Published:Updated:

பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

Published:Updated:
பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

`சார் பூவா தலையா?' என்றால், ``பூவோ தலையோ, டாஸ் ஜெயிச்சா பௌலிங்கா ஃபீல்டிங்கா... அதைச் சொல்லுங்க தம்பி!'' - ஐம்பத்தி நாலு வருஷ சினிமா வாழ்க்கை, இன்னும் அதே எனர்ஜி, அதே வேகம் இருக்கிறது சண்முக சுந்தரத்திடம். ஷூட்டிங்கில் இருந்தவருடன் ஒரு மினி பேட்டி...

பிரேம்ஜிக்கு பொண்ணு பார்க்கிறோம்!

``எப்படி நடிப்புக்குள்ள வந்தீங்க?''

``1963-ல சினிமாவுக்குள்ளே வந்தேன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே கண்ணதாசன்தான். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால நாடகங்கள் நடிச்சுக்கிட்டு இருந்தேன். அதே நேரத்துலதான் கண்ணதாசனும் புதுசா நாடக ட்ரூப் ஆரம்பிச்சிருந்தாங்க. ஹிட்லர் கேரக்டருக்காக வில்லன் நடிகரைத் தேடி இருக்காங்க. அப்போ எங்கிட்ட கேட்டாங்க. அப்படித்தான் எனக்கும் கண்ணதாசனுக்கும் அறிமுகம். என்னோட நடிப்பு பிடித்துப்போனதால அவரோட முதல் படம் `ரத்த திலகம்'... 1963-ல சைனீஸ் மேஜரா நடிச்சேன்.''

``அந்தக் காலத்துலயே சைனீஸ் கேரக்டர், ஹிட்லர் கேரக்டர்னு எப்படி  ரெஃபரன்ஸ் எடுத்துக்கிட்டீங்க?''

``உண்மைதான்...  நான் ஹிட்லரைப் பார்த்தது கிடையாது. நான் நிறைய தேடித்தேடி படிச்சேன். ஹிட்லர் பத்தி படிக்கும்போதெல்லாம் அவரோட நடை பாவனை எல்லாம் உள்வாங்கிக்க ஆரம்பிச்சேன். மேற்கொண்டு டிராமாக்கள் நடிச்சதால ஈஸியா உள்வாங்கிக்க முடிஞ்சது. அப்போ ஜி.டி நாயுடு கோயம்புத்தூர்ல நாடகம் பார்த்துட்டு, `நான் ஹிட்லரை நேர்ல பார்த்தவன். அப்படியே ஹிட்லர் மாதிரி பண்றீங்க'ன்னு சொன்னாரு. முதல் படமே சிவாஜிகூடத்தான் நடிச்சேன். ரெண்டாவது படத்துலயும் அவர்கூட தான். காலேஜ் முடிச்சதும் நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிடுவேன். அவரும் நிறைய பாராட்டி இருக்காரு.''

``உங்க குரல் நிறைய மேடைகளில் மிமிக்ரியா எதிரொலிக்குதே?''

``ரொம்ப சந்தோஷமாதான் இருக்கு. நிறைய மேடைக்கலைஞர்கள் எல்லாம் பண்றாங்க. குறிப்பா, ரோபோ ஷங்கர்  என்னோட குரலை எடுத்து பண்றதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். நம்ம குரல் இன்னொருத்தரை இம்ப்ரெஸ் பண்றதுங்குறது மிகப்பெரிய சந்தோஷம்தானே!''

``சில்க் ஸ்மிதா கூட நடிச்ச அனுபவம்?''

``சில்க் ஸ்மிதா கூட `கொக்கரக்கோ'வுல ஜோடியா நடிச்சிருப்பேன். அதுக்குப் பிறகும் ரெண்டு மூணு படங்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம். நல்ல நடிகை! தமிழ் சினிமா அவங்களை ரொம்ப மிஸ் பண்ணிருச்சுன்னு தான் தோணுது!''

``உங்களுக்கு எத்தனை அக்கா இருக்காங்க?''

``எனக்கு ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி... தங்கச்சி அந்தக்கால ஃபேமஸ் நடிகை சந்திரகாந்தா. ஒரு அக்காவோட மருமகன்தான் கங்கை அமரன். இப்படி மொத்தக் குடும்பமுமே சினிமாவுலதான் இயங்கிக்கிட்டு இருக்கோம்.''

``பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்?''

``கல்யாணம் ஆகுறதும் ஆகாததும் நம்ம கையில இல்லை. பழைய நடிகர் திலீப் குமாரே நாற்பத்தி அஞ்சு வயசுல தான் கல்யாணம் பண்ணினாரு. அதே மாதிரி பிரேம்ஜிக்கு காலம் கை கூடி வரணும். எல்லாருமே நெருங்கிய உறவினர்கள்தானே. பொண்ணு பார்த்துக்கிட்டே இருக்கோம். கூடிய சீக்கிரம் ஒரு நல்ல சேதி வரும்.''

- ந.புஹாரி ராஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism