Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பரும், இயக்குநரும் நடிகருமான கே.நட்ராஜ். ரஜினிகாந்த் மீதான அன்பு காரணமாக, தன் மகளுக்கு ‘ரஜினி’ என்று பெயர் வைத்தார். இந்த ரஜினியைக் கைப்பிடித்தவர்தான் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதல் வாழ்த்தே சூப்பர் ஸ்டாரிடம் இருந்துதானாம்.       

 பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்த ‘தேவி’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னாவுக்கு இப்போது கூடுதல் மகிழ்ச்சி. தமன்னாவை கதாநாயகியாக வைத்து ‘தர்மதுரை’யை இயக்கியவர், சீனு ராமசாமி. இவருடைய அடுத்த படத்தில் ஹீரோ பிரபுதேவா. ‘‘தமன்னாவையே ஹீரோயின் ஆகப்போடுங்கள்’’ என பிரபுதேவா கோரிக்கை வைக்க... சந்தோஷமாகத் தலையாட்டினாராம், சீனு ராமசாமி. பிரபுதேவா நடிக்கும் இன்னொரு தமிழ்ப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கேத்தரின் தெரசாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்தில் பிரபுதேவா குங்ஃபூ மாஸ்டராக நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு, சிவகார்த்திகேயனை வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்குகிறார், ஜெயம் ராஜா. இது, உணவு அரசியலை மையமாகக் கொண்ட படமாம். அதனால், உணவு அரசியல் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொள்வதற்காக, அதுதொடர்பான வல்லுநர்கள் பலரையும் சந்தித்து விவாதித்தாராம். ‘நாம் சாப்பிடும் உணவுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலை இந்தப் படம் எளிமையாக எடுத்துரைக்கும்’ என்கிறார்கள், படக்குழுவினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்த லட்சுமி மேனனை, ‘றெக்க’ படத்துக்குப் பிறகு காணவில்லை. அந்தப் படத்தில் லட்சுமி மேனனின் தோற்றம், பலவாறு பேசப்பட்டது. அதனால், உடல் எடையைக் குறைப்பதற்கு மெனக்கெட ஆரம்பித்தார். பட்ட காலிலே படும் என்பதைப் போல அவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால், கைவசம் இருந்த ‘கருப்பன்’ என்ற ஒரே படமும் கையைவிட்டு நழுவிப்போனது. பெரும் வருத்தத்தில் இருக்கிறார், லட்சுமி.

ந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கிவரும் செல்வராகவனுக்கு, வரிசையாகப் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அடுத்ததாக, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை செல்வராகவன் இயக்கவிருந்தார். இந்த நேரத்தில், தனக்கு ஒரு படத்தை இயக்கித் தருமாறு அவரது தம்பி தனுஷ் கேட்டுள்ளாராம். இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் செல்வராகவன்.

‘எ
ன்னை வேலை செய்யவிடுங்க’ என்று பொது மேடையில் சிவகார்த்திகேயன் கதறியது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் பலரிடம் உதவி கேட்டும் எதுவும் நடக்காத நிலையில், கார்டன் வாரிசு ஒருவர்தான் பஞ்சாயத்து செய்துவைத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில், தன் அடுத்த படத்தின் வெளியீட்டு உரிமையை அந்த கார்டன் வாரிசுக்குக் கொடுத்துள்ளாராம், சிவகார்த்திகேயன்.

மியாவ் பதில்

‘பீட்டா’வோடு தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் தொடர்பில் இல்லையா?

 ‘பீட்டா ஒழிக... பீட்டா ஒழிக...’ என தமிழ்நாடே பொங்கிய நிலையில், அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், தன் பிறந்தநாளை ‘பீட்டா’-வின் வாழ்த்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டதற்கு முக்கியக் காரணமாக இருந்த பீட்டா அமைப்பின் விளம்பரத் தூதராக நடிகர், நடிகைகள் செயல்படக் கூடாது என்று மாணவர்களும், இளைஞர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நடிகர் சங்கமும் சொல்லியிருக்கிறது. இந்த நிலையில்தான், இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய விளம்பரப் படத்துடன், எமி ஜாக்சனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளது பீட்டா. அதில் நடித்திருப்பதும் எமி ஜாக்சன்தான். இது தமிழக மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் எமி.