பல புத்தகங்கள், படங்கள் இந்த கேரக்டரை சுற்றி உருவாகியிருக்கின்றன. சும்மா இருப்பார்களா எதிர்கோஷ்டி. உடனே முழுக்க முழுக்க கிண்டலடித்து ஒரு படமெடுத்துவிட்டார்கள். அதுவும் ஒரிஜினல் வெர்ஷன் படங்களில் பயன்படுத்தப்பட்ட அதே செட்கள், ப்ராப்பர்ட்டிகள் வைத்தே. ஆஸ்கரை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட இந்தப் படம் இன்னபிற விருதுகளை வாங்கிக் குவித்தது. எவர்க்ரீன் காமெடிப் படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கு முக்கிய இடமுண்டு.

Spaceballs

செம கலாய் சினிமாக்கள்!

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை சளைக்காமல் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் ஹாலிவுட் படைப்பாளிகள். அப்படி சக்கைபோடு போட்ட 'ஸ்டார் வார்ஸ்' சீரிஸ் படங்களைக் கலாய்த்து எடுக்கப்பட்ட ஸ்பூஃப்தான் இது. படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை. `கல்ட் க்ளாசிக்' என பல தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கலாம் எனப் பல வருஷமாகப் பேசி வருகிறார்கள். சீக்கிரம் கண்ணுல காட்டுங்கப்பா!

Shaun of the Dead

செம கலாய் சினிமாக்கள்!

ஹாலிவுட்டில் ஸோம்பி ஜானர் படங்கள் மட்டுமே நூற்றுக்கணக்கில் வந்திருக்கின்றன. இதை எல்லாம் பார்த்து சலித்துப் போன ஆட்கள்தான் இந்தப் படத்தை எடுத்திருக்க வேண்டும். எந்த அளவிற்கு நார்மல் ஸோம்பி படங்கள் பயமுறுத்துமோ அந்த அளவிற்கு இந்தப் படங்கள் சிரிக்க வைக்கும். க்ளைமாக்ஸில் ஸோம்பிக்களை கூலியாட்களாக வேலைக்கு எல்லாம் வைத்துக்கொள்வார்கள். 2004-ல் வெளியான இந்தப் படம் விமர்சகர்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் கோடிகளை வாரிக் குவித்தது!

Deadpool

செம கலாய் சினிமாக்கள்!

சூப்பர் ஹீரோக்களை இதுவரை எப்படிப் பார்த்திருக்கிறோம்? கெத்தாக... அஞ்சானாக... கேஸ் ட்ரபிள் உள்ள சூப்பர்ஹீரோவைப் பார்த்திருக்கிறீர்களா? ஆக்‌ஷனைவிட ரியாக்‌ஷன் நிறைய காட்டும் சூப்பர் ஹீரோவை? இந்தப் படம் அப்படியான படம்தான். எக்ஸ்மேன் வரிசையில் வந்த இந்தப் படத்தில் பாரபட்சம் பார்க்காமல் எக்ஸ்மேன் கேரக்டர்களையே கலாய்த்திருப்பார்கள். ஹீரோ ரேயான் ரெனால்ட்ஸின் கேரியரில் இது மிகப்பெரிய ஹிட். படம் ரிலீஸான எல்லா நாடுகளிலும் அமோக வரவேற்பைப் பெற... கோடிகளில் குளித்தார்கள் தயாரிப்பாளர்கள்!

- நித்திஷ்