Published:Updated:

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!
சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

க.ராஜீவ்காந்தி

பிரீமியம் ஸ்டோரி

கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் புது வரவாகத் தலைகாட்டியிருக்கும் அழகுக் கிளிகள்... ஓர் அறிமுகம்!

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

தன்ஷிகா

சல்லப்பெயர்: அம்மு

பிடிச்ச விஷயம்:
சாப்பிடறது. அடுத்து, என்னோட செல்லம்ஸ். வீட்டுல மொத்தம் நாலு செல்ல நாய்கள் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பேரு. கெல்லி, ஸ்னோயி, புஜ்ஜிபா, புதுசா யம்மினு ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு வந்திருக்கு.

மறக்கமுடியாத நாள்: 'பரதேசி’ வாய்ப்பு கிடைச்ச நாள்.

சென்டிமென்ட்: கடவுள் நம்பிக்கை மட்டும்தான். வெள்ளிக்கிழமைனா கோயில்ல அட்டென்டென்ஸ் போட்டுடுவேன்.

மறக்கமுடியாத கிஃப்ட்: 'பரதேசி’ல என் கேரக்டரோட போட்டோவை பாலா சார் ஃப்ரேம் பண்ணிக் கொடுத்தாரு. அதுதான் என்னோட பொக்கிஷம்!

நல்ல பழக்கம்: கஷ்டப்படறவங்களைப் பார்த்தா ரொம்ப இரக்கப்படுவேன்; உதவி செய்வேன்.

கெட்ட பழக்கம்:
கோபம் வந்தா உடனே காமிக்காம, உள்ளே வெச்சிருந்து லேட்டா காமிப்பேன். என்னோட சோடியாக் ஸைன் ஸ்கார்பியோ. அதனால என்னை யாராவது ஹர்ட் பண்ணா, அவங்க சீக்கிரமே வேற ஒருத்தரால ஹர்ட் ஆவாங்க.

லவ் லெட்டர்ஸ்:
ஸ்கூல் படிக்கும்போது நிறைய வந்திருக்கு. சீரியஸா இன்னும் லவ்வுல இறங்கலை. சினிமாவால லவ்வை மிஸ் பண்றேன்.

உங்களைப் பத்தி ஒரு ரகசியம்:
இது எல்லாமே ரகசியம்தாங்க.

ட்ரீம் பாய்: எனக்கு ஹிரிதிக் ரோஷன் ரொம்பப் பிடிக்கும். ட்ரீம் பாய் அப்படித்தான் இருக்கணும். நல்லவரா, என்னை நல்லா பாத்துக்க கூடியவர்தான் என்னோட சாய்ஸ்.

மொபைல் ஸ்கிரீன் ஸேவர்: என்னோட போட்டோதான்!

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

மஹிமா

பிடிச்சது:
டெய்ரி மில்க் சாக்லேட் கிடைச்சா குழந்தை மாதிரி குஷி ஆகிடுவேன்.

மறக்கமுடியாத நாள்: 'சாட்டை’ படத்தோட ஃபர்ஸ்ட் ஷாட்ல ஸ்கூல் ஸீன் எடுத்தாங்க. அந்த நாளை மறக்கவே முடியாது.

ட்ரீம் பாய்: ரொம்ப ஸ்வீட்டா இருக்கணும்; அன்பா பார்த்துக்கணும். மற்றபடி ஹேண்ட்ஸம், ரிச்லாம் முக்கியம் இல்லை.

மறக்கமுடியாத கிஃப்ட்: வாழ்க்கையே கடவுள் கொடுத்த கிஃப்ட்தாம்பா.

கேரக்டர்: ரொம்ப ஃப்ரெண்ட்லி. எப்பப் பார்த்தாலும் பேசிட்டே, சிரிச்சுட்டே இருப்பேன். என்னது பைத்தியமா? சொல்லிக்குங்க. திமிர் பிடிச்சவனு பேர் எடுக்குறதைவிட பைத்தியம்னு பேர் எடுக்குறது எவ்வளவோ பெட்டர்!

ஃபேவரிட் ஹீரோ:
இப்ப அவர் ஜோதிகா கஸ்டடியில்!

ஃபேவரிட் உணவு: சிக்கன் நூடுல்ஸ்

நல்ல பழக்கம்: ஈஸியா எல்லார்கிட்டேயும் க்ளோஸ் ஆகிடுவேன்.

கெட்ட பழக்கம்: சட்டுனு கண்ணுல வாட்டர் ஃபால்ஸ் வந்துடும்.

க்ளோஸ் ஃப்ரெண்ட்: என்னோட ஸ்கூல்மேட் ரூபி

ஃபேவரிட் டிரெஸ்: புடவை

ஹாபி:
குழந்தைகளோட கண்ணாமூச்சி விளையாடறது.

ரோல் மாடல்: என்னோட இங்கிலீஷ் மிஸ் லில்லி

ஒரு ரகசியம்: மஹிமா நிறைய பொய் சொல்வா. ரொம்ப இன்னோசென்ட் மாதிரி அவ அம்மாகிட்ட நடிச்சுக்கிட்டு இருக்கா. ஆனா, அவ ஒரு கிரிமினல்.

ஐந்து வருஷம் கழிச்சு..?: தமிழ் சினிமாவோட தவிர்க்கமுடியாத நடிகைகள் பட்டியல்ல சேரணும். கர்ச்சீப் போட்டுட்டு இருக்கேன். ப்ளெஸ் பண்ணிக்குங்கப்பா!

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

காயத்ரி

பிடிச்சது: எதையுமே எதிர்பார்க்காம ஹெல்ப் பண்றவங்களைப் பிடிக்கும்.

பிடிக்காதது: - கார் ஓட்டும்போது அநாவசியமா ஹார்ன் அடிக்கிறவங்க.

பாலிஸி: லைவ் அண்ட் லெட் லைவ்.

ட்ரீம் பாய்: நல்ல ஹைட்டா, க்யூட்டா, ஹேண்ட்ஸமா இருக்கணும். முக்கியமா, என் அப்பா, அம்மாவுக்குப் பிடிக்கணும்.

மறக்கமுடியாத கிஃப்ட்: என் பேரண்ட்ஸ் என்னோட ஃபர்ஸ்ட் பர்த்டேக்கு வாங்கித் தந்த பொம்மையைக்கூட பத்திரமா வெச்சிருக்கேன்.

கேரக்டர்: வீட்டுல அராத்து; வெளில சாந்தம்.

ஃபேவரிட் ஹீரோ: உலக நாயகன்

ஃபேவரிட் உணவு:
ஹனி கிரிஸ்பி சில்லி பொட்டேட்டோ

சமைக்கத் தெரிந்த ஐட்டம்: அதுவே, நல்லா சமைப்பேன்பா!

நல்ல பழக்கம்: அப்படி எதுவும் தென்பட்டா சொல்றேன்.

கெட்ட பழக்கம்: சோம்பேறித்தனம்.

க்ளோஸ் ஃப்ரெண்ட்: ஸ்கூல் டயத்துலேருந்து நாங்க நாலு பேரு கேங்கா இருக்கோம்.

ஃபேவரிட் டிரெஸ்: ஜீன்ஸ், டாப்ஸ்

பயம்: பயமே என்னைப் பார்த்தா பயப்படும்.

ரோல் மாடல்: அம்மா (எங்க அம்மாவைச் சொன்னேன்!)

கவர்ந்த லவ் ப்ரப்போஸ்: காலேஜ்ல நிறைய வந்திருக்கு. இப்பல்லாம் வர்றதில்லையே..!

இஷ்ட தெய்வம்:
கடவுள் நம்பிக்கையே கிடையாது.

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

பானு

சென்டிமென்ட்:
அம்மா சென்டிமென்ட் அதிகம். நான் ஒரு அம்மா பொண்ணு!

ட்ரீம் பாய்: யாரா இருந்தாலும் ஓகே! கண்டிஷன்லாம் போட்டா பயந்து ஓடிடுவாங்க.

மறக்கமுடியாத கிஃப்ட்:
கிஃப்ட்டே பிடிக்காது. நான் ரொம்ப சிம்பிள்!

கேரக்டர்: எதையுமே பெரிசா எடுத்துக்க மாட்டேன்.

ஃபேவரிட் ஹீரோ: விஷால்

ரகசிய சிநேகிதன்: தேடிட்டு இருக்கேன். சீக்கிரம் மாட்டாமலயா போயிடுவான்.

ஃபேவரிட் உணவு: கேரளா ஃபுட் எல்லாமே! முக்கியமா ஃபிஷ் கறி.

சமைக்கத் தெரிந்த ஐட்டம்: பெப்பர் சிக்கன்.

நல்ல பழக்கம்: சினிமா, சினிமா, சினிமா.

கெட்ட பழக்கம்: யார்கூடவும் கான்டாக்ட்ல இருக்கிறதில்லை. ஹாய், பை மட்டும்தான்!

க்ளோஸ் ஃப்ரெண்ட்: பிஜு. எங்க ஏரியா சர்ச் ஃபாதர்.

ஃபேவரிட் டிரெஸ்: தாவணி

ரோல் மாடல்: நயன்தாரா

கவர்ந்த லவ் ப்ரப்போஸ்: போங்க பாஸ்! ஒண்ணுமே வரலையேங்கற கவலையில இருக்கேன்.

அஞ்சு வருஷம் கழிச்சு: பிஸியா இருக்கணும். (இப்ப ஃப்ரீயா இருக்கீங்களா?)

இஷ்ட தெய்வம்:
மேரி

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

ஐஸ்வர்யா

பிடிச்சது: ஷாப்பிங். என்கூட வந்தா பர்ஸ் என்ன, சொத்தே காலியாகிடும்.

பிடிக்காதது:
வெட்டியா இருந்தா பிடிக்கவே பிடிக்காது.

ட்ரீம் பாய்: செமையா இருக்கணும். வெளில போனா அட்லீஸ்ட் நாலு பொண்ணுகளாவது ஜொள்ளு விடணும். ஆனா, அவன் என்னை மட்டும்தான் பார்க்கணும். (இது போங்கு!)

மறக்கமுடியாத கிஃப்ட்: என்னோட சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட் சுபா, என்னோட பர்த் டேக்கு வாங்கித் தந்த வாட்ச்.

கேரக்டர்: ரொம்ப ஜோவியல். ஆனா, ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட். மனசுல எதையுமே வெச்சுக்க மாட்டேன்.

ஃபேவரிட் ஹீரோ: ஷாருக்கான். என்னோட ட்ரீம் ஹீரோ அவர்தாங்க.

ஃபேவரிட் உணவு: நான் ஒரு சரியான சாப்பாட்டு ராமி. நடுராத்திரி 1 மணிக்கு பிரியாணி கொடுத்தாக்கூட வெட்டுவேன்.

சமைக்கத் தெரிந்த ஐட்டம்:
ஆந்திர ஸ்பெஷல் மீன் குழம்பு நான் வெச்சு நீங்க சாப்பிட்டா, எனக்கு அடிமையாகிடுவீங்க.

நல்ல பழக்கம்: உண்மையா கஷ்டப்படறவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்.

கெட்ட பழக்கம்: பயங்கரக் கோபக்காரி. கோபம் வந்தா யாரா இருந்தாலும் காலி.

ஹம்மிங் சாங்: இன்னும் கொஞ்ச நேரம்... (மரியான்)

பயம்: இடி

ரோல் மாடல்: சிம்ரன், கஜோல், ஸ்ரீதேவி.

லவ் லெட்டர் எண்ணிக்கை: நிறைய. கணக்கு வெச்சுக்கலையே!

5 வருஷம் கழிச்சு: வித்யாபாலன் மாதிரி ஆகணும். ('டர்ட்டி பிக்சர்ல’ நடிப்பீங்களா?)

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

நஸ்ரியா நசீம்

செல்லப்பெயர்: நச்சு, நாசீ. எனக்கு நாசீன்னு கூப்பிட்டாதான் ரொம்பப் பிடிக்கும்.

பிடிச்சது: கண்ணைப் பார்த்துப் பேசறவங்களை.

பிடிக்காதது: பொய் சொன்னா, பேச்சு கா!

மறக்கமுடியாத நாள்: 1994 டிசம்பர் 20. என் பிறந்த நாள். அடுத்த வருஷம் இதே நாள்லதான் என் தம்பியும் பிறந்தான். அதனால இந்த நாளை மறக்கமுடியாது. அடடா! ஏதோ ஆர்வத்துல நான் பிறந்த வருஷத்தைச் சொல்லிட்டேனே. டெலிட் பண்ணிடுங்க, ப்ளீஸ்! 

சென்டிமென்ட்:
இதுவரைக்கும் ஒண்ணும் இல்லை. நான் அவ்ளோ சீரியஸான பொண்ணுல்லாம் இல்லைப்பா.

மறக்கமுடியாத கிஃப்ட்: நிறைய இருக்கு. என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பொக்கே, கார்டு, கிஃப்ட்டை என் வீட்டு வாசல்ல வெச்சிட்டுப் போறாங்க. அது யார்னு இன்னும் தெரியலை. ஆனா, அந்த கிஃப்ட்டை பத்திரமா வெச்சிருக்கேன்.

கேரக்டர்: ரொம்ப சிம்பிளான பொண்ணு. ஜாலியா இருப்பேன்.

ஃபேவரிட் கலர்: கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

ஃபேவரிட் ஹீரோ: தமிழ்ல தல அஜித்; மலையாளத்துல மம்மூட்டி; இந்தியில ஷாரூக். எல்லா ஸ்டேட்லயும் நடிக்கணும்ல.

ரகசிய சிநேகிதன்:
யாரும் இல்லை. இப்போதைக்கு சினிமா மட்டும். வந்ததும் ஃபர்ஸ்ட் உங்ககிட்டதான் சொல்வேன்.

ஃபேவரிட் உணவு: சிக்கன்ல எந்த டிஷ்ஷா இருந்தாலும், ஒரு கை பார்த்துடுவேன்.

நல்ல பழக்கம்: வெளியில நான் ரொம்ப அமைதி!

கெட்ட பழக்கம் :
பயங்கரமா கோபப்படுவேன்.

க்ளோஸ் ஃப்ரெண்ட்: சரண்யா. என் ஸ்கூல்மேட். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆகியிருக்காங்க.

ஃபேவரிட் ட்ரிங்ஸ்: ஒன்லி கோக் (வேற எதுவும் இல்லப்பா?)

பயம்: மனிதர்களைத் தவிர, பார்க்குற வித்தியாசமான புழு, பூச்சிகளைப் பார்த்தா பயம்!

ஹாபி: பேசியே கொல்வேன்

ஃபேவரிட் ஸ்பாட்: ஸ்விட்சர்லாந்து

பெட்ரூம் பார்ட்னர்: டெடி பியர் பொம்மை. அதுக்கு ஃபிடோ டிடோன்னு பேரு வெச்சிருக்கேன். ரைமிங்கா இருக்குல்ல?

காதலன் தகுதிகள்: உண்மையா இருக்கணும். பொய் சொல்லக் கூடாது. நல்லா பார்த்துக்கணும். அன்பா இருக்கணும். எனக்குன்னா உசுரையும் விடணும்.

முதல் சம்பளம்:
அஞ்சாவது படிக்கும்போதே சைல்ட் ஆர்டிஸ்ட்டா நடிச்சதால ஞாபகம் இல்லை.

பேங்க் பாலன்ஸ்:
அப்பாகிட்டதான் கேக்கணும்

இஷ்ட தெய்வம்: கடவுள் நம்பிக்கை இருக்கு. எல்லாக் கடவுளையும் வணங்குவேன்.

முதல் முத்தம்: அப்பா, அம்மா கொடுத்ததுதான்! நீங்க கேட்குறது வேற எதையோன்னா, ஆளை விடுங்க!

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

ஆருஷி

செல்லப்பெயர்: அம்மு

மறக்கமுடியாத நாள்: என்னோட ஸ்கூல் டேஸ்!

ட்ரீம் பாய்: எனக்கு ஹிரிதிக் ரோஷன்னா ரொம்ப பிடிக்கும். அவர் மாதிரி இருக்கணும்.

கேரக்டர்:
ரொம்ப ஸாஃப்ட்

ஃபேவரிட் கலர்: பிங்க்

ஃபேவரிட் ஹீரோ: எல்லாரையும் பிடிக்கும். (வெவரமான பொண்ணு)

ரகசிய சிநேகிதன்: யாரும் இல்லையே!

ஃபேவரிட் உணவு: சிக்கன்ல எது கொடுத்தாலும் ஓகே!

சமைக்கத் தெரிந்த ஐட்டம்: நல்லா வென்னீர் போடுவேன்.

நல்ல பழக்கம்:
பெட் அனிமல்ஸ் மேல பிரியமா இருப்பேன்.

கெட்ட பழக்கம்: என்ன சொன்னாலும் நம்பிடறேன்னு அம்மா திட்டுவாங்க.

க்ளோஸ் ஃப்ரெண்ட்:
ஜோஸ்னா. ஹைதராபாத்ல இருக்கா.

ஃபேவரிட் டிரெஸ்: எல்லாமே.

ஃபேவரிட் ட்ரிங்ஸ்: ட்ராப்பிகோனா (எதை எதிர்பார்த்தீங்க?)

ஃபேவரிட் மியூசிக்:
யுவனோட ராஜா ராணி ஆல்பம்.

பர்த் டேட்: யேய், அதெல்லாம் எதுக்கு? சொல்ல முடியாது.

ஹம்மிங் சாங்: கனிமொழியே... (இரண்டாம் உலகம்)

பயம்: காக்ரோச்

தூக்கம் வரலைனா?:
சான்ஸே இல்லை.

நான் ஒரு கும்பகர்ணி.

ஹாபி: ஷட்டில்காக்

ரோல் மாடல்: தெரசா

லவ் லெட்டர் எண்ணிக்கை:
எக்கச்சக்கம்பா!

ஒரு ரகசியம்: அது ரகசியமாகவே இருக்கட்டுமே!

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

மிருதுளா

செல்லப் பெயர்:
வீட்ல அம்மு. வெளியே மிருது. நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். ஆனா, மிருதுன்னு கூப்பிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

சென்டிமென்ட்: எப்பவும் என் கையில சின்னதா அழகா ஒரு நடராஜர் சிலை இருக்கும். எங்கே போனாலும் என்கூட வரும் தோழன் நடராஜர்தான்.

ட்ரீம் பாய்: எனக்கு 20 வயசுதான் ஆகுது. ட்ரீம் பாய் பத்தி இனிமேதான் யோசிக்கணும்.

ஃபேவரிட் ஹீரோ: ஒன் அண்ட் ஒன்லி சூர்யா. இதுல நோ காம்ப்பரமைஸ்.

ஃபேவரிட் கலர்:
ப்ளூ. வானம், கடல்னு எல்லாம் ப்ளூவா இருக்குறதால ரொம்ப ரொம்பப் பிடிக்கும். 

கேரக்டர்: நான்ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருப்பேன்.

ஃபேவரிட் உணவு: அம்மா சமைக்குற எல்லாம்.

நீங்க சமைப்பீங்களா?: எல்லா ஸ்டைல்லயும் சமைப்பேன். வேணும்னா ஒரு ஃபெஸ்டிவல் வெச்சு டெஸ்ட் பண்ணிப் பாருங்க.

கெட்ட பழக்கம்: கோபம் அதிகமா வரும். பக்கத்துல அப்போ யார் இருந்தாலும் ஒரு வழி பண்ணிடு வேன்.

ஃபேவரிட் டிரெஸ்: புடவை. யோசிச்சிருக்கவே மாட்டீங்கள்ல? 

பிறந்த நாள்: 6.12.1992. நிஜமாத்தான் சொல்றேன்.

பயம்: பல்லி

பொழுதுபோக்கு: பெயின்டிங் பண்ணுவேன். நானே ஒரு பெயின்டிங்தானே!

ஃபேவரிட் ஸ்பாட்:
எங்கேயும் எப்போதும் 'கோவா’

ஃபேவரிட் கடவுள்: கிருஷ்ணன், சாய்பாபா

முதல் சம்பளம்: 500 ரூபாய். டான்ஸ் பெர்ஃபார்மன்ஸுக்காக வாங்கினது. இன்னும் என்கிட்ட பத்திரமா இருக்கு.

பிடிச்ச புக்: ஹாரிபாட்டர்

பிடிச்ச கேரக்டர்: 'பருத்திவீரன்’ பிரியாமணி.

சினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்!

சஞ்சிதா ஷெட்டி

ட்ரீம் ரோல்: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தர்ற எல்லா ரோலுமே எனக்கு ட்ரீம் ரோல்தான்.

கேரக்டர்: ஒரு இடத்துல என்னால கொஞ்ச நேரம்கூட உட்கார்ந்து இருக்க முடியாது. எதையாவது உருட்டிக்கிட்டே இருப்பேன்.

ஃபேவரிட் ஹீரோ: சூப்பர் ஸ்டார். அவர் ஸ்டைலும்

பஞ்ச் டயலாகும் எனக்கு எப்பவுமே ஸ்பெஷலா பிடிக்கும்.

பயம்: இருட்டு. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா இருட்டுல தனியா இருக்க ப்ராக்டிஸ் பண்றேன்.

சென்டிமென்ட்: நிறைய இருக்கு. கேன்சர் வந்த சின்னக் குழந்தைங்களை சில பெற்றோர்கள் ஹாஸ்பிடல்லயே விட்டுட்டுப் போறதைப் பார்த்து நாள் முழுக்க அழுதிருக்கேன். நான் கொஞ்சம் எமோஷன் பெர்சன்னு அப்போதான் எனக்கே தெரிஞ்சது.

ப்ளஸ்: முதல்ல மைனஸ்ஸை சொல்லிடறேன். தெரியாம ஏதேதோ பேசிடுவேன். இப்போ அமைதியா இருக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா, முடியலப்பா.

ஃபேவரிட் கடவுள்:
ஆன்மிகம் பிடிக்கும். ஆனா, குறிப்பிட்ட கடவுள்னு சொல்ல முடியாது. யோகா, மெடிடேஷன் தொடர்ந்து ஃபாலோ பண்றேன்.

மொபைல் ரிங்டோன்: எப்பவும் சைலன்ட்லதான் வெச்சிருப்பேன். இப்பவாவது நான் சைலன்ட் பொண்ணுன்னு சொல்லுங்களேன்பா.

முதல் சம்பளம்:
அதெல்லாம் எப்படி சொல்ல முடியும்?

க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்: கவிதா, வெண்ணிலா. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். என்னோட சேட்டை தாங்க முடியாம அலறுவாங்க.

ஃபேவரிட் கலர்: ஆரஞ்ச்

ஃபேவரிட் டிரெஸ்: ஜீன்ஸ், டி ஷர்ட்ல சிம்பிளா இருப்பேன். அதான் என் ஃபேவரிட்.

ஃபேவரிட் மியூஸிக்:
மெலடிக்கு ரஹ்மான் சார்; குத்துப்பாட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜா.

பிறந்த நாள்:
ஏப்ரல் 7. 1989. இன்னும் பத்து வருஷத்துக்கு இதுதான்.

முதல் முத்தம்:
அய்யோ... ஆள விடுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு