Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்தான், பவன் கல்யாண் நடித்துள்ள ‘கட்டமராயுடு’. ‘ஜில்லா’ நேசன் இயக்கத்தில் ‘வேதாளம்’ பட ரீமேக்கிலும் பவன் நடிக்கவுள்ளார். ‘விவேகம்’ ரிலீஸாகி ஹிட்டாகிவிட்டால், அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவன் நடிக்க விரும்புகிறாராம். ரத்தமும் காயமுமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த பிறகுதான், இந்த முடிவை எடுத்தாராம் பவன் கல்யாண்.

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வுண்டமணி, செந்தில் காமெடிகள் இன்றும் ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்’தான். இவர்கள் இருவரும் நடிப்புக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தாலும், சில படங்களில் தலைகாட்டுகிறார்கள். கவுண்டமணி நடித்த சில படங்கள் கடந்த ஆண்டு ரிலீஸாகின. சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய ரோலில் செந்தில் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கும் படம் ‘கொடிவீரன்’. இருவரும் ஏற்கெனவே இணைந்த ‘குட்டிப்புலி’ போலவே இதுவும் கிராமத்து சப்ஜெக்ட். சிவகங்கை பகுதிகளில் படப்பிடிப்புக்காக இடம் தேடிக்கொண்டிருக்கிறார் முத்தையா. ஹீரோயின் ரோலுக்கு ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ன் படத்தில் கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெடுபவர், நடிகர் விஜய். ‘தெறி’யில் விஜய்குமார், ஜோசப் குருவில்லா என இரண்டு கேரக்டர்களைப்போல, இப்போது மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மூன்று ரோல்களில் விஜய் வருகிறார். இது, ரஜினியின் ‘மூன்று முகம்’ சாயலில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் நயன்தாரா நடித்துவரும் ‘கொலையுதிர்காலம்’ படத்தை, இந்தியிலும் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் சக்ரி டோலட்டி. இந்தி ரீமேக்கில், நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னாவும், வில்லன் ரோலில் பிரபுதேவாவும் நடிக்கிறார்கள்.

மியாவ் பதில்

பாகுபலி - 2 டிரெய்லரே லீக் ஆகிடுச்சே?

மிஸ்டர் மியாவ்

ஜினியின் ‘2.0’, அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் விஜய் - அட்லீ பட ஷூட்டிங் புகைப்படங்கள் வரை, இணையத்தில் வெளியாகி உள்ளன. இப்போது, ஒரு படத்தின் டிரெய்லரே லீக் ஆகியிருப்பது படக்குழுவுக்கே மிகப்பெரிய இடியாகத்தான் இருந்திருக்கும். ‘பைரஸி’யை விட மோசமானது எடிட்டிங் மேஜையில் இருக்கும் படத்தின் வீடியோக்கள் லீக் ஆவது. ‘பாகுபலி 2’ டிரெய்லரை லீக் செய்த பிரச்னை குறித்து படக்குழு விசாரித்து வருகிறது. பைரஸியைப் போலவே, இந்த மாதிரி வீடியோக்களை லீக் செய்வதும் குற்றமே. பைரஸி ஃபைட்டர்ஸ்... இதையும் யோசிங்க ஜி!