ஊசி, மருந்து, ரத்தம், டெட்டால் வாசம்... இவை நிஜத்தில் மட்டுமல்ல, திரையிலும் தத்ரூபமாய் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அப்படி ரசிகர்களை அசத்திய மெடிக்கல் ஜானர் வகை படங்களைத்தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

The Hospital : 1971-ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியது அந்தக் கால காமெடி கதைகளுக்குப் பெயர் போன ஆர்தர் ஹில்லர். மான்ஹாட்டன் மருத்துவமனையில் இருக்கும் டாக்டர் பாக்கிற்கு தொட்டதெல்லாம் வினையாய் முடிகிறது. மனைவி பிரிந்து செல்கிறாள். குழந்தைகள் பேச மறுக்கிறார்கள். மருத்துவமனையின் தரமும் குறைந்துகொண்டே இருக்கிறது. இதற்கு நடுவே சில மரணங்களும் நிகழ்கின்றன. தற்கொலை எண்ணத்தில் இருக்கும் பாக், மருத்துவமனைக்கு வரும் ஒரு பெண்ணோடு காதலில் விழுகிறார். நடந்த மரணங்களை இருவரும் ஆராய்கிறார்கள். அதன் விடைதான் மீதிக்கதை. இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதிய பேடி சேய்வ்ஸ்கிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. கமர்ஷியல் ரீதியாகவும் படம் சக்சஸ்!

Re-Animator:  1985-ல் வெளியான கல்ட் க்ளாசிக் படம். லவ்க்ராப்ட் என்பவர் எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஹெர்பெர்ட் வெஸ்ட் என்ற மருத்துவர், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். ஆனால் வெஸ்ட்டை அவர் நண்பர் ஒருவரைத் தவிர வேறு யாருமே நம்ப மறுக்கிறார்கள். ஒரு பிணத்துக்கு அவர் உயிர்கொடுக்க, அது ஸோம்பியாக மீண்டெழுகிறது. அதன் மூலம் ஒரு மரணமும் நிகழ்கிறது. பின்னர் வரும் திருப்பங்கள்தான் கதை. படம் அந்தக் காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட். விமர்சகர்களும் படத்தைக் கொண்டாடினார்கள்.

Red Beard : மனிதம் பேசும் அகிரா குரசோவாவின் படம். 19-ம் நூற்றாண்டின் ஜப்பானிய கிராமம் ஒன்றுதான் கதைக்களம். யசுமோட்டோ என்ற இளம் டாக்டருக்கு தலைக்கனம் அதிகம். பிறந்தது வசதியான குடும்பத்தில் என்பதால் அப்படி. எதிர்பாராதவிதமாக ஜப்பானின் ஒதுக்குப்புற கிராமம் ஒன்றிற்கு பயிற்சிக்காக அனுப்பப்படுகிறான் யசுமோட்டோ. அங்கிருக்கும் மூத்த மருத்துவர் க்யோஜோ நீட்டை யசுமோட்டோவிற்குப் பிடிக்காமல் போகிறது. அவரை எதிர்த்து கலகம் செய்கிறான். அப்போதுதான் க்யோஜோ சிகிச்சையளித்துவரும் நோயாளிகளின் கதைகள் அவனுக்குத் தெரிய வருகின்றன. ஒவ்வொன்றும் ஆளை நெகிழ்த்தும் கதைகள். அவற்றைக் கேட்டு அவன் மனம் திருந்துவதுதான் கதை. மூன்றுமணி நேர படம் என்றாலும் மஸ்ட் வாட்ச் வகை.

Shutter Island : சினிமா வெறியர்கள் கொண்டாடும் சைக்கலாஜிகல் த்ரில்லர். மார்ட்டின் ஸ்கார்சீஸின் ஹிட் படங்களுள் ஒன்று. மனநலம் பாதிக்கப்பட்ட கிரிமினல்கள் இருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார்கள் இரு அமெரிக்க மார்ஷல்கள். காணாமல் போன ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது அவர்களின் வேலை. அங்கே விசித்திரமாய் சில சம்பவங்கள் நடப்பதை இருவரும் உணர்கிறார்கள். என்ன என்பது திடுக் சஸ்பென்ஸ். இது அதுவா, அது இதுவா? எனக் குழப்பியடிக்கும் கதைக்கு துல்லிய திரைக்கதை அமைத்திருந்தார்கள். போதாக்குறைக்கும் டிகாப்ரியோ, நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார். படம் செம ஹிட்.

Cold Prey 2 : நார்வேயில் இருந்து வெளியான ஸ்லாஷர் படம். `கோல்ட் ப்ரே' முதல் பாகத்தின் தொடர்ச்சி. முதல் பாகத்தில் தப்பிப் பிழைத்த ஜேனிக், ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அங்கே அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் கெட்ட கனவுகளில் இருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை. இந்நிலையில் முதல் பாகத்தில் அவளைத் துரத்திய பயங்கரம் இப்போதும் அவளைத் துரத்தி வருகிறது. அந்த மருத்துவமனையில் இருந்து அவள் தப்பித்தாளா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. முதல் பாகம் அளவுக்கு இல்லையென்றாலும் தம்ஸ்-அப் காட்டினார்கள் ரசிகர்கள். முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த நார்வே படம் இதுதான்.

Spellbound : த்ரில்லர் கதைகளின் மன்னன் ஹிட்ச்காக்கின் படைப்பு. மனநல மருத்துவமனையில் பணியாற்றும் கான்ஸ்டன்ஸ் என்ற டாக்டருக்கு பொது உணர்ச்சிகளே இல்லை என்பது உடனிருப்பவர்களின் வாதம். இந்த சூழ்நிலையில் அங்கு தலைமை மருத்துவராக பணியாற்ற வருகிறார் எட்வர்ட்ஸ் என்ற மருத்துவர். அவர் யார், அவரின் கடந்தகாலம் என்ன என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கிறாள் கான்ஸ்டன்ஸ். திடீரென ஒருநாள் எட்வர்ட்ஸ் காணாமல் போக, அதற்கடுத்து கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள். க்ளைமாக்ஸ் என்ன என்பதை நீங்கள் படத்தில்தான் பார்க்க வேண்டும் மக்களே! மற்ற ஹிட்ச்காக் படங்களைப் போலவே இதற்கும் வசூல் மழை பொழிந்தது.

MASH : ரிச்சர்ட் ஹூக்கர் என்பவர் எழுதிய `மாஷ்' என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மாஷ் என்றால் மொபைல் ஆர்மி சர்ஜிகல் ஹாஸ்பிட்டல் என்று அர்த்தம். கொரியப் போரின்போது பணியாற்றிய ஒரு மருத்துவக் குழு பற்றி பேசும் பிளாக் காமெடி படம் இது. சீரியஸான சூழலில் பணியாற்றும் மருத்துவர்கள் பற்றியும், அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் காமெடியாய் பேசும் கதை. கேன்ஸ் திரைப்பட விழாவில் Palme d'Or விருதைப் பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. வசூலிலும் குறை வைக்கவில்லை.

Anatomy : ஜெர்மனியில் இருந்து வெளியான ஹாரர் படம். கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்கிறாள் பால்லா ஹென்னிங். ஒரு அனாடமி வகுப்பில் தனக்குத் தெரிந்த ஒருவரின் பிணத்தைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள் பால்லா. அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைப்பவள் ரகசியமாகத் துப்பறிகிறாள். உண்மைகளைத் தெரிந்துகொண்ட அவளை சிலர் துரத்துகிறார்கள். பால்லா தப்பித்தாளா இல்லையா? யார் அந்த மர்மக்குழு என்பதுதான் கதை. படம் ஜெர்மனியில் சூப்பர் ஹிட்டாக, அப்படியே டப் செய்து ஹாலிவுட்டிலும் வெளியிட்டார்கள்.

- நித்திஷ்