Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

னுஷ் - அனிருத் இடையே பனிப்போர் நடப்பதாகத் தகவல் உலவியது. அது பொய் என உடைத்துப்போட்டுள்ளார், தனுஷ். செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி -2’ படத்துக்குப் பின்னணி இசை அனிருத். இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் காஜோல் நடிக்கிறார். ‘மின்சார கனவு’ படத்துக்குப்பின், 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கோலிவுட்டில் காலடி பதிக்கும் காஜோல், ‘தனுஷ் ஒரு பிரமாதமான நடிகர்’ என்று புகழ்மாலை சூட்டுகிறார்.

மிஸ்டர் மியாவ்

ஜித் தனது 57-வது படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. அங்கு சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா சென்றார். அவருக்கு ஸ்டார் ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட, உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். திடீரென தடாலடி வேலைகளில் இறங்க, போலீஸ் தலையிடும் அளவுக்கு விவகாரம் போய், சில்வா நீக்கப்பட்டார். இப்போது, ‘சிறுத்தை’ பட ஸ்டன்ட் மாஸ்டர் கணேஷ், அஜித்துக்கு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

பிரசாரக் கூட்டங்களில், அ.தி.மு.க-வின் தலைமைக் கழக ஸ்டார் பேச்சாளர் விந்தியாவின்  பேச்சைக் கேட்டுப் பிரமித்த ஜெயலலிதா, போன் போட்டு விந்தியாவைப் பாராட்டினார். ஜெ. மறைவுக்குப் பிறகு விந்தியா பயங்கர அப்செட். சின்னம்மா தோத்திரம் பாடிய சசிகலா ஆதரவாளர்கள்    விந்தியாவை முற்றுகையிட்டு ஆதரவு கோரினர். ‘அம்மான்னு சொன்ன என் வாய், சின்னம்மான்னு சொல்லவே சொல்லாது’ என்று பேஸ் வாய்ஸில் விந்தியா பேச, வந்தவர்கள் திகைத்துப்போனார்களாம்.

மியாவ் பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீண்ட இடைவெளிக்குப்பின், ‘கத்தி சண்டை’ படத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளாரே?

கடந்த சில ஆண்டுகளாக, புதிய படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என்று சமீபத்தில் நடிகர் வடிவேலு கூறினார். “தி.மு.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ததால் எனக்குப் பட வாய்ப்பு கிடைக்க
வில்லை என்று சிலர் பேசினார்கள். அது உண்மை அல்ல. என் நகைச்சுவைக் காட்சிகளை விரும்பிப் பார்ப்பதாக ஜெயலலிதா அம்மாவே சொல்வார்கள். அப்படி இருக்கும்போது என் வாய்ப்புகளுக்கு அவர் தடையாக இருந்தார் என்று சொல்வது தவறு. எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், காமெடிக்கு முக்கியத்துவம் இல்லாமல் சிறிய வேடங்களாக இருந்ததால் அவற்றை நான் மறுத்துவிட்டேன். இதுதான் உண்மை” என்று வடிவேலு சொல்லியிருக்கிறார்.