Published:Updated:

`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்!

`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்!
`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்!

`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்!

திருநங்கைகள் குறித்த தவறான பதிவுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வழங்கப்பட்ட பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில்  ``இரு வேறுபட்டுத் தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! அப்போ, 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!" எனப் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவோடு இரண்டு திருநங்கைகளின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். திருநங்கைகளை இணைத்து கருத்து பதிவிட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். மேலும் நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஒருபடி மேலாகக் கஸ்தூரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த விவகாரம் பெரிதாகவே, நடிகை கஸ்தூரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,  ``நேற்று முன்தினம் வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்து ரொம்ப தவறான ட்வீட் செய்துவிட்டேன். 

அதனால் நான் பெரிதும் மதிக்கக்கூடிய என்னுடைய சகோதர, சகோதரிகள் மனசு வேதனைப்படுகிறது எனத் தெரிந்தவுடனே அந்தப் பதிவை நீக்கி மன்னிப்பு கேட்டுவிட்டேன். நேரடியாகவும் எனக்குத் தெரிந்த திருநங்கைகளிடம் வருத்தத்தையும், விளக்கத்தையும் தெரிவித்துவிட்டேன். அவர்களும் எனது செயலை மன்னித்துவிட்டார்கள். ஆனால் ரொம்ப சீக்கிரமாக முடிந்துபோகக் கூடிய இந்த விஷயம், நீக்கப்பட்ட எனது பதிவை சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பரப்புவதால் இது உண்மைக்குப் புறம்பான சர்ச்சையாக மாறிவருகிறது. ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பரப்புவதால் மீண்டும் மீண்டும் திருநங்கைகளை காயப்படுத்துகிறார்கள். இது என்னுடைய மனதையும் காயப்படுத்துகிறது. நானும் மனுஷி தான். தவறு செய்யாமல் யாரும் இருந்ததில்லை. நானும் தவறு செய்வேன். தவறு செய்யும்போது என்னைக் கேள்வி கேளுங்கள். தற்போது நான் செய்த செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள்" எனக் கூறியுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு