Published:Updated:

அர்ஜூன், பாவனாவுக்கு கர்நாடக அர‌சின் திரைப்பட விருது!

 அர்ஜூன், பாவனாவுக்கு கர்நாடக அர‌சின் திரைப்பட விருது!
அர்ஜூன், பாவனாவுக்கு கர்நாடக அர‌சின் திரைப்பட விருது!
 அர்ஜூன், பாவனாவுக்கு கர்நாடக அர‌சின் திரைப்பட விருது!

பெங்களூரு: 2011-ஆம் ஆண்டுக்கான கர்நாடக அரசின் கன்னட‌ திரைப்பட

 அர்ஜூன், பாவனாவுக்கு கர்நாடக அர‌சின் திரைப்பட விருது!

விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த கதாநாயகனாக அர்ஜூனும், கதாநாயகியாக பாவனாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அறிவிக்கப்பட்ட பிற விருதுகள் பற்றிய விவரம் வருமாறு: முதலாவது சிறந்த படம்: பிரசாத், இரண்டாவது சிறந்த படம்: கூர்மவதாரா, மூன்றாவது சிறந்த படம்: அல்லிதே நம்மனே இல்லி பந்தே சும்மனே

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: சாரதி, குழந்தைகளுக்கான சிறந்த‌ திரைப்படம்: கம்சாளே கைசாளே, சிறந்த அறிமுக இயக்குநருக்கான படம்: சித்தலிங்கு, சிறந்த கர்நாடக மொழி பட வரிசையில்:உஜ்ஜாடு (கொங்கணி) திரைப்படமும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புட்டண்ணா கனகல் விருது:இயக்குநர் டி.ராஜேந்திர பாபு, ராஜ்குமார் விருது:இசையமைப்பாளர் ஹம்சலேகா

##~~##
விஷ்ணுவர்தன் விருது: நடிகர் அனந்த்நாக்கிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகனுக்கான‌ விருது :அர்ஜூனுக்கும் (படம்:பிரசாத்), சிறந்த கதாநாயகிக்கான விருது பாவனாவிற்கும்  சிறந்த குணசித்திரநடிகருக்கான விருது :ஸ்ரீதருக்கும் (படம்:கம்சாளே கைசாளே) சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கிரிஜா(படம்:சித்தலிங்கு)வுக்கும்  அறிவிக்கப்பட்டுள்ளது
சிறந்த கதாசிரியராக கும் வீரபத்ரப்பா(கூர்மவதாரா)வும், சிறந்த திரைக்கதையாசிரியராக ரவீந்திர தாஸ் (மத்தே பன்னி ப்ரீத்சோனா), சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கோபி பீன்யாவுக்கும் (அல்லிதே நம்மனே இல்லே பந்த சும்மனே) சிறந்த இயக்குநருக்கான விருது கிரிஷ் காசரவள்ளிக்கும் (கூர்மவதாரா) வழங்கப்படுகிறது.
- இரா.வினோத்