Published:Updated:

`நடிகர் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு! கேரள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய நடிகைகள்

சிந்து ஆர்
`நடிகர் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு! கேரள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய நடிகைகள்
`நடிகர் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு! கேரள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய நடிகைகள்

டிகர் திலீப், கேரள நடிகர்சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகிய நடிகைகள் சங்கத்தை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக மோகன்லால் பதவி ஏற்று முதல் பொதுக்குழுக் கூட்டம் முடிந்த உடனே, சர்ச்சைகளும் வரிசைகட்டி நிற்கின்றன. பிரபல நடிகைக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த வழக்கில் கைதானதால், நடிகர் சங்கத்தை விட்டு நீக்கப்பட்ட திலீப், மீண்டும் சேர்க்கப்பட்டார். இதற்கு, நடிகைகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், நடிகர் சங்கம் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து கோபமான  ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர், கேரள நடிகர் சங்கமான 'அம்மா'-விலிருந்து வெளியேறினர். நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறுவதுகுறித்த அறிவிப்பை நடிகைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகை கீது மோகன்தாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நடிகர் சங்கத்திலிருந்து விலகும் முடிவை நான் இதற்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். என் தோழிக்கு ஆதரவாக நான் நடிகர் சங்கத்தின் வெளியில் இருந்து போராடுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரீமா கல்லிங்கல், "நான் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறுவது ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு மட்டும் அல்ல. தொழில்செய்யும் இடத்தில் சமரசம் இல்லாமல், ஆத்மார்த்தமாக தொழில்செய்யலாம் என்ற எண்ணம் அடுத்த தலைமுறைக்கு ஏற்படுவதற்காகத்தான் நான் விலகுகிறேன்" என ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுள்ளார். மேலும், நடிகைகள் கூட்டமைப்பான wcc தொடங்கியபோது, நடிகர்கள் தங்கள் ரசிகர்கள்மூலம் தொல்லை கொடுத்ததாகவும், நடிகைகள் ஃபேஸ்புக் பக்கத்தில் பொங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல நடிகைகள் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.