``கேளுங்க... கேளுங்க. ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகப் படிக்கும் நம்ம பையனுக்கு, இப்பதான் கோச்சிங் கொடுத்திருக்கேன். இதுகூட சொல்லலைன்னா எப்படி?'' எனக் குஷியாகிறார் நடிகர் சிவா.

``டான்ஸ் பற்றிக் கேட்டீங்கன்னா பாயின்ட் பாயின்ட்டா சொல்லி, நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிடுவேன். ஆனா, நீங்க எதைப் பற்றிக் கேக்கப்போறீங்கனு தெரியலையே!'' எனக் கலவரமாகிறார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.

``கோயில்ல சாமி கும்பிட வந்தேன். நல்ல தரிசனம். எல்லாரும் சாமி கும்பிட்டு எக்ஸாம் எழுதுவாங்க. நான் கோயில்லேயே எக்ஸாம் எழுதப்போறேன்'' எனச் சிரிக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நட்சத்திரா.

``நான் ஜி.கே-வுல வீக்னு எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு, என்னைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க. இப்பப் பாருங்க... எப்படி பதில் சொல்றேன்னு'' - உற்சாகமாகிறார் ஆடை வடிவமைப்பாளர் நிரஞ்சனி அகத்தியன்.

`` `ஸ்லீப்பர் செல்' என்றால் என்ன?''

பதில்: மக்களோடு மக்களாக இருக்கும் தீவிரவாதிகளையே `ஸ்லீப்பர் செல்' என்போம்.

சிவா: ``ரொம்ப ஈஸி பிரதர். கேள்வியிலேயே பதில் இருக்கே. செல் மேல படுத்துட்டுத் தூங்குறவன்தான் `ஸ்லீப்பர் செல்'னு சொல்வாங்க. இப்ப எல்லாம் தூங்கும்போது செல்லை நோண்டிக்கிட்டே தூங்குறாங்கல. அதுதான் `ஸ்லீப்பர் செல்'னு ஒரு பேரா உருவாகிடுச்சு. சரியா?'' எனக் கேட்டுச் சிரித்தவர், ``நான் கலாய்க்கிறேனா இல்லை சீரியஸா சொல்றேனானு உங்களால் கண்டுபிடிக்க முடியலைதானே? அதுதான் எனக்கு வேணும்!''

தினேஷ்: ``ஜெயில் செல்லுக்குள்ள ஜாலியா தூங்குறவனைத்தான் `ஸ்லீப்பர் செல்'னு சொல்வாங்க. பொண்டாட்டி, டிராஃபிக், பொல்யூஷன்னு எந்தத் தொல்லையும் இல்லாம ஜெயில் செல்லுக்குள்ள சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்குறவங்க. (சிரிக்கிறார்) நீங்க ஜாலியா கேள்வி கேட்டீங்க, நானும் ஜாலியா பதில் சொன்னேன். சரி, உண்மையான பதில், மக்களோடு மக்களா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பாங்க. அவங்களைத்தான் `ஸ்லீப்பர் செல்'னு சொல்வாங்க. சரிதானே பிரதர்?''

நட்சத்திரா: `` `துப்பாக்கி' படத்துல விஜய் துழாவித் துழாவிக் கண்டுபிடிப்பாரே... அவங்கதான் ஸ்லீப்பர் செல். டிப்டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு, மக்கள்கூடவே வேலை செஞ்சுட்டு இருப்பாங்க. ஒருநாள் பட்டுனு வெளியே வந்து பயங்கரவாதியா மாறுவாங்க. அப்பாடா! முதல் கேள்விக்கே சரியான பதிலைச் சொல்லிட்டேன்.''

நிரஞ்சனி அகத்தியன்: `` `ஸ்லீப்பர் செல்' வெளியே தெரிய மாட்டாங்க. அவங்க பாஸ் யாருன்னு அவங்களுக்கும் தெரியாது. ஆனா, ஒருநாள் அவங்களுக்கு ஏதோ வேலை வரும். அந்த நாச வேலையைச் செய்யும் முன்னாடியே நம்ம இந்தியன் போலீஸ் அவங்களைப் பிடிச்சுடுவாங்க. சரியா?''

``H-1B விசாவில் செல்பவர்களுக்கு, இனி குறைந்தபட்சம் எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது?''

பதில்: வருடத்துக்கு 1,30,000 டாலர்.

சிவா: ``ஜஸ்ட் இப்பதான் அமெரிக்காவுல இருந்து வந்தேன். எனக்கேவா? வருஷ சம்பளமா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. இதை நாம பாசிட்டிவா எடுத்துக்கவேண்டியதுதான். நம்ம நாட்டுக்காரங்க இனி அமெரிக்காவுக்குப் போறது ரொம்பவே குறைஞ்சுடும். அந்த சூப்பர் பிரெய்ன்ஸ் எல்லாம் இந்தியாவிலேயேதான் இருப்பாங்க. இந்தியாவும் இனி முன்னேறிடும். இன்னொரு கருத்து சொல்லணும்னா, நம்ம பசங்களுக்குக் குறைந்தபட்சம் இந்தச் சம்பளம்கூடக் கொடுக்கலைன்னா எப்படி பாஸ்? கருத்தா பேசுறேன்ல.''

தினேஷ்: ``அமெரிக்கா எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், நாம அவங்க நாட்டுக்குனு இல்லை... எந்த நாட்டுக்குமே வேலைக்குப் போகக் கூடாது என்பதுதான் என் கருத்து. ஹெச்-1, ஜி-1னு எந்த விசாவும் தேவையில்லை. தமிழ்நாட்டுல ஒரு வங்கி மேலாளர் 80 ஆயிரம் ரூபாய் சம்பளத்தைவிட்டுட்டு, நாட்டு மாடு வாங்கிப் பால் கறந்து சம்பாதிக்கிறார். இதுதான் தனக்கு சந்தோஷம்னு சொல்றார். இதைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களும் இதைப் பற்றி யோசிக்கணும். கொஞ்சம் சீரியஸா பேசுறேனோ பிரதர்..? கேள்வி அப்படி.''

நட்சத்திரா: ``10 லட்சம் டாலர்னு நினைக்கிறேன். நானும் அமெரிக்கா போகணும்னு ப்ளான் பண்றேன். அதுக்குள்ள இந்த ட்ரம்ப் எதுவும் ரூலை மாத்தாம இருக்கணும்.''

நிரஞ்சனி அகத்தியன்: ``மூணு லட்சம் டாலரா? இல்லை இல்லை. வெயிட் பண்ணுங்க'' என்றவர் விரல்களை நீட்டி, எதையோ எண்ணி எண்ணிப் பார்க்கிறார். ``ஆங்... ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்னு நினைக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் இந்திய ரூபாய்படி தொண்ணூறு லட்சம் ரூபாயைத் தாண்டிடும். செம சம்பளம்பா!''

``அரசியல் கட்சிகள், இனி ரொக்கமாக எவ்வளவு ரூபாய் மட்டுமே நன்கொடையாகப் பெற முடியும்?''

பதில்: 2,000 ரூபாய்.

சிவா : ``ரொம்ப சிம்பிள் பிரதர். அரசியல் கட்சிக்கு நாம பணம் தர வேண்டாம். அவங்களும் பணம் கொடுக்க வேண்டாம். நேர்மை முக்கியம்!''

தினேஷ் : ``2,000 ரூபாய் மட்டும்தான் ரொக்கமாகத் தர முடியும்னு சொல்லியிருக்காங்க. ஆனா, எனக்கு ஒரு டவுட். தினமும் ஒருத்தர் 2,000 ரூபாய் பணமா ஒரு கட்சிக்குக் கொடுத்துவந்தால், மாசத்துக்கு அதுவே ஒரு பெரிய தொகைதானே? இதை எல்லாம் எப்படித் தடுக்கப்போறாங்கனு தெரியலை. ஆனா, அரசியல் கட்சிகள் தேர்தலின்போது மக்களுக்கு ரொக்கமாகப் பணம் கொடுக்காமல் இருந்தால் சரிதான்.''

நட்சத்திரா: ``நான் ஒரு ரூபாய்கூட அவங்களுக்குப் பணம் தர மாட்டேங்க. யாருமே அரசியல் கட்சிகளுக்குப் பணம் தரக் கூடாது. அவங்களும் தர வேணாம். டீல் ஓ.கே-வா?''

நிரஞ்சனி அகத்தியன்: ``இப்ப இருக்கிற தமிழ்நாடு அரசியல் நிலவரப்படி பார்த்தா, அரசியல் செய்திகள் எதுவும் தெரிஞ்சுக்கணும்னே தோண மாட்டேங்குது. ஆனா, இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும். 2,000 ரூபாய்.''

``ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, எந்த அடைமொழியுடன் அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்?''

பதில்: மக்கள் தலைவி.

சிவா: ``பிரதர், நீங்க `ஜாலி கேள்விகள்'னு சொல்லிட்டு, அரசியல் கேள்விகளா கேட்டுட்டு இருக்கீங்க. நான் ஆட்டத்துல இருந்து விலகிக்கிறேன். மேலே சொன்ன பதில்களை எல்லாம் அழிச்சுட்டு மறந்துடுங்க.''

தினேஷ்: ``ஆஹா... ஒருவேளை தீபாவையும் `சின்னம்மா'னு கூப்பிடுவாங்களோ! அவங்க தலைவரை அவங்க எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். மக்கள் எப்படிக் கூப்பிடப்போறாங்க. மக்கள் கருத்து என்ன என்பதுதான் முக்கியம்.''

நட்சத்திரா: ``தீபாவையா? தெரியலையே ப்ரோ... ஒருவேளை `அம்மா பார்ட்-2'னு அழைக்கலாம். அவங்க லீடர். அவங்க இஷ்டம். நாம எப்படிக் கருத்து சொல்ல முடியும்?

நிரஞ்சனி அகத்தியன்: `` `தீபாம்மா... தீபாம்மா'னு கூப்பிடுவாங்க. அவங்க கட்சி... அவங்க உரிமை! சிம்பிள்.''