தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்

சினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்

மொழிதீபா ராம்

சினிமா பிறந்த காலத்தில் இருந்தே, அது பல புதுப்புது வார்த்தைகளை ஆங்கில அகராதிக்கு தந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி சில வார்த்தைகளை அலசுவோம்!

சினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்

Smell-O-Vision

இந்த வார்த்தை சினிமா சம்பந்தப்பட்டதுதான். திரையில் தோன்றும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று 1960-களில் வாசனைத் திரவியங்களை, படம் ஓடும்போது (plot-related scents), திரையரங்கில் தெளிப்பார்களாம். இன்றைக்கு இந்த வாசனை திரவியம் தெளிக்கும் முறை இல்லாவிட்டாலும், இந்தச் செயலால் உருவான வார்த்தை Smell-O-Vision மட்டும் நிலைத்துவிட்டது!

Silver Screen


சினிமா தோன்றிய காலத்தில் மக்கள் தியேட்டர்களுக்குச் செல்லும்போது Movie Screens - அதாவது படம் காட்டப்படும் திரையை ஒருவித ஒளிச்சிதறல் ஏற்படுத்தும் பெயின்ட் (Reflective Metallic Paint) பூசி வைத்திருந்தார்களாம். இதனால், திரை பளபளவென இருக்குமாம். 1920-ம் ஆண்டு வாக்கில், இப்படி ஸ்பெஷல் ஆக உருவாக்கிய திரையின் பெயரே சினிமாவைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு வகையில் Silver Screen என்பது `உருவக’ வார்த்தையே. Metonymy என்று இதை ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

Geva Color

அந்தக்காலத்தில், எம்.ஜி.ஆர் நடித்த `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம் பார்க்காதவர்கள் குறைவே. இந்தப்படம் கறுப்பு - வெள்ளையாக இல்லாமல், ஒரு வித சிவப்பு போன்ற அரக்கு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் கேவா கலர்.

Blockbuster

இப்போதெல்லாம் Blockbuster திரைப்படம் என்றால் பெரும் வெற்றி பெற்ற ஜனரஞ்சகமான திரைப்படம் என்றே அர்த்தம். உண்மையில் இரண்டாம் உலக போரின் யுத்த களத்தில் பெரும் கட்டடத் தொகுப்பை அடியோடு அழிக்கும் வல்லமை பொருந்திய ஒரு வெடிகுண்டைத்தான் Blockbuster என்று ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் கூறினார்கள். இதை அறிந்த ஆங்கிலப் பத்திரிகைகள் இந்த வார்த்தையை நாளிதழ்களில் பயன்படுத்தத் தொடங்கினர். போர் முடிந்த பின்னும் இந்த நாசகார Blockbuster வெடிகுண்டை மறக்க முடியாமல் இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை ருசிகரமாக்க, நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம் தேவைப்பட்டது. 1943-ம் ஆண்டு, Photoplay என்ற நாளிதழ் முதன்முதலில் Blockbuster எனும் வார்த்தையை சிறந்த பொழுதுபோக்கு அம்சமுள்ள ஒரு திரைப்படத்தை குறிப்பிடப் பயன்படுத்தியது. அதுவே இன்றும் தொடர்கிறது!