Published:Updated:

மிஸ்டர் மியாவ்: வாரிசு ரெடி!

மிஸ்டர் மியாவ்: வாரிசு ரெடி!

பிரீமியம் ஸ்டோரி
##~##
கார்த்திக்கின் வாரிசு கௌதம் வெளிநாட்டில் படித்து வருவதாகச் சொல்வது சும்மாவாம்! பெங்களூருவில் பிஎஸ்.சி. முதலாம் ஆண்டு படிக்கிறாராம் அந்த இளங் காளை. 'ராவணன்’ படப்பிடிப்பின்போதே கௌதமின் கால்ஷீட் கேட்டார் மணிரத்னம். கார்த்திக் பிடி கொடுக்கவில்லை. அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது. முதன்முதலாக கௌதம் அரிதாரம் பூசும் படத்தை கார்த்திக்கே இயக்குவதாக முடிவு!. 

• மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருந்த 'மைனா’ அமலா பாலுக்கு, இப்போது ஆகாசத்தை உரசும் அளவுக்கு றெக்கை முளைத்துவிட்டது.  இயக்குநர் விஜய் படைப்பில் விக்ரமுடன் நடித்து வருகிறார். அடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்துக்கும் அமலா பாலையே ரெக்கமென்ட் பண்ணும் ரேஞ்சுக்கு, விக்ரமுக்கு அப்படியரு ஈர்ப்பாம் இவர் நடிப்பின் மீது!

மிஸ்டர் மியாவ்: வாரிசு ரெடி!

• தே.மு.தி.க. கட்சியின் மாநாடு போல 'விருதகிரி’ படத்தின் கேசட் மேளாவை விசேஷத் திருவிழா ஆக்கினார் விஜயகாந்த். ''எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியானபோது ஆளும் கட்சி என்னென்ன குடைச்சல் கொடுத்ததோ... அதே நிலை 'விருதகிரி’க்கும் ஏற்படும். அதையும் தாண்டி வெல்வார், விஜயகாந்த்!'' என்று மைக்கைப் பிடித்த எல்லோரும் உள்ளீடுவைத்து ஒப்பீடு செய்தனர். ஏகப்பட்ட நட்சத்திரங்கள், ஸ்டார் டைரக்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடிகைகளைக் காணவில்லை. ஸோலோ பெர்ஃபாமென்ஸ் காட்டிய ஒரே நடிகை மோனிகா. மேடையில் ஏன் 'கறுப்பு நிலா’ பாட்டு பாடலை மோனி?

மிஸ்டர் மியாவ்: வாரிசு ரெடி!

• ஜீசஸ் கருணையால் ஜெயித்தேன் என்று உருகிய டைரக்டருக்கு ஓர் அதிர்ச்சி.  டைரக்டரின் அடுத்த படத்துக்கு ஹீரோக்கள் பலர் காத்திருக்க, பெரிய இடத்து போன் அதிரவைத்ததாம். ''முதலில் பாரம்பரியப் படத்து ஹீரோவை வைத்து டைரக்ஷன் செய்யுப்பா...'' என்று செல்போன் செப்பியதாம்!

மிஸ்டர் மியாவ்: வாரிசு ரெடி!

• கலையுலகில், மஞ்சள் காவடி தூக்கிய ஜால்ரா கோஷ்டியை சல்லடை போட்டுக் கணக்கெடுத்து வருகிறதாம், தோட்டத்தின் ரத்தங்கள். அதனால் அரண்டுபோன ஃபிலிம் பிரபலங்கள், காபந்துக்காக கால் மாறுவது குறித்து மண்டை காய டிஸ்கஷன் நடத்துகிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு