Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

டம் ஹிட் அடித்தால், சிசேரியன் இல்லாமல் செகண்ட் பார்ட் எடுப்பது சினிமா ஸ்டைல். இதற்கு ஹாலிவுட் ‘ஜுராஸிக் பார்க்’கில் இருந்து கோலிவுட்டின் ‘சிங்கம்’ வரை சாட்சி. டைனோசர், சிங்கம் மட்டும்தான் மறுபிறவி எடுக்க வேண்டுமா? கோழியும் எடுக்கும். 12 வருடங்கள் கழித்து ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகம் எடுக்கத் தயாராகி வருகிறார் லிங்குசாமி. படத்தில், ராஜ்கிரணுக்கு முக்கிய ரோல் உண்டு!

ஜி.வி.பிரகாஷிடம் திடீர் மாற்றம். ரஜினி, சிம்பு பாணியில் ஆன்மிக வழியில் இறங்கிவிட்டார். எதற்கெடுத்தாலும் கடவுளை மேற்கோள் காட்டிப் பேசிவரும் ஜி.வி.பி, ‘இந்த அளவுக்கு நான் பிஸியாக இருப்பதற்கு சிவனே காரணம்’ என்று ஆதியோகியை உச்சிமோந்து பேசுகிறார். இஷ்டப்பட்டபோதெல்லாம் இமயமலைக்குப் பறக்கும் சூப்பர் ஸ்டார் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் ரூட்டில், இவர் திருவண்ணாமலைக்கு கிரிவல ட்ரிப் அடிக்கிறார்.

வி
ஜய்சேதுபதியின் ‘கவண்’ படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்கு ரெடி. இப்போது ‘விக்ரம் வேதா’, ‘கருப்பன்’ படங்களில் அவர் பிஸி. அடுத்ததாக சேரன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் வி.சே. பொருளாதார ரீதியில் சேரன் சிக்கலில் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவரின் பட அக்ரிமென்ட்டில் ஆட்டோகிராஃப் போட்டிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விஜய்க்காக அட்லி உருவாக்கியிருக்கும் படத்தின் கதை என்ன?

தந்தை, இரண்டு மகன்கள் என திரிசூலமாகக் களம் இறங்குகிறார் விஜய். தந்தை விஜய்க்கு நித்யாமேனன் ஜோடி. இரண்டு மகன்களும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க, அவர்களுக்கு முறையே காஜல் அகர்வால், சமந்தா ஜோடி. படத்துக்காக முதலில் அமெரிக்காவில்தான் லொக்கேஷன் பார்த்தார்கள். ட்ரம்ப்பின் கிடுக்கிப்பிடியால், நம் ஊர் தேவதைகள் கால்பதிக்கும் கொடுப்பினை அமெரிக்காவுக்கு இல்லை. ஸ்பெயின், பிரிட்டன் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.