Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

டுத்தடுத்து படங்களில் கமிட் ஆவதில் விஜய்யும் அஜித்தும் சற்று மாறுபடுவார்கள். பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங் முழுமையான கையோடு, அடுத்த படத்தில் கமிட்டாகிவிடுவார் விஜய். ஆனால், படம் ரிலீஸுக்குத் தயாரான நிலையிலும், சிறு ஓய்வுக்குப் பின்னரே அடுத்த படம் பற்றி யோசிப்பது அஜித் ஸ்டைல். தற்போது சிவா இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் முழு வேலைகளும் முடிந்துவிட்டன. ஒரு ‘ஷார்ட் ட்ரிப்’ செல்லத் திட்டமிட்டிருக்கிறார் அஜித்.

மிஸ்டர் மியாவ்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்துக்கு நாயகி கிடைப்பதில் சிக்கல். `சண்டக்கோழி’யில் நடித்த மீரா ஜாஸ்மின் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதால், கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால், இருவருமே நடிக்க மறுத்துவிட்டார்கள்.

‘ச
ங்கமித்ரா’... 250 நாட்கள் கால்ஷீட், 350 கோடி பட்ஜெட் என்று மெகா திட்டத்தில் சுந்தர்.சி களம் இறங்கியிருக்கும் வரலாற்றுப் படம். இதில் ‘சங்கமித்ரா’ எனும் டைட்டில் கேரக்டரில் நடிக்கப் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். மே மாதத்தில் இந்தப் படத்திலும், தந்தை கமலுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஜூன் மாதத்திலும் ஸ்ருதி நடிக்க இருக்கிறார்.

ன்றிரண்டு படங்கள் என டல் மோடில் இருந்தவருக்கு இப்போது படவாய்ப்புகள் குவிந்திருப்பதால் ஹேப்பி மோடுக்கு மாறியிருக்கிறார் நிக்கி கல்ராணி. விக்ரம் பிரபுவுடன் ‘பக்கா’, ‘நெருப்புடா’ என இரண்டு படங்கள், ஆதியுடன் ‘மரகத நாணயம்’, கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘ஹரஹர மகாதேவகி’, ஜீவாவுடன் ‘கீ’ என்று செம பிஸியாகிவிட்டார் நிக்கி. ஓவர் ஆல் ரிசல்ட் என்ன தெரியுமா? பெங்களூரிலிருந்து வந்து செல்ல சிரமமாக இருக்கிறது என சென்னையிலேயே சொந்த வீடு வாங்கிக் குடியேறிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு, ‘வேலைக்காரன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக சென்னை, சாலிகிராமம் அருகே ‘கூலிக்காரக் குப்பம்’ என்ற பெயரில் மினி குப்பத்தையே செட் போட்டு அசத்தியிருக்கிறார்கள். ரஜினி பட டைட்டிலுடன், அஜித் பிறந்த நாளில் ஃபர்ஸ்ட் லுக் என்று வேற லெவலில் மார்க்கெட்டிங் செய்கிறது ‘வேலைக்காரன்’ படக்குழு.

மியாவ் பதில்கள்

ட்விட்டரில் எழுத்துப் பிழையுடன் கமல்ஹாசன் கருத்து வெளியிடுகிறாரே, ஏன்?

ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் தொடங்கி, தமிழகத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் வரையிலும் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவரும் ஒரே நடிகர், கமல். பொதுவாக பிரபலங்கள் ஆங்கிலத்தில் கருத்துச் சொல்லிவரும் நேரத்தில், கமல் மட்டுமே அதிகமாகத் தமிழில் கருத்துகளை ட்வீட்டுகிறார். அது மட்டுமின்றி, பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஏஜென்சியோ, நண்பர்களோதான் பராமரித்து வருவது வழக்கம். ஆனால், தானே செல்போனில் தமிழில் டைப் செய்கிறார் கமல். இதில் ஏற்படும் சிரமம்தான் பிழைகளுக்குக் காரணம். ‘பிழைகளைத் திருத்தி மீண்டும் ட்வீட்டுவேன்’ என கமல் சொல்லியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism