பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

நீண்ட நாட்களாக நடிப்புக்கு லீவு விட்டிருந்த பிந்துமாதவி, மீண்டும் என்ட்ரி கொடுக்கும் படம் ‘பக்கா’. இந்தப் படத்தில் அவர், இரண்டாவது நாயகிதான். விக்ரம்பிரபு, நிக்கி கல்ரானி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் நடித்து வருகின்றனர். எஸ்.எஸ்.சூர்யா இயக்கிவரும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் இப்போது நடந்துவருகிறது.

தாநாயகியை மையப்படுத்திய ரோல்களில் நயன்தாரா நடித்திருக்கும் படங்கள்தான் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன. இவற்றில் ‘டோரா’ ரிலீஸுக்கு ரெடி. படத்தில் ‘டோரா’ கேரக்டரே மிகப் பெரிய ட்விஸ்ட். படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் எட்டு கோடி ரூபாய். அதில் நயன் சம்பளம் மட்டும் மூன்று கோடியாம்.

மிஸ்டர் மியாவ்

லைவாழ் மக்களின் வாழ்க்கையும், மலைத்தேன் எடுக்கும் அவர்களின் பயணமும்தான் கடம்பன். ‘மஞ்சப்பை’ ராகவன் இயக்கிவரும் இந்தப் படத்துக்காக ஆர்யா, கேத்தரின் தெரசா என ஒட்டுமொத்த யூனிட்டுமே காட்டில் டென்ட் போட்டு, முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். காட்டுப்பூச்சிகள், வண்டுகள், அட்டைகள் போன்றவற்றின் கடியிலிருந்து யாரும் தப்பவில்லை. காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டே படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறது படக்குழு. 

சிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’, அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதை. இதில் சசிகுமாருக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஹன்சிகா, இதில் ஹீரோயினாக கமிட் ஆனதே தனிக்கதை. ‘மருது’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவைத்தான் இந்தப் படத்திலும் ஹீரோயினாக செலக்ட் செய்து வைத்திருந்தார் இயக்குநர் முத்தையா. ஆனால், சசிகுமாரின் சாய்ஸ் ஹன்சிகா. தவிர, ஹன்சிகாவுக்கும் தமிழில் படங்கள் இல்லையென்பதால் ஸ்ரீதிவ்யாவுக்குத் தரும் சம்பளம் எனக்கு ஓகே என்று சொல்லி வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.

மிஸ்டர் மியாவ்

ஜினிகாந்துடன் குஷ்பு ஜோடியாக நடித்த ‘பாண்டியன்’, ‘அண்ணாமலை’ ஆகிய இரண்டுமே செம ஹிட். இந்த காம்போ மீண்டும் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் சாத்தியமாகலாம். ஆனால், ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் குஷ்பு.

மியாவ் பதில்

சென்சார் சான்றிதழ் நிஜமாகவே நியாயமாகத்தான் வழங்கப்படுகிறதா?

ந்தக் கேள்விக்கான உள் அர்த்தம் புரிகிறது. சமீபத்தில் வெளியான ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில், இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமல்லாமல், நேரடியாகப் புரியும் அளவுக்கு ஆபாச வசனங்களும் வருகின்றன. ஆனாலும், ‘யு’ சான்றிதழ் பெற்றது இந்தப் படம். சென்சார் போர்டு எப்படி ‘யு’ சான்றிதழ் கொடுத்தது என்பதுதான் கேள்வி. வளைக்கும் சாமர்த்தியம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பும் சான்றிதழைப் பெறமுடியும் என்பதே இன்றைய சென்சார் போர்டின் நிலை. அதுமட்டுமின்றி, சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக எந்தப் படம் குரல் கொடுத்தாலும், காட்சிகளை வெட்டித் தூக்கி வீசுகிறது சென்சார். ஒரே விஷயத்துக்கு, பெரிய படங்களுக்கு ஒருமாதிரியாகவும், லோ பட்ஜெட் படங்களுக்கு ஒருமாதிரியாகவும் சென்சார் போர்டு நடந்துகொள்வதாகவும் படைப்பாளிகள் மத்தியில் குமுறல் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு