Published:Updated:

"கல்யாணம், லிவிங் டுகெதர்லாம் இல்லை.. ஆனா, பார்ட்னர் இருப்பார்!" - லட்சுமி மேனன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"கல்யாணம், லிவிங் டுகெதர்லாம் இல்லை.. ஆனா, பார்ட்னர் இருப்பார்!" - லட்சுமி மேனன்
"கல்யாணம், லிவிங் டுகெதர்லாம் இல்லை.. ஆனா, பார்ட்னர் இருப்பார்!" - லட்சுமி மேனன்

சில வருடங்களாக தமிழ் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருக்கும் நடிகை லட்சுமி மேனன், 'யங் மங் சங்' படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். இந்தப் படம் குறித்த அனுபவங்களையும், அவரின் பெர்ஷனல் ஷேரிங்ஸும் சொல்கிறார்.

''தமிழ் சினிமாவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனா, இங்கே சொல்லிக்கொள்ளும்படியான நண்பர்கள் யாரும் இல்லை. அதற்காக நண்பர்களே இல்லைனு சொல்ல வரலை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னோட வொர்க் பண்ற சக நடிகர்கள், நடிகைகளிடம் நல்லாப் பேசுவேன். ஆனா, அவங்க குடும்பத்தில் ஒருத்தர்ங்கிற மாதிரியான ஃபீலிங் வந்ததே இல்லை.'' - அழகுத் தமிழில் பேசுகிறார், நடிகை லட்சுமி மேனன். 

" 'யங் மங் சங்' படத்துல எந்த மாதிரியான கேரக்டர் உங்களுக்கு?" 

"யமுனாங்கிற கிராமத்துப் பெண்ணா நடிச்சிருக்கேன். இதுவரைக்கும் பண்ண கிராமத்துப் பெண் கேரக்டர்கள்ல இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இயக்குநர் எம்.எஸ்.அர்ஜூனுக்கு இது முதல் படம். கேரளாவுக்கு வந்து கதை சொன்னார். பிடிச்சிருந்துச்சு, ஓகேனு சொல்லிட்டேன்."  

"ஹீரோ பிரபுதேவாவுக்கும் உங்களுக்கும் படத்துல ஹெவி டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இருக்குமே?" 

"எனக்குப் பரதநாட்டியம் தெரியும். டான்ஸ் பிடிக்கும். பிரபுதேவா மாஸ்டரைப் பத்தி சொல்லவே தேவையில்லை. ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கிறதுனால, படத்துல டான்ஸுக்குப் பெரிய ஸ்கோப் இருக்கும்னு நினைக்கிறீங்க போல... ஆனா, அப்படி எதுவும் இல்லை. பிரபுதேவா மாஸ்டருக்குகூட ஒரு பாட்டு இருக்கு. எனக்கு இல்லை. தவிர, படத்தோட கதைக்கு டான்ஸ் பெருசா தேவைப்படலை." 

"படிப்பு எப்படிப் போகுது?"

"பிளஸ் டூ முடிச்சதும், காலேஜ்ல சேர்ந்து படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதேமாதிரி ஷோசியலாஜி பி.ஏ சேர்ந்தேன், காலேஜுக்குப் போனேன். ஆனா, இடையில சில மலையாளப் படங்களில் நடிச்சதுனால ரெகுலரா காலேஜுக்குப் போகமுடியலை. வருகைப் பதிவுலேயும் பிரச்னை. அதனால, ஃபைனல் இயர் படிக்க முடியலை. இப்போ தபால் வழியில லாஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருக்கேன். தவிர, நடனத்தைப் பற்றிய டிப்ளோமா கோர்ஸும் படிக்கிறேன்." 

"உடல் எடையைக் குறைக்கப் போறதாவும் சொல்லியிருந்தீங்களே...?" 

"அப்படி எங்கேயும் நான் சொல்லலை. எனக்குப் பிடிச்ச சாப்பாடை நல்லா சாப்பிடுவேன். எனக்கு டயட்லாம் செட் ஆகாது. ஆனா, இப்போ கொஞ்சம் வெயிட் குறைஞ்சிருக்கேன். அதுக்குக் காரணம், டான்ஸ். பரதநாட்டியம், குச்சுப்புடி ரெண்டுமே கத்துக்கிட்டு வர்றேன்."

" 'குக்குரு... குக்குரு...' பாட்டுக்குப் பிறகு, பாடகி லட்சுமி மேனனையும் காணோமே...?" 

"வாய்ப்புகள் வரலை. தவிர, நான் ஃப்ரொபெஷனல் சிங்கர் கிடையாது. மலையாளத்துல ஒரு படத்துல பாடினேன். அந்தப் படம் தேசிய விருது வாங்குனதுல எனக்கு சந்தோஷம். டான்ஸ் பண்ணச் சொன்னா பண்ணிடலாம். பாட்டுனு வரும்போது கொஞ்சம் பயம் வருது. பிராக்டிஸ் பண்ணா நல்லா பாடுவேன்னு நினைக்கிறேன். எதிர்காலத்துல பார்ப்போம்!" 

"எதிர்காலத் திட்டம் என்ன?' 

"எங்க வீட்டுல நான், அம்மா, பாட்டி. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. டான்ஸ் ஆடும்போது நான் ரொம்ப என்ஜாய் பண்ணுவேன். அதனால, ஃபியூச்சர்ல டான்ஸ் ஸ்கூல் வைக்கணும்னு ஆசை இருக்கு. அதுக்கு இன்னும் உழைக்கணும்."

"கிளாமர் ரோலில் லட்சுமி மேனனைப் பார்க்க முடியாதா?" 

"பண்ணக்கூடாதுனு எதுவும் முடிவு கிடையாது. சின்னதா ஸ்கெட் போட்டுக்கிட்டு வந்துதான் கிளாமர் காட்டணும்னு அவசியமில்லை. ஹோம்லியா சேலை கட்டுக்கிட்டும் கிளாமர் காட்ட முடியும். ஆக்சுவலா, பெண்களுக்கு சேலைதான் கிளாமர் டிரெஸ்னு நினைக்கிறேன். 'பாகுபலி' படத்துலகூட அனுஷ்கா  சேலையில கிளாமராதான் தெரிஞ்சாங்க." 

"கல்யாணம் எப்போ?"

"எனக்கு திருமண  உறவில் நம்பிக்கையில்லை. ஏன்னா, கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் அன்பு, காதல் கிடைக்கும்னு இல்ல. கல்யாணம் பண்ணமாகூட அன்பு, காதலைப் பெறலாம். நான் சொல்றது மத்தவங்களுக்குப் புரியுமானு தெரியலை. ஆனா, அது எனக்கு மட்டும் புரிஞ்ச விஷயம். நான் திருமணத்தை நம்பல. திருமணம் பண்ணிக்கவும் மாட்டேன். அதுக்காக, எனக்கு லைஃப் பார்ட்னர் இருக்காதுனு சொல்ல வரலை. கண்டிப்பா இருப்பார். 'பார்ட்னர்'ங்கிற வார்த்தைக்கு வலு சேர்க்க நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபர் வேணும். அதைக் கல்யாணம்ங்கிற வார்த்தையில சுருக்க விரும்பலை. அதை, 'லிவிங் டு கெதர்'னுகூட சொல்லமுடியாது."

"ரொம்ப முதிர்ச்சியா பேசுற மாதிரி இருக்கே?"

"வாழ்க்கையில அனுபவம்தான் சிறந்த ஆசிரியர்னு சொல்வேன். நான் திருமணம் பத்தி சொன்ன விஷயங்கள் அனுபவத்தால மட்டுமே வந்தது இல்லை. அதை எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுனு எனக்குத் தெரியலை." 

வாழ்த்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு