Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

‘துருவநட்சத்திரம்’ படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் அனு இம்மானுவேல். பிறகு, அவருக்குப் பதிலாக ரீது வர்மா ஒப்பந்தமானார். முதலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த ஜோமன் டி ஜான் விலகினார். தற்போது, சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். ஆரம்பத்தில் சூர்யாவை வைத்து ‘துருவநட்சத்திரம்’ படத்தைத் தொடங்கினார் கெளதம் மேனன். சூர்யா விலகவே, ஹீரோவானார் விக்ரம்.

மிஸ்டர் மியாவ்

டிப்பின் மீதான காதல் சற்றும் குறையவில்லை ஸ்ரீதேவிக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களே அதற்கு சாட்சி. இவர் நடித்துள்ள ‘மாம்’ படம் அடுத்து வெளியாக உள்ளது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஜூலை 14-ல் ரிலீஸ். இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்ரீதேவியின் திரையுலகப் பயணத்தில் 50-வது வருடம் இது. தவிர, இவர் நடிப்பில் வெளியாகும் 300-வது படம் என்பதும் ஸ்பெஷல்.

மிஸ்டர் மியாவ்

சுவாதி, லட்சுமி மேனன், அபிநயா, லாவண்யா, அனன்யா, தன்யா என ஹீரோயின்களை அறிமுகப்படுத்துவதில் சளைக்காதவர், சசிகுமார். ‘கிடாரி’யில் இவர் அறிமுகம் செய்த நிகிலா விமலுக்கும் பட வாய்ப்புகள் குவிகின்றன.

மிஸ்டர் மியாவ்

ணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. இப்போது, ‘சதுரங்கவேட்டை’ வினோத் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் கார்த்தி. ராஜஸ்தானின் ஜெய்ஸால்மர் பகுதியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அடுத்தகட்டமாக, புஜ் பகுதியில் சண்டைக்காட்சியுடன் கூடிய சில பகுதிகளை 40 நாட்கள் படமாக்கவுள்ளனர். கார்த்தி, போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

னிருத்துடன் ஏற்பட்ட பிரச்னையால், ஷான்ரோல்டனை வளர்த்துவிட முடிவெடுத்திருக்கிறார் தனுஷ். இவரின் ‘பவர்பாண்டி’, ‘விஐபி-2’ இரண்டுக்குமே ஷான்ரோல்டன்தான் இசை. தற்போது, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருக்கிறார் அனிருத். எனவே, அனிருத் இசையை சிவகார்த்திகேயன் படங்களில் அதிகமாக ரசிக்கலாம்!

மியாவ் பதில்

மிஸ்டர் மியாவ்

இணையத்தில் சினிமா பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாக புகாருக்குள்ளான  பாடகி சுசித்ரா சைலன்ட் ஆகிவிட்டாரே?

மிஸ்டர் மியாவ்

ஆரம்பத்தில் தனுஷின் ஆட்கள் தாக்கியதாக ட்வீட் செய்தார் சுசித்ரா. தொடர்ந்து நடிகர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. ‘சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா’ என்ற கேள்விக்குக் கூட சுசித்ராவும், அவரின் கணவர் கார்த்திக்கும் முரணான பதில்களையே சொன்னார்கள். கடைசியாக, நடிகர் ஒருவரின் வீடியோவை ரிலீஸ் செய்யப்போவதாக சுசித்ரா சொன்னதாக சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு நீண்ட அமைதி. இந்தப் பிரச்னை தீரும்வரை சுசித்ரா வெளிநாட்டில் ஓய்வெடுக்க இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது.