Published:Updated:

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

Published:Updated:
விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்
விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

உண்மையிலேயே தெறி பேபி!

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நைனிகா

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்மீனாவுக்கு இது டன் கணக்கில் ஹேப்பி மொமன்ட்! ‘ரஜினி அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க..’ என்று மீனா தேடிய காட்சியே இன்னும் கண்ணில் நிற்க, விகடன் மேடையில் அதே ரஜினி, மீனாவின் மகளுக்கு விருது வழங்கினார். பூரிப்பில் இருக்கிறார் மீனா!

‘‘நான் ரஜினி சார் படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன், இப்போ அவர் கையாலயே என் மகளுக்கு விருது கிடைத்தது  காலத்துக்கும் பெருமை தரும் விஷயம்!

ஸ்டேஜ்ல ஏறினதும் நைனிகா என்ன சொல்வாளோனு யோசிச்சேன். ‘எல்லாருக்கும் ஹேப்பி பொங்கல்’னு அவள் சொன்னதை நான் எதிர்பார்க்கல! பொதுவா நைனிகா ஸ்கூல்ல பரிசு வாங்கும்போது க்ளாஸ்ல பாராட்டி என்கரேஜ் பண்ணுவாங்க. அதுமாதிரி இந்த விகடன் அவார்டை கைல வெச்சுக்கிட்டு அவ க்ளாஸ்ல நின்னதும் ஸ்கூலுக்கே கேட்கும்படியா செம க்ளாப்ஸ்! வீட்டுக்கு வந்ததும் ‘அம்மா... எங்க டீச்சர், க்ளாஸ்மேட்ஸ், என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது’னு சொல்லி, மேடம் செம ஹேப்பி!

`விஜய் சார் எவ்வளவு பிடிக்கும்'னு கேட்டா, ‘ஸில்லியன் அளவுக்குப் பிடிக்கும்’னு கைய அகலமா நீட்டிச் சொல்லுவா. அவார்ட் ஃபங்ஷன்லகூட விஜய் சார் வந்ததும் குடுகுடுனு ஓடிப்போய் பேசினா. ‘இப்போ நான் உண்மையாலுமே தெறி பேபி ஆகிட்டேன்ல’னு வீட்ல துள்ளிக் குதிச்சு ஒரே ஆட்டம்தான்! நடிச்ச முதல் படத்துக்கே அவார்டு கிடைக்கறது சிலருக்குத்தான் அமையும். அது என் மகளுக்கு அமைஞ்சிருக்கு...'' என்று குதூகலித்தார் மீனா.

`ரஜினி சார் என் மகளுக்கு விருது கொடுத்தா சந்தோஷப்படுவேன்' என்று மீனா சொல்ல, விகடன் சார்பில் ரஜினியிடம் அந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டார் சூப்பர் ஸ்டார்.

‘`அதனாலதானே அவர் அந்த இடத்தில் இருக்கிறார்” என்று நெகிழும் மீனா, விருது விழாவின் சிறப்புகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். பேசும்போது அம்மாவிடம் எதுவோ கேட்டுக்கொண்டே இருந்தாள் நைனிகா. பேபி, நீ உண்மையிலேயே தெறி பேபி!

- பா.ஜான்ஸன்

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

``இன்னும் நிறைய உழைப்பேன்!''

சிறந்த நடிகை - ரித்திகா சிங்

“முதல் படத்திலேயே தேசிய விருது... அந்தப் பிரமிப்பு அகல்வதற்குள் ஆனந்த விகடனின் சிறந்த நடிகைக்கான விருது... இதையெல்லாம் கனவில்கூட நினைத்ததில்லை. ‘இறுதிச்சுற்று’ படம் ரிலீஸானபோது ‘சிறந்த புதுமுக நடிகைக்கான விருது உனக்குக் கிடைக்கும்’ என நிறையபேர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், சிறந்த நடிகைக்கான விருது என்பது, இந்த வயதில் என்னைப்போன்ற புதுமுக நடிகைக்குக் கிடைத்ததை இன்னும்கூட நிஜம் என என்னால் நம்ப முடியவில்லை!

விகடன் விருது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்... காரணம் ரஜினி சார். சிறந்த நடிகருக்கான விருதை அவர் பெற்ற அதே மேடையில், எனக்கு சிறந்த நடிகைக்கான விருது... வேறென்ன வேண்டும்!

உண்மையான நபர்களால் உண்மையான விஷயங்களை மட்டுமே பகிர்கிற பத்திரிகை விகடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியொரு நிறுவனத்தில் இருந்து விருது வென்றது என் வாழ்க்கையின் பெருமையான தருணங்களில் ஒன்று.

இந்த விழாவில் ‘இறுதிச்சுற்று’ குழுவினருக்கு நிறைய விருதுகள் கிடைத்தன. ‘இறுதிச்சுற்று’ டீம் மொத்தமும் விழாவுக்கு வந்திருந்தது. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுதா மற்றும் குழுவினரின் முன்னிலையில் விருது வாங்கியது இன்னொரு சிறப்பு. எனக்காக அவ்வளவு நேரம் காத்திருந்து, கைதட்டி உற்சாகப் படுத்தினார்கள்.

‘நீ மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி’ என சிலர் என்னிடம் சொன்னார்கள். எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கிடையாது. 20 சதவிகிதம் அதிர்ஷ்டம் என்றால் 80 சதவிகிதம் உழைப்பு மற்றும் திறமையால் வந்தது என்றே நம்புகிறேன். விகடன் சொல்வதைப்போல இது திறமைக்கான மரியாதை!

தொடர்ச்சியான விருதுகள் என்னை மகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்திருந்தாலும், அவை எந்த வகையிலும் என் இயல்பை மாற்றிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன். இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற கூடுதல் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறேன். என் திறமையை அங்கீகரித்து விருது கொடுத்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள். நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இன்னும் நிறைய உழைப்பேன். மீண்டும் மீண்டும் என் நன்றிகள்!''

- ஆர்.வைதேகி

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

மறக்கவே மாட்டேன்!

சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா தேவரையா

``என் சினிமா பயணத்தில் கிடைச்ச முதல் அவார்ட் இது... ரொம்ப்ப்ப ஹேப்பியா இருக்கேன் தெரியுமா!’’

- பூரிப்பில் கன்னங்கள் சிவக்கின்றன பூஜாவுக்கு.

`‘ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா நான் நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். பல நாடுகளுக்கு ட்ரிப் அடிச்சிருக்கேன். ஆனால், சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சபிறகு, என் திறமைக்குக் கிடைத்த முதல் மரியாதை விகடன் தந்த விருதுதான். என்னோட வாழ்க்கையில் மிகப்பெரிய ஹானர் இது’’ என்று மீண்டும் மீண்டும் குதூகலிக்கிறார் பூஜா.

`‘ ‘உங்களுக்கு விகடன் விருது அறிவிக்கப்பட்டிருக்கு’ன்னு போன் வந்ததும் என்னால நம்பவே முடியலை. ஃப்ரெண்ட்ஸ் யாரோ கலாய்க்கறாங்கன்னுதான் முதலில் நினைச்சேன். அப்புறம்தான், ‘ஹே... பூஜா இது பொய்யில்லை, உண்மை’னு உள்மனசு சொல்லுச்சு. விகடனில் போட்டோ வந்ததும் அப்படியே ஆகாயத்தில் பறக்கிற ஃபீல் எனக்கு. உடனே அப்பா, அம்மா, நண்பர்கள்னு ஒருத்தர்விடாம போன் பண்ணிச் சொல்லிட்டேன். அவசர வேலை காரணமா விருது விழாவுக்கு என் பேரண்ட்ஸ் வரமுடியலைங்கறதுல வருத்தம்தான். இருந்தாலும், பிரமாண்டமான மேடையில் முதன்முதலில் விருது விழாவை விகடன் நடத்தியபோது, அதில் நானும் விருது வாங்கியிருக்கேன் அப்படிங்கிற அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மறக்காது.

இந்த விருதுக்கு துணையா இருந்த விகடன், என்னோட இயக்குநர், `குற்றமே தண்டனை’ படக்குழுவினர், அப்பா, அம்மா, நண்பர்கள் எல்லாருக்கும் தாங்க்ஸ்னு ஒரு வார்த்தையில் முடிச்சுட முடியாது. சினிமாவில் சின்னப்பொண்ணு நான். இருந்தாலும் என்னையும் மதிச்சு, மரியாதை செய்திருக்கு விகடன். ஏற்கெனவே என்னோட ஸ்போர்ட்ஸ், தியேட்டர் ஃபீல்ட் என்ட்ரியையும் வெளியுலகத்துக்குக் காட்டியது விகடன்... இப்போ என்னை ஒரு சினிமா நடிகையாகவும் அடையாளம் காட்டியிருக்கு. ஹேட்ஸ் ஆஃப் யூ விகடன். இன்னும் நிறைய நிறைய இளம் கலைஞர்கள் விகடனால் வெளியில் தெரியவருவாங்க என்கிறதில் எனக்கு சந்தேகமே இல்லை!’’ - நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் பூஜா தேவரையா.

- பா.விஜயலட்சுமி

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

தமிழ்ச் சமூகத்தின் அடையாளம்!

சிறந்த நகைச்சுவை நடிகை - வினோதினி

“ரொம்ப காலமா தொடர்ந்து படிக்கிற ஒரே இதழ் விகடன், எங்க குடும்பத்தில் ஒன்றாகவே மாறிவிட்டது. முக்கியமா விமர்சனக்குழு மதிப்பெண் பார்த்தபிறகுதான் படத்துக்குப் போறது எங்கள் வழக்கம். விகடன் வாசகரா இருந்த எனக்கு, இப்போ விகடன் சினிமா விருது கிடைச்சிருக்கிறது மிகப்பெரிய அங்கீகாரம்!

ஐந்து வருஷங்களாக சினிமாவில் இருக்கேன். இதுவரை, எந்த ஒரு சினிமா விருது விழாவுக்கும் அழைப்பிதழ்கூட வந்ததில்லை. முதல்முறையா விகடன் கையாலதான் விருது வாங்குறேன். என்னோட வயதுக்கு, அத்திப்பூ பூத்தமாதிரிதான் நல்ல ரோல்கள் வருது. அதையும் விகடன் கண்டெடுத்துப் பாராட்டுவது, எங்களை மாதிரியான கலைஞர்களுக்கு உத்வேகம் தரும். அதுவும் பெரிய நடிகர்கள் மத்தியில் விருது வாங்குவது, மிகப்பெரிய ஆசீர்வாதம். நிறைய கலைஞர்களை நேரில் சந்திக்கவும், பேசவும் வாய்ப்பா இருந்தது மகிழ்ச்சி. குறிப்பா, எஸ்.எஸ்.வாசன் பற்றிய ஆவணப்படம் மிகப்பெரிய ஹைலைட். தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே இருக்கும் விகடனின் ஆரம்பப்புள்ளியை தெரிந்துகொள்ள அவசியம் பார்க்கவேண்டிய படம் இது.

விருது வாங்கிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிவந்து, நேரா ரஜினி சாரின் காலைத்தொட்டு கும்பிட்டேன். ‘மகிழ்ச்சி’னு சொல்வார்னு எதிர்பார்த்தேன். அவரோ ஸ்டைலா `வாழ்த்துகள்’ சொன்னார். அவரோட வாழ்த்துகள் கிடைச்சதே மிகப்பெரிய விருதாகத்தான் இருந்தது. அதுமட்டுமல்ல... விஜய் சாரும் பார்த்து `சந்தோஷம்’னு சொல்லி மகிழ்ந்தது ரொம்பவே நெகிழ்ச்சியான தருணம். மதன் கார்க்கியும் `ஆர்ஜே' பாலாஜியும் யாருமே எதிர்பார்க்காத இன்ட்ரஸ்டிங் காம்போ!

முன்னாடியெல்லாம் விகடன் விருதை வருடாவருடம் யாருக்குக் கொடுத்திருக்காங்கன்னு ஆர்வமா பார்ப்பேன். இப்போ, என்னோட புகைப்படத்தையும் பலர் பத்திரிகையில் பார்க்குறாங்கன்னு நினைக்கிறதே எவ்ளோ சந்தோஷம்!

நாங்க ஷூட்டிங், டப்பிங், சம்பளம் சரியா வந்துருமா... இப்படித்தான் ஒவ்வொரு நாளும் யோசிச்சுக்கிட்டே இருப்போம். இதற்கு நடுவில் இந்த விருது, ஒவ்வொரு கலைஞனுக்குமே உற்சாகத்தைக் கொடுக்கும். மகிழ்ச்சி!’’ என்று பெருமழையெனப் பொழிகிறார் வினோதினி.

- பி.எஸ்.முத்து

விகடன் சினிமா விருதுகள் விழாவின் வெற்றிப் பெண்கள்

டபுள் சர்ப்ரைஸ்!

சிறந்த வில்லி - விஜி சந்திரசேகர்

“நான் நடிச்ச படத்தோட விமர்சனம் `ஆனந்த விகடன்'ல வந்தாலே அவ்ளோ குஷியாவேன். அவங்க கையால விருதே கிடைக்குதுன்னா எவ்ளோ சந்தோஷம்னு சொல்லணுமா?” - டன் கணக்கில் உற்சாகம் கொப்புளிக்கப் பேசுகிறார் விஜி சந்திரசேகர்!

“அமெரிக்காவுல இருந்தேன். விகடன்ல இருந்து மெசேஜ் வந்தது. அப்படி என்ன அவசரம்னு கேட்டேன். சிறந்த வில்லி விருதுன்னாங்க. நெகட்டிவ் ரோலுக்கு விருது கிடைக்கும்னு நெனைச்சே பார்க்கலை. `வெற்றிவேல்’ விமர்சனத்துல என் பெயரைப் பார்த்ததுக்கே சந்தோஷப்பட்டவ நான். இப்ப அதுக்கு அவார்ட்!”

கணவர் கேப்டன் சந்திரசேகர் பைலட். சுரக்‌ஷா, லவ்லின் என்று இரண்டு மகள்கள். சுரக்‌ஷா எம்.பி.பி.எஸ் முடித்து மேற்படிப்பில் இருக்கிறார். மனவியல் மருத்துவம் பயில்கிற லவ்லின், விரைவில் வெள்ளித்திரையில் அறிமுகமாகப்போகிறார் என்பது சிறப்புத் தகவல்!

“ `தில்லு முல்லு’ படத்துல நடிக்கறப்ப எனக்கு 14 வயசு. ரஜினி சார் என்னைப் பார்க்கறப்ப எல்லாம், `படிப்பை விட்டுடக்கூடாது. படிக்கணும்... படிக்கணும்’னு சொல்லிட்டே இருப்பார். அதேபோல, எனக்கு எல்லாமே அந்தந்த வயசுல நடந்தது. இருபதுகள்ல படிப்பு, கல்யாணத்தை முடிச்சேன். முப்பதுகள்ல குழந்தைகள், அவங்க வளர்ப்பு. இப்ப நாற்பதுகள்ல இப்படி நல்ல நல்ல வாய்ப்புகள் நிறைந்த கரியர். விஜி ஹேப்பி!” என்றார்.

“விகடன் விருதுகள் விழா பற்றி சொல்லியே ஆகணும். அமெரிக்கால இருந்து 14-ம் தேதிதான் வர்றதா இருந்தது. டிக்கெட்டை கேன்சல் பண்ணி, முன்கூட்டி பதிவு பண்ண செலவாகும்னாலும் பண்ணினேன். சீட் கன்ஃபர்ம் ஆகறவரைக்கும் ப்ரே பண்ணிட்டே இருந்தேன். ரஜினி சார்கிட்ட பேசினது டபுள் சர்ப்ரைஸ். ‘என்னைப் படிக்கணும்... படிக்கணும்னு சொல்வீங்கள்ல... இப்போ என் ரெண்டு பொண்ணுங்களையும் டாக்டருக்குப் படிக்க வெச்சிருக்கேன்’னு சொன்னதும், அவர் முகத்துல அவ்ளோ பெருமை. ரஜினி சார்... ரஜினி சார்தான்!

அந்த விகடன் தாத்தா என் கைல விருதா கிடைச்ச தருணம் ரொம்பவே ஸ்பெஷனாலது. எவ்ளோ விருது கிடைச்சாலும், க்யூட்டான விருதுன்னா விகடன் விருதுதான். சிரிக்கும் புத்தர் மாதிரி விகடன் தாத்தா சிரிப்பு அவ்ளோ க்யூட். ஐ லவ் இட்!” - சொல்லும்போதே முகம் முழுக்கப் புன்னகை மலர்கிறது விஜி சந்திரசேகருக்கு!

- பரிசல் கிருஷ்ணா