Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

டிகர்கள் பெரும்பாலும் வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு செல்வது வழக்கம். ஆனால், பண்பலையை நோக்கித் தன் பயணத்தைத் திருப்பியிருக்கிறார் கெளதமி. மலையாளத்தில் தொடர் படங்கள், கமலுடனான பிரிவு, மோடியை சந்தித்தது என்று லைம் லைட்டுக்குள் இருக்கும் கெளதமி, தினமும் மூன்று மணி நேரம் ரேடியோ சிட்டி எஃப். எம்-மில் ‘ஆர்ஜே’வாக வாய்ஸ் கொடுக்க இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஸ்ருதிஹாசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜித்தின் 57-வது படத்துக்கான படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்தது. அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்கேரியாவில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் படுரகசியமாக வைத்திருந்தது படக்குழு. ஆனாலும், எப்படியோ சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவதால் அப்செட்டில் இருக்கிறார்கள் படக்குழுவினர். லீக் அவுட்டான புகைப்படங்களே படத்தின் கதையை வெளிப்படுத்திவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு!

வைரமுத்து - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ 100 நாட்களைக் கடந்து ஹிட் அடித்தது. மீண்டும் இவர்களது கூட்டணி அமீர் படத்தில் இணைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக இயக்கத்திலிருந்து விலகியிருந்த அமீர் தற்போது இயக்கிவரும் படம், ‘சந்தனத் தேவன்’. இந்தப் படத்துக்காக வைரமுத்து மூன்று பாடல்களை எழுதியுள்ளார். ஆர்யாவும், அவருடைய தம்பி சத்யாவும் நடிக்கிறார்கள். நாயகியாக அதிதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாகக்கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது.

‘கஜினி’ கதை முதலில் சொல்லப்பட்டது விக்ரமிடம்தான். பின்னர் சூர்யா நடித்து ஹிட் ஆனது. அப்படியே உல்டாவாக சூர்யாவுக்கு முதலில் சொல்லப்பட்ட ‘துருவநட்சத்திரம்’ படத்தில் இப்போது விக்ரம் நடித்துவருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வைரல் ஆகியிருக்கிறது. இந்தப் படத்துக்காக இயக்குநர் கெளதம் மேனன், மலையாளக் கரையோரத்திலிருந்து நாயகியை அழைத்துவந்திருக்கிறார். நிவின்பாலியுடன் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ படத்தில் நடித்த அனு இம்மானுவேல்தான் அவர்.

மியாவ் பதில்

‘வடசென்னை’ படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல் உண்மையா?


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. பல வருடங்களாகப் பேசப்பட்டு இப்போதுதான் முதல் ஷெட்யூல் முடிந்திருக்கிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழு தயாராகிவருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்புக்காக நான்கு முறை கால்ஷீட்டை மாற்றிக்கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால், இவரின் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கலாம். எனவே, இந்தப் படத்தில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தயாரிப்பு தரப்பில் பேசிவருவதால் முடிவுகளும் மாறலாம்.