Published:Updated:

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Published:Updated:
வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

`அப்படியே ஒரு ட்ரிப் போய்ட்டு வருவோமா?' - கெளதம் மேனன் புண்ணியத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த டயலாக்கை அடிக்கடி கேட்கிறார்கள். அப்படியே மான்டேஜ் பாடல் காட்சிகள், சிலபல ஆக்‌ஷன் காட்சிகள், பின் திரும்பப் பழைய இடத்துக்கே வருவது - இதுதான் தமிழ் ரோட் மூவிக்களின் கதை. ஆனால், ஹாலிவுட்டில் `பீலிங் ஆசம்' வகை ரோட் மூவிக்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி எக்கச்சக்க உணர்ச்சிகளைக் கடத்தும் சில `ரோட் மூவி'க்களின் லிஸ்ட் இது...

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

The Motorcycle Diaries : புகழ்பெற்ற போராளி எர்னஸ்டோ சே குவேராவின் பயண அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1952-ல் சே-வும் அவர் நண்பர் அல்பர்ட்டோவும் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுவதும் பயணப்பட்டார்கள். அந்தப் பயணம் சே குவேராவின் மொத்த வாழ்க்கையையும் மாற்றியது. படமும் இந்த மாற்றத்தை பற்றிப் பேசுவதுதான். லத்தீன் அமெரிக்க மக்கள், அவர்களின் கலாசாரம், சமூக ஏற்றத்தாழ்வுகள் எனப் படம் சொல்லும் சேதிகள் ஏராளம். மெக்ஸிக இயக்குநர் வால்டர் சேல்ஸ் இயக்கிய இந்தப் படம் பல திரைப்பட விழாக்களில் ஸ்டாண்டிங் ஒவெஷன்களைப் பெற்றது. விருதுகளையும் வாரிக் குவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Duel : 1971-ல் வெளியான த்ரில்லர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்கு இயக்குநராக இது முதல் படம். டேவிட் மேன் என்ற சேல்ஸ்மேன் பிசினஸ் காரணமாக சோலோவாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். போகும் வழியில் ஒரு ட்ரக்கை டேவிட் ஓவர்டேக் செய்ய, வேகம் பிடித்துத் துரத்தும் ட்ரக் திரும்ப டேவிட்டை முந்துகிறது. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டின் ஒரு கட்டத்தில் அந்த ட்ரக், தான் செல்லுமிடங்களில் எல்லாம் பின் தொடர்வதை உணர்கிறான் டேவிட். அவனின் இந்த திக் திக் பயணம் ரணகளமாவதுதான் மீதிக்கதை. டி.வி மூவியாக வெளிவந்த `டூயல்' அந்தக் காலத்தின் ட்ரெண்ட்செட்டர் சினிமா.

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Planes, Trains and Automobiles : நீல் பேஜ் என்ற விளம்பர நிறுவன பிரதிநிதி வேலை விஷயமாக நியூயார்க் வருகிறார். அங்கே தற்செயலாக டெல் க்ரிஃபித் என்பவரைச் சந்திக்கிறார். எப்போதும் லொடலொடவென பேசிக்கொண்டே இருக்கும் டெல்லைப் பார்த்தால் நீலுக்கு கடுப்பு. ஒரு கட்டத்தில் பனிப்புயல் காரணமாக விமானம் கேன்சலாக, சொந்த ஊரான சிகாகோவுக்கு டெல்லோடு ட்ராவல் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் நீலுக்கு. நேரம் ஆக ஆக இருவரும் நெருக்கமாகிறார்கள். நிற்க. இந்தக் கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்குமே. `அன்பே சிவம்' படம் இதைத் தழுவிதான் எடுக்கப் பட்டது. அப்போ எப்படி இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Easy Rider : அமெரிக்காவில் ஹிப்பி கலாசாரம் தீவிரமாகப் பரவி வந்த காலத்தில் வெளியான படம். வாட், பில்லி என்ற இரு இளைஞர்கள் போதை மருந்து விற்ற பணத்தை வைத்து தங்கள் பைக்குகளில் அமெரிக்கா முழுவதும் பயணப்படுவதுதான் கதை. ஹாலிவுட்டில் பெஞ்ச்மார்க் சினிமா என ரசிகர்களும் விமர்சகர்களும் இன்றுவரை கொண்டாடும் சினிமா இது. படத்தில் பயன்படுத்தப்பட்ட கஸ்டமைஸ்டு பைக்குகள் தொடங்கி நிஜ போதைப் பொருட்கள் வரை அவ்வளவு மெனக்கெட்டது படக்குழு. இதற்காகவே விருதுகளையும் அள்ளியது.

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Little Miss Sunshine: 2006-ல் வெளியான இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியது மைக்கேல் அர்னெட் என்ற புதுமுகம். இயக்கியது ஜோனதன் - வெலரி என்ற புதுமுக ஜோடி. ஆலிவ் என்ற குட்டிப் பெண்ணுக்கு அழகிப் போட்டிகள் மேல் தீராக்காதல். `லிட்டில் மிஸ் சன்ஷைன்' என்ற போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கிறது. போட்டி நடப்பது 800 மைல் தொலைவில் இருக்கும் கலிஃபோர்னியாவில். மொத்தக் குடும்பமும் தங்கள் வேனில் கலிஃபோர்னியா செல்வதுதான் கதை. எட்டு மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் வசூல் செய்தது 100 மில்லியன் டாலர். ஆஸ்கர் உட்பட பல விருதுகளுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது.

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Into the Wild : `இது எல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது காட்டுக்குள்ள போயிட்டா என்ன?' என எல்லோருக்கும் ஒருமுறையாவது தோன்றும்தானே! அப்படி கிறிஸ்டோபர் மெக்கான்டல்ஸ் என்பவருக்கு நிஜமாகவே தோன்ற, காட்டுக்குள் பயணப்படுகிறார். அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் இந்தப் படம். முதலில் சில தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் பெரிய தம்ஸ் அப் காண்பிக்க, பின் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது. கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என ஏராளமான விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Sideways : ரெக்ஸ் பிக்கெட் என்பவரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மைல்ஸ் ரேமண்ட் என்ற எழுத்தாளனுக்கு ஒயின் என்றால் கொள்ளைப் பிரியம். ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த தன் நடிக நண்பன் ஜாக் கோலோடு கலிஃபோர்னியாவின் ஒயின் பிரதேசங்களில் சுற்றித் திரிகிறான். அங்கே அவர்கள் சந்திக்கும் மனிதர்களும் அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் கதை. விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றது. இந்தப் படம் மூலம் கலிஃபோர்னியாவின் ஒயின் பிரதேசங்களில் சுற்றுலா வருவாய் அதிகரித்தது என்ற கதையும் உண்டு.

வ்வ்ர்ர்ரூம் சினிமாக்கள்!

Mad Max: Fury Road :  மேட் மேக்ஸ் வரிசைப் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதன் லேட்டஸ்ட் வெர்ஷன் இது. அணு ஆயுதப் போருக்குப் பின் பிழைத்திருப்பதே பெரிய வேலை என்ற நிலைமை பூமியில். இருப்பவர்களையும் வாட்டி வதைக்கும் கொடூர மன்னனுக்கு எதிராக ஒரு சின்னக் குழு போராடுவதுதான் கதை. தத்ரூப ஆக்‌ஷன் காட்சிகள், பரபர கேமரா, மிரட்டும் கலை இயக்கம் எனப் படம் எல்லா ஏரியாக்களும் சிக்ஸ் அடித்தது. ஆஸ்கரில் ஆறு விருதுகளை அள்ளியது. மேட் மேக்ஸ் வரிசையிலேயே அதிகம் வசூல் குவித்த படமும் இதுதான்!

- நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism