தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதே ஃபார்முலா படங்களை அடுத்தடுத்து இறக்கி நம்மை சோதித்துப் பார்ப்பார்கள். ஆகச்சிறந்த ஒரு உதாரணம், பேய் சீசன். அதே போல் ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அதே டீம் இணைந்து இன்னொரு படம் எடுப்பார்கள். அந்தப் படம் முந்தைய படத்தைப் போல் ஹிட் அடிக்காமலும் போகும். அப்படி வந்த சில படங்கள் இதோ...

பாண்டியநாடு - பாயும்புலி

விஷால், இமான், சுசீந்திரன் இணைந்த முதல் படம் ‘பாண்டியநாடு’. அந்தப் படம் வெற்றியடைந்த பிறகு அதே கூட்டணி லொக்கேஷனைக்கூட மாற்றாமல் எடுத்த படம்தான் ‘பாயும்புலி’. சமயத்துல இரண்டு படங்களின் காட்சிகளையும் பார்க்கும் போது ‘இது பாண்டியநாடா? பாயும்புலியா?’னு நமக்கே கன்ஃபியூஷன் வரும்னா பார்த்துக்கோங்களேன்...

முத்து - படையப்பா - லிங்கா

ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து 1995-ஆம் ஆண்டு ‘முத்து’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தனர். அடுத்தாக இணைந்த இந்த ஜோடி 1999-ஆம் ஆண்டு ‘படையப்பா’ எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டையும் கொடுத்தனர். இதே ஜோடி 2014-ஆம் ஆண்டு மறுபடியும் இணைந்த படம் ‘லிங்கா’. என்னாச்சுனு உங்களுக்குத் தெரியாதா என்ன?

விண்ணைத்தாண்டி வருவாயா - அச்சம் என்பது மடமையடா

சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் இணைந்து பல இளைஞர்களைக் கிறுக்கு பிடிக்க வைத்தார்கள் என்றால் அது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில்தான். அடுத்தாகவும் இதே கூட்டணி இணைந்தது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தைப் போலவே இந்தப் படத்தையும் வெற்றிப் படமாக்கணும் எனப் படத்தின் பெயரையும் பெருசாகவே வைத்தார் கௌதம். சூப்பரா, சுமாரானு சிம்பு ரசிகர்களைத் தவிர, யாருகிட்டே வேணும்னாலும் கேளுங்க!

வேலையில்லா பட்டதாரி - தங்கமகன்

பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்க்கும் அளவுக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பல பொறியியல் மாணவர்களுக்குப் பிடித்துப்போனது. ‘யாரடா கிண்டல் பண்றீங்க’, ‘இன்ஜினியரிங்டா...’, ‘வி.ஜ.பி-டா...’ என்று பொறியியல் மாணவர்கள் கெத்து காட்டி சுத்தினார்கள். அதே காம்போ அடுத்ததாக ‘தங்கமகன்’ படத்தை எடுத்த பின்னர் இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட்ஸ் கப்சிப்.

தெய்வத்திருமகள் - தாண்டவம்

விக்ரமின் வித்தியாசமான நடிப்பால் அனைவராலும் பாராட்டப்பட்ட படம் ‘தெய்வத்திருமகள்’. அந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம், இயக்குநர் விஜய்யோடு இரண்டாவதாக இணைந்த படம் ‘தாண்டவம்’. பாடல்கள் ஜொலித்தாலும், படம் தாண்டவமாடவில்லை!

வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்!

காதலுக்கு மரியாதை - கண்ணுக்குள் நிலவு

இசைஞானி இளையராஜா, விஜய், ஷாலினி, மலையாள இயக்குநர் ஃபாசில் இணைந்து தொடாமலேயே எப்படி காதலிக்கலாம் என்பதைக் ‘காதலுக்கு மரியாதை’ மூலம் 1997-ஆம் ஆண்டு நமக்குக் காட்டினார்கள். அதே போல் மற்றுமொரு காவியத்தைக் கொடுக்கப் போகிறோம் என்று 2000-ஆம் ஆண்டில் இவர்கள் இணைந்த படம் ‘கண்ணுக்குள் நிலவு’. இரண்டு படத்திலும் கதை வேறு என்றாலும், பாடல்களை ஒரே மாதிரி கொடுத்திருப்பார் இசைஞானி.

அயன் - மாற்றான்

சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ், கே.வி.ஆனந்த கூட்டணியில் அதிரி புதிரி ஹிட்டடித்த ‘அயன்’ படத்துக்குப் பிறகு அவர்கள் இணைந்து எடுத்த படம் ‘மாற்றான்’. அந்தப் படத்தைப் பத்தி என் வாயால எப்படிச் சொல்லுவேன்?

கில்லி - குருவி

செமி ஃபைனல் சுற்றில் தோற்றாலும் ஃபைனல் சுற்றில் வேலு அண்ட் டீம் மிராக்கல் வெற்றி பெற்றதுபோல ‘கில்லி’ படமும் மாஸ் ஹிட். இதே கூட்டணி நான்கு வருடங்களுக்குப் பிறகு கை கோத்த படம் ‘குருவி’. இந்தப் படத்தைப் பற்றியும் நாங்க சொல்லித் தான் உங்களுக்குத் தெரியணும்னு கிடையாது. அது படம் இல்லை... பாடம் பாஸ்!

பூவெல்லாம் உன் வாசம் - ராஜா

‘துள்ளாத மனமும் துள்ளும்’ வெற்றிப் படத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த இயக்குநர் எழில், அஜித்தை வைத்து ‘பூவெல்லாம் உன் வாசம்’ எடுத்தார். அடுத்து இதே கூட்டணியில் வெளிவந்த படம் ‘ராஜா’. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் எழில் மூன்று வருடங்கள் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்பது நோட் பண்ணவேண்டிய பாயின்ட் மக்களே!

- மா.பாண்டியராஜன்