`தர்மதுரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கஞ்சாகருப்பு உற்சாகமாக இருக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் `தொண்டன்' படப்பிடிப்புக்காக பண்ருட்டியில் பிஸியாக இருக்கிறார். இலவசக் கல்வி, கேன்சர் மருத்துவமனை, திருநங்கைகளுக்கு உதவிகள் என அரசியலைத் தாண்டியும் சில விஷயங்களைச் செய்துவரும் அவரைச் சந்தித்தோம்...

``சினிமாத் துறைக்கு எப்படி வந்தீங்கண்ணே..?''

``சிவகங்கையில டீக்கடை வெச்சிருந்தேண்ணே... ஷூட்டிங் எடுக்க பாலா அண்ணே எங்க ஊருக்கு வந்திருந்திருந்தார். வந்ததைப் பார்க்காமல் ஒரு பெரியவர்கிட்ட, `ஏய் பெருசு, பேப்பர்ல என்னாத்தப் பாக்குற பொம்பளப் புள்ள படத்தையா?'னு என்னோட பாடி லாங்வேஜ்ல பேசினதைக் கேட்டுப்புட்டாரு. அண்ணணுக்குப் பிடிச்சுப்போயி, `நடிக்க வர்றியா?'னு கேட்டார்ணே. உடனே கிளம்பி சென்னையில அவரு ஆபீஸ்ல லேண்ட் ஆகிப்புட்டோம்ணே. ஆபீஸ்க்கு வர்றவங்களுக்கு டீ வாங்கிக் கொடுக்குற வேலை. பாலா அண்ணன் எடுத்த `பிதாமகன்' படத்துல கஞ்சா கருப்புவாவே அறிமுகமானேன். `ராம்', `சுப்ரமணியபுரம்' என அடுத்தடுத்த படங்கள் கிடைச்சது. 250 படம் தொட்டாச்சுண்ணே. பத்து படங்கள் போயிக்கிட்டிருக்குண்ணே!''

``வேற மொழியில எதுவும் நடிக்கலையா..?''

``மலையாளத்துல `மதுரை ரங்கா', `காந்தாரி'னு ஆறு படங்கள் நடிச்சுக்கிட்டு இருக்கேன்''

``கவிஞர் கிச்சன் ஹோட்டல்ல மாஸ்டரா வேலை பார்க்கிறீங்களாமே..?''

``கவிஞர் ஜெயங்கொண்டான்தான் எனக்கு எல்லாமே. கிராமத்துல இருந்து சினிமால சாதிக்கணும்னு கனவுகளோடு சென்னைக்கு வர்ற கலைஞர்களுக்கு பாதி விலையில சாப்பாடு கொடுக்குறாரு. அவர் செய்யும் செயல் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அவரைப் போல நானும் ஒரு ஹோட்டல் தொடங்கி இல்லாதபட்ட சனங்களுக்கு இலவசமா சாப்பாடு கொடுக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்! அப்புறம் நானே எங்க ஊர்ல மாஸ்டரா இருந்த பயதான். பழசை மறக்கிற ஆளு நான் இல்லைண்ணே... உதவி செய்யப் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன்!''

``இலவசப் பள்ளிக்கூடம் கட்டிட்டு வர்றீங்களே? எந்தளவுல இருக்கு அந்த வேலைகள் எல்லாம்?''

``கட்டட வேலை 75 சதவிகிதம் முடிஞ்சிடுச்சு. 1-ம் வகுப்புல இருந்து 10-ம் வகுப்பு வரைக்கும் மாணவர்கள் படிக்குற அளவுக்கு பள்ளிக்கூடம் கட்டிட்டு இருக்கேன். சல்லிக் காசு வாங்காம இலவசமா படிப்பு கொடுக்கப்போறேன். பணம் இல்லாததாலதான் என்னால முழுசா மூணாம் வகுப்புகூட படிக்க முடியாமப் போச்சு. நான் படிக்காம போனதுக்கு முக்கியக் காரணமே வறுமை தான். நான் படிக்கலைங்கறதாலேயே பல இடங்கள்ல அசிங்கப்பட்டிருக்கேன். என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாதுண்ணே. அதுக்காகத்தான் இந்த ஸ்கூல். அப்புறம் கேன்சர் ஆஸ்பிட்டலும் கட்டப்போறேன். நான் மூணு வயசா இருக்கும்போது எங்க அப்பா காந்திநாதன், கேன்சர் நோயால இறந்தார். பணம் இருந்திருந்தா அப்பாவைக் காப்பாத்தி இருக்கலாம்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. அந்த மாதிரி சிக்கல் யாருக்கும் வரக்கூடாதுங்கறதுக்காக கேன்சர் ஆஸ்பிட்டல் கட்டப்போறேன். அங்கே இலவசமா மருத்துவம் கொடுக்கப்போறேன். இதுக்காகவே நான் சம்பாதிக்குற முக்கால்வாசி சம்பளத்தையும் பயன்படுத்திட்டு வர்றேன்.''

`` `பருத்திவீரன்’ படத்திலிருந்து திருநங்கைகள் இல்லாமல் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கிறது இல்லையாமே..?''

``கடவுளின் அதிசயப் படைப்பு அவங்க. எந்த ஒரு விஷயத்தை அவங்களை வெச்சுத் தொடங்கினா, நல்லது நடக்கும். ஒவ்வொரு படத்தில கமிட் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு திருநங்கைகிட்ட ஆசி வாங்கிட்டுப்போவேண்ணே. நான் இன்னிக்கு நாலுபேருக்கு தெரிஞ்ச முகமா இருக்குறதுக்கு அவங்களோட மனம் நிறைஞ்ச ஆசீர்வாதம்தான் காரணம்ணே!''

``ஜெயலலிதா மறைவு குறித்து..?''

``அம்மா நல்லா இருக்கணும்னு கோயில் கோயிலா ஏறி இறங்கினேன். ஆனா, எந்த புண்ணியமுமில்லாமல் போச்சு. மூணு முறை அப்போலோ மருத்துவமனைக்குப் போனேன். ஆனா, அம்மாவைப் பார்க்க முடியலை. அம்மா இறந்துட்டார்னு சொன்னப்போ, ரொம்ப அதிர்ச்சியா போச்சு. நான் நினைச்சுக்கூட பாக்கலை. அவர் இடத்தை யாராலும் ஈடு செய்யமுடியாது.''

``நடிகர் ஆனந்தராஜ், கராத்தே ஹூசைனினு சிலர் அ.தி.மு.க-வுல இருந்து வெளியே வந்துட்டாங்களே? நீங்க என்ன பண்ணப்போறீங்க?''

``எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் பூர்வ பந்தம் ஒண்ணு இருக்கு. என்னோட பிறப்பே வித்தியாசமானது. எம்.ஜி.ஆர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் இணைஞ்சு நடிச்ச `நினைத்தை முடிப்பவன்' படம் எங்க ஊர் டூரிங் டாக்கீஸ்ல ஓடிட்டு இருந்துச்சு. அம்மா நிறைமாச கர்ப்பிணியா வீட்டுல சண்டை போட்டுட்டு அந்தப் படம் பார்த்திருக்காங்க. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே நான் பிறந்திருக்கேன். தலைவரை மறக்கக் கூடாதுங்கறதுக்காக என் கையில அவர் பேரைப் பச்சை குத்திவிட்டுருச்சு என் அம்மா. அ.தி.மு.க-வுல சேரும்போது, `உங்களைப் பார்த்துட்டேதான் அம்மா நான் பொறந்தேன்'னு சொன்னேன். கேட்டுட்டு அம்புட்டு சிரிச்சாங்க. கட்சியை விட்டுலாம் போகமாட்டேன்!''

``ஜெ. அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்களே..?''

``மக்களின் மனநிலையைப் பற்றி கருத்துசொல்ல விரும்பவில்லை.தீபா அக்காவால் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியாது. இங்குள்ள அரசியல்வாதிகள் அவரை அரசியல் செய்ய விடமாட்டார்கள். அவரிடம் தவறான கருத்துகளை புகுத்திக்கொண்டிருக்கிறார்கள்.''

- எம்.திலீபன்