Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

 ஒரு வகையில் கமல்ஹாசனை, ‘டங்கல்’ அமீர் என்று சொல்லலாம். ‘டங்கல்’ படத்தில், தன் மகள்களுக்குக் கதறக் கதற மொட்டை அடிப்பார் அமீர்கான். இது, நிஜ வாழ்க்கையில் கமல் மகள் அக்‌ஷராவுக்கு நடந்துள்ளதாம். சிறு வயதில், ‘‘அப்பா, எனக்கு மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்?’’ என விளையாட்டாக அக்‌ஷரா கேட்க, டக்கென்று சவரக் கத்தியை எடுத்து, அக்‌ஷராவுக்கு தன் கையாலேயே மொட்டையைப் போட்டுவிட்டாராம் கமல். அதனால், ‘மொட்டை மேட்டர் எல்லாம் எனக்குச் சாதாரணம்; எந்த கேரக்டருக்காகவும் நான் முடி இறக்கவும் தயார். அப்படி கதை இருந்தா சொல்லுங்க’ என்று இயக்குநர்களுக்கு ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் அக்‌ஷரா.

மிஸ்டர் மியாவ்

ஜித், விஷ்ணுவர்தன் இருவரும் இணைந்தால் படம் வேற லெவல் ஹிட்டாகும். ‘பில்லா’, ‘ஆரம்பம்’ எனத் தொடர்ந்த வெற்றிக்கூட்டணி இடையில் காணாமல் போக... விஷ்ணுவர்தன் இடத்தை சிவா பிடித்தார். மீண்டும் அஜித்தை இயக்கப் போகிறார் விஷ்ணுவர்தன். அதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாதான் இசை!

 லவ், ஆக்‌ஷன் என எதுவாக இருந்தாலும், அதில் வெரைட்டி காட்டுவது மணிரத்னம் ஸ்டைல். இந்த முறை ஆக்‌ஷன். ‘ரா’ உளவுத்துறை ஏஜென்ட்டாக ராம்சரண் நடிக்க, முக்கிய ரோலில் அர்விந்த்சாமியும் நடிக்கப்போவதாகத் தகவல். ‘காற்று வெளியிடை’ ரிலீஸுக்குப் பிறகு, இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

 ‘விவேகம்’ படத்தின் ஷூட்டிங் பிரேக்கில் இருக்கிறார் அஜித். கடந்த ஆண்டு வெளியாகி, பார்க்கத் தவறிய படங்களை இப்போது அவர் வரிசையாகப் பார்த்துவருகிறார். திடீரென ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு போன் செய்து, ‘போன வருஷம் வெளியான உங்கள் ஆறு படங்களுமே வித்தியாசமான சாய்ஸ்’ என்று புகழ்ந்த அஜித், விருந்துக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

‘சோஷியல் வெப்சைட் ஓல்டு... மொபைல் ஆப்தான் ட்ரெண்டு’ என்கிறார் எமி. ‘எமி ஜாக்ஸன்’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை ரசிகர்களுக்காக எமி அறிமுகம் செய்துள்ளார். ரசிகர்கள் எப்போதும் எமியுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டம். தமிழில் பட வாய்ப்புகள் வருவதால், சில கோடிகளில் சென்னையில் ஒரு பங்களாவை எமி வாங்கிப்போட்டிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளதே?

‘அலாவுதீனும் அற்புத காரும்’ என்ற டைட்டிலுடன் 2013-ல் ஒரு படத்தை ஸ்ரீதர் என்பவர் ஆரம்பித்துள்ளார். அதற்காக கார் ஒன்றை வாங்கி, பேயைப்போல அந்தக் காரை டிசைன் செய்துள்ளார். சில காரணங்களால் படத்தைக் கைவிட்டுள்ளார். இந்த நிலையில், நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படத்தின் கதை, தன்னுடைய கதை என்பதை அறிந்து அதிர்ந்துபோனதாக ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ‘‘நான், காரை டிசைன் செய்த அதே இடத்தில்தான், ‘டோரா’ படத்தில் வரும் காரும் டிசைன் செய்யப்பட்டது’’ என்றும் அவர் சொல்கிறார். தன் படத்துக்காக 30 லட்ச ரூபாய் செலவழித்து உள்ளதாகக் கூறும் ஸ்ரீதர், நியாயம் கிடைக்கும் வரை போராடவிருப்பதாகவும் சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார், ‘டோரா’ பட இயக்குநர் தாஸ் ராமசாமி. இருவரும், எழுத்தாளர் சங்கத்தில் தங்கள் கதைகளைக் கொடுத்துள்ளனர். முடிவு விரைவில் தெரியும்.