சினிமாவைப் பொறுத்தவரை ஆண்கள் வைத்ததுதான் சட்டம். அது ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி. பல தடைகளைத் தாண்டித்தான் பெண்களை முன்னிறுத்தும் சினிமாக்கள் உலகமெங்கிலும் வெளியாகின்றன. அப்படிப் பெண்களை மையமாக வைத்து கொரிய மொழியில் வெளியாகி உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

Bedevilled :

கொரிய இயக்குநர் கிம் கி டுக்குக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் பட்டறையில் இருந்து வெளிவந்த ஜாங் செல் சோ இயக்கிய படம் இது. பரபரப்பான சியோல் நகரத்தில் மூச்சு முட்டும் சூழலில் வாழ்கிறாள் ஹே ஓன். ஸ்ட்ரெஸ் அதிகமாக, ஓய்வு வேண்டி, தான் சிறுவயதில் வளர்ந்த தீவில் இருக்கும் ஊருக்குச் செல்கிறாள். அங்கே அவளின் பால்யகால நண்பியைச் சந்திக்கிறாள். அந்த நண்பிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கதையும் அதன் விளைவுகளுமே படம். 2010-ல் வெளியான இந்த த்ரில்லர் படம் கலெக்ஷனில் ரெக்கார்ட்களை எத்தித் தள்ளியது. கூரையைப் பிய்க்கும் அளவுக்கு கலெக்ஷன்.

The Housemaid :

பிளாக் அண்ட் ஒயிட் காலத்து பிளாக்பஸ்டர். 1960-ல் வெளியான லேண்ட்மார்க் சினிமா. மனைவி, இரு குழந்தைகள் என அழகான குடும்பம் டோங் சிக் கிம்முக்கு. கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு உதவி செய்ய ஒரு வேலைக்காரியைப் பணிக்கு அமர்த்துகிறான் டோங். அது மொத்தக் குடும்பத்துக்கும் வினையாகிறது. தொடர் உயிர்பலிகள், திருப்பங்கள் என திக்திக் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர் கிம் கி யங். ஆல்டைம் சிறந்த கொரியப் படம் இது என சண்டை போடாமல் ஒத்துக்கொள்கிறார்கள் விமர்சகர்கள்.

Mother :

வயதான விதவைத் தாய் ஒருவரால் என்ன செய்ய முடியும்? என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் எனப் பொட்டில் அடித்து உணர்த்தியது இந்தப் படம். அமைதியான சிறு நகரம் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறாள் ஓர் இளம்பெண். சாட்சி சூழ்நிலைகளை வைத்து டோ ஜூன் என்ற இளைஞன் தான் கொலைகாரன் என முடிவுக்கு வருகிறார்கள். தன் மகனை நிரபராதி என நிரூபிக்க சோலோவாக்ப் போராடு கிறார் டோ ஜூனின் அம்மா! க்ளை மாக்ஸ் என்ன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

Han Gong-ju :

தென்கொரிய மக்கள் மறக்க நினைக்கும் மிர்யாங் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 41 பள்ளி மாணவர்கள் சேர்ந்து ஏறக்குறைய 11 மாத காலம் உடன் படித்த ஏராளமான பள்ளி மாணவிகளைத் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய பகீர் சம்பவம்தான் அந்த மிர்யாங் பயங்கரம். அந்தப் பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட கோங் ஜூ அதிலிருந்து மீள வேறு ஊருக்குச் செல்கிறாள். அங்கும் சிக்கல்கள் சுழன்று அடிக்க, எப்படித் தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இதன் வசூல் இருந்தது என ஒப்புக்கொள்கிறார்கள் விமர்சகர்கள்.

Lady Vengeance :

கொரியாவில் கொண்டாடப் படும் இயக்குநரான பார்க் சான் வூக்கின் தெறி ஹிட் படம். Sympathy for Mr. Vengeance, Oldboy ஆகிய பட வரிசையில் வெளியான மூன்றாவது பாகம். செய்யாத கொலைக்காக தண்டனை அனுபவித்த லீ க்யூம் ஜா என்ற பெண், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்க முடிவு செய்கிறாள். அதன் நீட்சிதான் மிச்சக்கதை. ரிலீஸுக்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்ததும். மூன்று பாகங்களில் கலெக்ஷனை அள்ளி அள்ளிக் கொட்டிய படம் இதுதான்.

Harmony :

முழுக்க முழுக்க ஸ்க்ரீனில் பெண்கள் மட்டுமே தெரியும் படம் இது. தன்னை வாட்டி வதைக்கும் கணவனைக் கொன்றுவிடுகிறாள் ஹோங் ஜியோங் ஹை. கர்ப்பமாய் இருக்கும் ஹோங்கை பத்தாண்டுகள் சிறையில் அடைக்கிறார்கள். அங்கேயே அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. விதிகளின்படி அது தத்துக் கொடுக்கப்படுகிறது. சிறையில் பிற கைதிகளுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு தொடங்க முயல்கிறாள் ஹோங். அதில் வென்றால் அவள் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். முடிவைப் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க மக்களே!

The Handmaiden :

இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் சினிமா. எரோடிக் த்ரில்லர் என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டும். ‘ஃபிங்கர்ஸ்மித்’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பல கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசான ஹிடோகோவை ஏமாற்றித் திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் ஒருவன். அதற்காக ஒரு பணிப்பெண்ணை அவளிடம் வேலைக்கு அனுப்புகிறான். அதன்பின் நடக்கும் திடீர் சடீர் திருப்பங்கள்தான் கதை. விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடித் தள்ளினார்கள்.

- நித்திஷ்