இந்தியாவில் இந்தி சினிமாக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டது தமிழ் சினிமா. தங்களுக்கு விருப்பமான ஹீரோக்களின் பவரை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர் நம் நெட்டிசன்ஸ். நன்கு நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களைக் காட்டிலும், மாஸ் ஹீரோக்களுக்கே ரசிகர் பட்டாளம் நீண்டு வருகிறது. அப்படி நம் ஹீரோக்கள் எடுத்த மாஸ் அவதாரங்களே இக்கட்டுரை. சாது மிரண்டால் வீடு தாங்குமா? நிச்சயம் தாங்காதென நிரூபித்துள்ளன நம் ஹீரோக்களின் மாஸ் ட்ரான்ஸ்ஃபார்மேஷன்கள்!

பாட்ஷா

ட்ரான்ஸ்ஃபார்மேஷன்களின் முன்னோடி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆட்டோ மாணிக்கத்தை விட்டு மும்பை கடத்தல் மன்னன் பாட்ஷாவாக கூடு விட்டுக் கூடு பாயும் காட்சி. அமைதியான ஆட்டோ டிரைவராகவும், அம்மாவிற்கு நல்ல பையனாகவும், தம்பி தங்கைகளின் பாசமுள்ள அண்ணனாகவும் காட்சி தரும் சூப்பர்ஸ்டார் கட்டி வெச்சு உரித்தாலும் `பச்சக்குழந்தை' போல சிரிப்பார். பொறுமை இழந்து பழைய பாட்ஷாவாக மாறும் அந்த இன்டெர்வெல் காட்சி செம மாஸ். நாடி, நரம்பு என அனைத்திலும் சண்டை வெறி ஊறிப்போன ஒருத்தரால்தான் இப்படி அடிக்க முடியுமென மறுநாள் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவரும். `நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' பஞ்ச் ஒன்றே போதுமே தலைவா!

விஸ்வரூபம்

ரஜினிக்கு ஒண்ணு இருந்தா கமலுக்கும் ஒண்ணு இருக்கணுமே ஜி! 2013 வரை கமல் அத்தகைய ஆக்ஷன் அவதாரம் எடுக்கவில்லை. ஆனால் 2013ல் நம் `விஸ்வரூபம்' எடுத்தார். ஆரம்பம் முதல் விஸ்வநாத் என்ற பெயரில் டான்ஸ் மாஸ்டராக நளினம் காட்டும் கமல், தன்னையும் தன் மனைவியையும் கொல்லப் போகும் தருவாயில், `யார் என்று தெரிகிறதா, இவன் தீ என்று புரிகிறதா?' என செம காட்டுக் காட்டுவார் பாருங்க. செம ட்ரான்ஸ்ஃபார்மேஷன்!

வேதாளம்

சமீபத்தில் வந்த ஆன் தி ஸ்பாட் ட்ரான்ஸ்ஃபார் மேஷன். லட்சுமி மேனனின் அண்ணனாக, குழந்தை முகத்தோடு டாக்ஸி டிரைவராக அஜித் `சாந்தமுலேகா சவுக்கியமுலேது' என அமைதியாக வாழ்ந்து வருவார். இடைவேளைக்கு முன் அஜித், சிரித்துக்கொண்டே ராயபுரம் தாதாவாக மாறி வில்லன்களைப் போட்டுத் தள்ளும் காட்சி தெறி. அவர் பேசிய, `தெறிக்க விடலாமா?' வசனம் டீஸரில் தொடங்கி படம் வெளியாகும் வரை வைரலானது வரலாறு!

தெறி

அட்லீயின் சத்ரியன் 2.0 தான் இது. கேரளாவில் பேக்கரி நடத்தும் ஜோசப் குருவிலாவாக நடிக்கும் பழைய டெபுடி கமிஷனர் விஜயகுமார்தான் விஜய் என்பதைச் சொல்லும் சீன். எமி ஜாக்சன் ஒரு பக்கம் அவர் மீது சந்தேகம் கொண்டு இன்டர்நெட்டில் அவரது பூர்விகத்தைக் கண்டுபிடிக்க, ‘டூ லேட் பேபி’ என வில்லன்களை நொறுக்கி தெறி பேபியாகி நிற்பார் இளைய தளபதி.

அஞ்சான்

சூர்யாவின் தோல்விப் படங்களில் ஒன்று. அவரது குட் பாய் இமேஜை மாற்றிய லிங்குசாமியின் படைப்பு. மாஸுக்குக் குறைவில்லாமல் சூர்யா கெட்-அப் செமையாக இருந்த படம். மும்பை டான் ராஜு பாய் இறந்த பிறகு, அவரைத் தேடிவரும் அவரது தம்பி கிருஷ்ணா, `அவர் சாகவில்லை நான்தான் ராஜு பாய்!' என தனக்கே உண்டான பாணியில் கூறும் காட்சி. சூர்யாவின் ஆக்ஷன் அட்ராசிட்டி!

வல்லவன்

`அடியும் வேண்டாம் மிதியும் வேண்டாம், பேச்சுலேயே ட்ரான்ஸ்ஃபார்மேஷன் காட்றேன் நானு!' என சிம்பு இறங்கின சீன். ரீமாசென் நம்ம சிம்புவை டார்ச்சர் செய்ய, அவர் காலில் விழுந்து சிம்பு கெஞ்சுவார். அதையே சாதகமாக்கி மிரட்டி எடுப்பார் ரீமா. ஒரு கட்டத்தில் ஓவராக ஆட்டம் காட்ட... சிம்பு மிஸ்ஸிங். திரும்பிப் பார்க்கும் ஹீரோயின் முன், கெத்தாக உட்கார்ந்து சிம்பு, மாஸ் காட்டுவார். படத்தின் திருப்புமுனையே அதுதான். ``லெப்ட்ல ஒண்ணு விட்டா, ரைட்ல திரும்பிரும்!”னு மாஸா கிளம்பிப்போகும் சீன் செம!

அமைதிப்படை

`எனக்கு எதுவுமே வேணாம்... மாஸ் காட்ட என் பாடி லாங்குவேஜ் போதும்'னு சத்யராஜ் அரசியல் பிரவேசம் செய்த காட்சி ஆஹா ரகம். தேர்தல் முடிவு ஓட்டு எண்ணிக்கை அவருக்குக் கூடக் கூட நாற்காலியில் அழுத்தமாக உட்காரும் காட்சி கிளாசிக்! ஜெயித்த பிறகு தூக்கி விட்ட மணிவண்ணனையே `கால் படுதுனா தள்ளி நிக்க வேண்டியதுதானே!' எனச் சொல்லும் இடம் நக்கலோ நக்கல்.

மேன்மேலும் இந்த லிஸ்ட்டில் நம் மற்ற ஹீரோக்களும் இடம்பெற வாழ்த்துகள்!

- இதிகாஷ் நடராஜன்