வாரத்துக்கு ஏழெட்டுப் படங்கள் ரிலீஸானாலும், தேறுவது என்னவோ மாசத்துக்கு நாலைஞ்சு படங்கள்தான். ஹிட் கொடுப்பது என்பது, ஹன்சிகாவிடம் இருந்து பெர்ஃபாமன்ஸை வரவைப்பதற்கு ஈடானது. அப்படி, 2016-ஆம் ஆண்டு ஹிட் கொடுத்த இயக்குநர்களின் அடுத்த படம் என்ன?

பொன்ராம் (ரஜினிமுருகன்)

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோக்கிறார் பொன்ராம். காமெடிக்கு சூரி, இசைக்கு டி.இமான், பாடலுக்கு யுகபாரதி, ஒளிப்பதிவுக்கு பாலசுப்ரமணியெம், எடிட்டிங்குக்கு விவேக் ஹர்ஷன் என அப்படியே பழைய கூட்டணி. ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். கதையைக் கேட்டதும், தன்னுடைய கேரக்டரின் முக்கியத்துவம் உணர்ந்து, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் சமந்தா.

சுந்தர்.சி (அரண்மனை-2)

பாகுபலியைப் போன்றே வரலாற்றுப் பின்னணியில், 350 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் சங்கமித்திரை படத்தை எடுத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிக்கோவைக்கு ரசூல் பூக்குட்டி, வி.எஃப்.எக்ஸுக்கு கமலக்கண்ணன் என பல ஜாம்பவான்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். முதலில், விஜய் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், ஒரு வருடத்துக்கு மேல் ஷூட்டிங் நடக்கும் என்பதால், அவருக்குப் பதிலாக ஜெயம் ரவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

வெற்றிமாறன் (விசாரணை)

தன்னுடைய ஃபேவரைட் ஹீரோவான தனுஷை வைத்து, `வடசென்னை' படத்தை எடுத்து வருகிறார். 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம், ஒருவழியாக இப்போது ஷூட்டிங்கில். தனுஷுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, அமலா பால் மற்றும் ஆண்ட்ரியா என இரண்டு ஹீரோயின்கள் எனக் கலக்கலாகக் களமிறங்கி இருக்கிறார் வெற்றிமாறன். அத்துடன், அவருடைய படங்களில் வழக்கமாக இடம்பெறும் டேனியல் பாலாஜி, கிஷோர், சமுத்திரக்கனி போன்றவர்களும் இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை, சுபாஷ்கரன் (லைக்கா), தனுஷ், வெற்றிமாறன் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சக்தி செளந்தர்ராஜன் – (மிருதன்)

‘தமிழின் முதல் ஸோம்பி படம்’ என்ற பெருமையுடன் வெளிவந்த ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ளார். ஸ்பேஸ் திரில்லர் படமான இதில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். ‘டிக் டிக் டிக்’ எனக் கடிகாரத்தின் ஒலியையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்.

சசி – (பிச்சைக்காரன்)

‘பிச்சைக்காரன்’ படத்துக்குப் பிறகு ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினை இயக்குவதாக இருந்தது. ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை. சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் என இரண்டு நாயகர்களை வைத்து இயக்கப்போகிறார். இப்படத்தை, ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அத்துடன், ‘பிச்சகாடு’ என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட ‘பிச்சைக்காரன்’, அக்கட பூமியிலும் வசூலைக் குவித்துள்ளது. இதனால், தெலுங்கில் முன்னணி ஹீரோவான வெங்கடேஷ், தன்னை வைத்து நேரடி தெலுங்குப் படம் ஒன்றை இயக்கித் தரவும் கேட்டுள்ளார்.

அட்லீ – (தெறி)

தெறி என்ற பிளாக் பஸ்டரைக் கொடுத்த அட்லீ, மறுபடியும் விஜய்யை இயக்குகிறார். ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பிரபல இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையும், முன்னணி கதையாசிரியருமான கே.வி.விஜயேந்திர பிரசாத், இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். கதையைப் படித்துப் பார்த்த விஜய், ரொம்பவே இம்ப்ரஸ் ஆகியுள்ளார் என்கிறார்கள். 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் குமார் – (24)

சூர்யாவை வைத்து `24' எனும் சயின்ஸ் பிக்ஷன் கதையை எடுத்தவர், அடுத்து டோலிவுட்டில் இயக்கப் போகிறார். நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி இந்தப் படத்தின் கதாநாயகன். பெயரிடப்படாத இப்படத்தில், ஒரு பக்க கதை படத்தின் ஹீரோயின் மேகா ஆகாஷ், அகில் ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜனவரி முதல் வாரம் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படத்தை, நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

எழில் – (வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்)

`வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற காமெடி ஹிட் கொடுத்தவர், மீண்டும் காமெடி யிலேயே களமிறங்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துவரும் இதில், ரெஜினா ஹீரோயின். சூரி, ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.

தரணிதரன் – (ஜாக்சன் துரை)

காமெடி பேய்ப் படத்தைத் தந்தவர், இந்த முறை சென்னையில் நடக்கும் கொலைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு கதை சொல்லப் போகிறார். நாளிதழ்களில் வெளியான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை அமைத்துள்ளாராம். கதைக்கு மழை முக்கியம் என்பதால், மழைக்காலத்தில் பெரும்பாலான காட்சிகளை எடுக்கின்றனர். மெட்ரோ சிரிஷ், இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமுத்திரக்கனி – (அப்பா)

சாதாரண மனிதனின் வலிகளைப் பேசும் அரசியல் படமாக உருவாகிறது ‘தொண்டன்’. சமுத்திரக்கனி, விக்ராந்த் இருவரும் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், சுனைனா நாயகியாக நடிக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரக்கனியும், அட்டண்டராக விக்ராந்தும் நடிக்கின்றனர். இவர்களுடன், சூரி மற்றும் தம்பி ராமையாவும் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

பா. இரஞ்சித் – (கபாலி)

மீண்டும் ரஜினிக்காக கதையைத் தயார் செய்து வருகிறார். முந்தைய படங்களைப் போல் கருத்து எதுவும் சொல்லாமல், ரஜினி ரசிகனுக்கான கமர்ஷியல் படமாக எடுக்கப் போகிறார் என்கிறார்கள். ஆனால், வாழைப்பழத்துக்குள் வலிக்காமல் ஊசி ஏற்றும் வித்தை தெரிந்தவர் பா. இரஞ்சித் என்பதால், இந்தப்

படத்திலும் சமூக அவலங்களுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்கலாம். நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சீனு ராமசாமி - (தர்மதுரை)

மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களாக எடுப்பவர், அடுத்தும் அதே கதைக்களத்தையே எடுக்க இருக்கிறார். 2017ஆம் ஆண்டில் இரண்டு படங்களை இயக்கிவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். சி.வி.குமார், இசக்கி சுப்பையா,

தினேஷ் கார்த்திக் என மூன்று தயாரிப்பாளர்கள் இவருடைய படத்தைத் தயாரிக்க ரெடியாக இருக்கிறார்கள். ‘சம்போ மகாதேவா’, ‘மனிதன் என்பவன்’, ‘மாமனிதன்’ ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன.

சுசீந்திரன் – (மாவீரன் கிட்டு)

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் படமான இதில், சுந்தீப் கிஷன், விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். அவர்களுடன், ஹரீஸ் உத்தமன், சூரி இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

- சி.காவேரி மாணிக்கம்