Published:Updated:

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''
பிரீமியம் ஸ்டோரி
``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

Published:Updated:
``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''
பிரீமியம் ஸ்டோரி
``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''
``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

காமெடி மற்றும் அரசியலில் கலக்கும் நடிகர் சிங்கமுத்துவிடம் ஒரு ஜாலி பேட்டி.

‘`சில வருடங்களுக்கு முன்னாடி சினிமாவுல அறிமுகமான உங்க மகன் வாசன் கார்த்திக் என்ன பண்றார்?’’

‘` ‘பாசக்கார கூட்டம்’, ‘கட்டழகன்’ என்ற இரு படங்களில் நடிக்கிறார். சில சிக்கல்கள் காரணமாக நிலுவையில் இருந்த படங்கள் அடுத்த மாதம் மறுபடியும் தொடங்க உள்ளன. அந்தப் படங்களில் காமெடி ஸ்கிரிப்ட் நான்தான் எழுதியுள்ளேன்.’’

‘`தேர்தல் நேரத்தில் பரபரப்பா இருந்தீங்க. அப்பறம் சைலன்ட் ஆகிட்டீங்க... ஏன்?’’

‘`தேர்தலில் பிரசாரம் செய்யும் நேரத்தில் பரபரப்பாகத் தெரியும். வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன் அந்தப் பரபரப்பு ஓய்ந்துவிட்டது. சமீபத்தில் அம்மா அவர்களும் காலமாகிவிட்டார்கள். நடுவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையடுத்து பொதுக்கூட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மறுபடியும் ஸ்பீட் எடுக்கும். வருவேன்.’’

‘`ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆளுங்கட்சியாக எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’

‘`இந்தியா முழுவதும் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுதான் உள்ளது. இளைஞர்களும் மாணவர்களும் போராடுவது நியாயமான விஷயம்.’’

‘`சினிமாவில் காமெடிக்கென்று முன்பு ஒரு குழு இருக்கும்... இப்போ அப்படி இல்லை. என்ன காரணம்?’’


‘`காமெடியன் என்று ஏன் பிரிக்க வேண்டும். அவர் காமெடி ஹீரோ என்று விட்டுவிட வேண்டியதுதான். முன்பெல்லாம் காமெடி அறிவுபூர்வமாக இருக்கும். ஆனால், இப்போது வெறும் டயலாக் மட்டும்தான் காமெடியாக இருக்கிறது. மற்றபடி ஸ்கிரிப்ட் எழுத ஆள் இல்லையா... தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லையாவென்று தெரியவில்லை.’’ 

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`அ.தி.மு.க-வில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் ஜெ.தீபாவைப் பற்றிய உங்க கருத்து?’’

‘`எம்.ஜி.ஆர் இறக்கும்போது யார் பொதுச்செயலாளர் என்ற கேள்வி வந்தது. இப்படி ஒரு மாஸ் லீடர் கட்சியிலிருந்து விலகும்போதோ, இறக்கும்போதோ ஏதேனும் மாற்றம் நடக்கத்தான் வேண்டும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் கட்சி பெரிதாக உடையவில்லை. அதேபோல் `அம்மா இறப்புக்குப் பின் யார் பொதுச்செயலாளர்?’ என்று பார்த்தால், 32 ஆண்டுகளாக அவர்கூடவே இருந்து பயணித்த சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தீபாதான் என்னுடைய வாரிசு என்று அம்மா எதுவும் குறிப்பிடவில்லை. தீபாவை ஆதரிப்பதற்குக் காரணம் பதவி ஆசை மட்டுமே.’’ 

‘`ஆனா, சசிகலா தேர்வு குறித்து சமூக வலைதளங்கள்ல வேறமாதிரியான விமர்சனங்கள் வந்துகிட்டு இருக்கே?”

‘`சமூக வலைதளங் களில் காலையிலிருந்து மாலைவரை ஒரு பொய்யினை ஜோடித்து அதைப் பற்றிய கருத்துகளை வெளியிட்டால் அதுதான் உண்மை என்றாகிவிடாது. அதேபோல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால், ஒரு கட்சி மற்றொரு கட்சி பாராட்டினால் வரமுடியாது. இப்போது நான் நினைத்தால்கூட ஒரு பொய்யினை அவிழ்த்துவிட முடியும். இப்போது தி.மு.க என்று பார்த்தால் அவர்களுக்கென்று ஒரு குழு அமைத்து மக்களைக் குழப்பிவிட்டு கற்பனையான விஷயங்களை ஜோடித்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டியதுதான்.’’

``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

‘`வடிவேலுவின் ரீ-என்ட்ரி?’’

‘`வடிவேலு எப்படியெல்லாம் நடிக்க வேண்டுமோ அதெயெல்லாம் நடித்து முடித்துவிட்டார். இனிமேல் எதை நடித்தாலும் பழைய படங்கள் போல்தான் இருக்கும். சமீபத்தில் வெளியான ‘கத்திசண்டை’ படம்கூட மிகவும் பழைய படம் போல்தான் இருக்கிறது. அதில் அவர் ஒரே ரியாக்‌ஷன்தான் கொடுக்கிறார். மக்களிடம் கேட்டாலும் அது காமெடியே இல்லையென்றுதான் சொல்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து காமெடி செய்தோம் என்றால் அதற்கு மவுசே வேறு.’’

‘`உங்களுக்குப் பிடிச்ச காமெடியன்?’’


‘`வடிவேலு நல்லவரா... கெட்டவரா என்பது அப்புறம். ஆனால், அவர் மிகவும் திறமைசாலி. எந்த சீனை சொன்னாலும் அதை எளிதில் பிடித்துக்கொண்டு நடிப்பதில் வல்லவர். அவருடன் சேர்ந்து நடிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும். அவருக்குப் பிறகு சூரி மற்றும் சந்தானத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். ஹீரோவுடன் சென்று காமெடி என்ற பெயரில் கமென்ட் அடிக்காமல் மக்களைப் புரிந்துகொண்டு தனித்துவமாக காமெடி செய்வதில் கெட்டிக்காரர்கள்.’’

- தார்மிக் லீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism