Published:Updated:

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

Published:Updated:
அக்கட தேசத்து அழகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அக்கட தேசத்து அழகிகள்!
அக்கட தேசத்து அழகிகள்!

சாண்டல்வுட்

டெய்சி போபண்ணா

கர்நாடகாவின் குடகில் உதித்த நிலா. கலைக்கல்லூரியில் படித்து முடித்த கையோடு விளம்பர உலகில் நுழைய முயற்சித்தார். திடீரென கேமரா ஆசை தலைதூக்க, நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் மூலம் கிடைத்தது சினிமா வாய்ப்பு. முதல் படமான ‘பிம்பா’, திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்தது. அப்போது தொடங்கிய பயணம் இன்றுவரை பிஸி. எக்கச்சக்க கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். உபேந்திரா, கமல்ஹாசன், அக்‌ஷய் குமார் என ஸ்டார்ஸோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். விளம்பரங்களிலும் ரொம்ப பிஸி. நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் சிரித்தபடி வந்து போகிறார். #லவ்லி

அக்கட தேசத்து அழகிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மல்லுவுட்

ஐஸ்வர்யா தேவன்

பெங்களூரில் பிறந்தவர் என்றாலும் கடவுளின் தேசம்தான் பூர்வீகம். ஷாஜி கைலாஸ் மூலமாக மலையாளத்தில் ‘சிம்மாசனம்’ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிருத்விராஜுக்கு ஜோடி. அதன்பின் ‘ஹிட்லிஸ்ட்’, ‘கர்மயோதா’ போன்ற படங்களில் நடித்தவர், தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் சின்ன ரோலில் நடித்தார். மீண்டும் மலையாள வாசம். அதிர்ஷ்டம் அள்ளி அடிக்க, ‘அனேகன்’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவராய் நடித்தார். இங்கிருந்து கன்னடம், அங்கிருந்து பாலிவுட் என பறந்து பறந்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தேவன்.#ஐஸ் பேபி!

அக்கட தேசத்து அழகிகள்!

டோலிவுட்

பானு ஸ்ரீ மேஹ்ரா

பஞ்சாப்பில் பிறந்த அமுல் பேபி. டேராடூனில் ஸ்கூல் முடித்த கையோடு மும்பையில் காலேஜ். பின்னர் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அல்லு அர்ஜுனின் ‘வருடு’ இவரின் முதல் படம். தொடர்ந்து தமிழில் நடித்த ‘உதயன்’ படமும் சொதப்ப, லைம்லைட்டுக்கு வரப் போராடினார். தெலுங்குப் படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியவரின் செகண்ட் இன்னிங்ஸ் பஞ்சாபியில் தொடங்கியது. அங்கே மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இப்போது கன்னடத்திலும் கால் பதித்திருக்கிறார். #கோதுமைக் களஞ்சியம்!

- ஜொள்ளுபாய்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism