Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்

சினிமால்

சினிமால்

* அமீர் இயக்கும் அடுத்த படம் ‘சந்தனத்தேவன்’. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து அமீர் சொன்ன கதை ஆர்யாவுக்குப் பிடித்துப்போக, ஆர்யாவும், அவரின் சகோதரர் சத்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். அமீர் இயக்கி, தயாரிப்பது மட்டுமன்றி, முக்கிய ரோலிலும் நடிக்கிறார். ‘தர்மதுரை’க்குப் பிறகு யுவன்-வைரமுத்து கூட்டணியில் இப்படம் உருவாகிறது. தவிர, ‘செங்கொடி மறவனின் கதை’ என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. #ஆரம்பச்சுட்டாங்க!

* `ஈட்டி’ ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஐங்கரன்’ என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது. நாயகியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். தற்போது ‘அடங்காதே’, ‘4G’ படங்களில் நடித்துவருகிறார் ஜி.வி.பி. #ஒரே மாதிரியே இருக்கே!

* ரகுமான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘துருவங்கள் பதினாறு’ படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. தவிர, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இந்தி ரீமேக்குக்காக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. மலையாளத்திலும் ரீமேக்காகவிருக்கிறதாம். மற்ற மொழிகளில் ரீமேக்காகவிருக்கும் என் படத்தை நானே இயக்கமாட்டேன் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன். #கார்த்தி கீர்த்தி பெருசு!

சினிமால்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* ஜல்லிக்கட்டு பற்றி பெரிய நடிகர்கள்கூட கவனமாகக் கருத்து தெரிவித்துவரும் வேளையில், த்ரிஷாவின் காரசார பேச்சினால் மக்களின் சினம் த்ரிஷா பக்கம். இதனால் த்ரிஷா நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு தமிழகத்தில் நடத்த முடியாது என்பதால் வேறு மாநிலங்களில் நடத்தலாம் என்றும், அப்படி நடத்தினால் ஆகும் கூடுதல் செலவுகள் பற்றியும் தயாரிப்பாளர்கள் யோசித்துவருகிறார்கள். அதுமட்டுமன்றி ரிலீஸ் நேரத்திலும் பிரச்னை வரலாம் என்பதால், இயக்குநர்களும் விழிபிதுங்கி வருகிறார்களாம். #அப்படிப்போடு!

* பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் ‘மகளிர் மட்டும்’ படபிடிப்பு ஆக்ராவில் நடந்துவருகிறது. பிரபா என்னும் கதாபாத்திரத்தில் குறும்பட இயக்குநராக ஜோதிகா நடிக்கிறார். படத்துக்கான பாதிவேலைகள் முடிந்துவிட்டதாம். எப்படியும் ஜூன் மாதத்துக்குள் பட ரிலீஸை எதிர்பார்க்கலாம். #தூள்!

* நடிப்பைவிட, குத்துப்பாடலுக்கு குரல் கொடுப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார் டி.ராஜேந்தர். சமீபத்தில் விஷால் சந்திரசேகர் இசையில் மதன் கார்க்கி வரிகளில்  ‘பிடிச்சிருந்தா பெண்ணே சொல்லிவிடு, லவ் இருந்தால் லைட்டா அள்ளிவிடு’ என்ற குத்துப்பாடலைப் பாடியிருக்கிறார் டி.ஆர். #டண்டணக்கா!

சினிமால்

* ‘நமது விவசாயிகளுக்கு ஆதரவாக இனிமேல் நான் தயாரிக்கும், இயக்கும் படங்களில் அந்நிய நாட்டு பானங்களைப் பயன்படுத்த மாட்டேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெளிநாட்டு குளிர்பானங்கள் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார் `பீட்சா', `சூதுகவ்வும்' பட தயாரிப்பாளர் சி.வி.குமார். தற்பொழுது `மாயவன்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.  #நல்லது!

* ‘துருவநட்சத்திரம்’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கவிருப்பவர் அனு இம்மானுவேல். இவர் நிவின்பாலி ஜோடியாக மலையாளத்தில் `ஆக்‌ஷன் ஹீரோ பிஜு' படத்தில் நடித்தவர். தவிர, குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். மஞ்சிமா போலவே கெளதம் மீண்டும் மலையாளக்கரையிலிருந்து இப்படத்துக்கும் நாயகியை இறக்குமதி செய்திருக்கிறார். ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்வதற்கு  திட்டமிட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது. இசை ஹாரிஸ் ஜெயராஜ். #அடிப்பொலி!

* செல்வா இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் ரித்திகாசிங் நடிக்கவிருக்கும் படத்துக்கான கதை விவாதம் தற்போது நடந்துவருகிறது. இப்படத்தில் நந்திதாவும் நடிக்கவிருக்கிறாராம். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. #அழகி!  

சினிமால்

* பொங்கலுக்கு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை ரீலீஸ் செய்த கையோடு, அடுத்த படத்தின் டைட்டிலையும் வெளியிட்டிருக்கிறார் பார்த்திபன். ‘முன்பதிவாய் ஒரு முத்தம்’ என்று பெயரை தேர்ந்தெடுத்துள்ள பார்த்திபன் படத்தை தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். #ம்!  

* ‘நடிப்பை மட்டுமல்லாமல் அனுபவத்தையும் கற்றுக் கொண்டேன்’ - `நூர்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, நெகிழ்ச்சியாக அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் சோனாக்‌ஷி சின்ஹா. பத்திரிகையாளராக நடித்திருக்கிறாராம். சபா இம்தியாஸ் எழுதிய `கராச்சி யூ ஆர் கில்லிங் மீ’ என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. #வெல்டன் சோனு! 

* ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் மம்மூட்டி நடித்துவரும் படம் ‘பேரன்பு’. ராம் இயக்கிவரும் இப்படத்தில் நாயகியாக அஞ்சலி மட்டுமல்லாது, அஞ்சலி அமீர் என்ற திருநங்கையும் நடித்திருக்கிறார். திருநங்கைகளின் வாழ்க்கை பற்றி இப்படத்தில் பேசியிருக்கிறார் இயக்குநர் ராம். மாடலிங் துறையில் பிரபலமான அஞ்சலி அமீரின் முதல் தமிழ்ப் படம்! #வெல்கம்

* இந்தி திரையுலகின் பிரபல இயக்குநர் கரண்ஜோகரின் பயோபிக் புத்தகத்தை அவரின் நெருங்கிய நண்பர் ஷாரூக்கான் வெளியிட்டார். இப்புத்தகத்தில் கரண்ஜோகரின் சிறுவயது வாழ்க்கை, சினிமா அறிமுகத்தில் தொடங்கி எல்லாம் இடம்பெற்றிருக்கிறதாம். #சூப்பர் கரண்!