Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ந்தானத்துடன் ‘மன்னவன் வந்தானடி’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதற்கு நடுவே ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் இரண்டாம் பாகத்துக்குக் கதைகளைத் தயார் செய்துவருகிறார் செல்வா.  இரண்டுமே வியாபார ரீதியில் ஏமாற்றினாலும், ‘இரண்டாம் பாகத்தில் ஹிட் கொடுப்பேன்’ என்று சபதம் எடுத்திருக்கிறார் செல்வா.

சிம்புவுக்கு ஜோடியாக ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்த சனா கானை நினைவிருக்கிறதா? இந்தியில் செட்டிலாகிவிட்ட இவர், ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே தமன்னா மற்றும் ஸ்ரேயா நடித்துவருகிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு மூன்றாவது நாயகியையும் தேர்ந்தெடுத்துவிட்டது படக்குழு.

மிஸ்டர் மியாவ்

‘சதுரங்க வேட்டை’ இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு மலேசியா ஷெட்யூலுடன் நிறைவடைந்து விட்டது. அரவிந்த்சாமி, த்ரிஷா இருவருக்குமே நெகட்டிவ் ரோல்தான். முதல் பாகத்தில் லோக்கலில் திருட்டுத்தனம் செய்துவந்தது போல, இரண்டாம் பாகத்தில் ஹைடெக் திருட்டு செய்வதுதான் கதையாம்.

யன்தாரா நடித்த ‘மாயா’ பட இயக்குநர் அஸ்வின் சரவணன் அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். டைட்டில் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ‘அதே கண்கள்’ ஷிவதா நடிக்க இருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. ‘மாயா’ போலவே இதுவும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ழைய ரஜினி படங்களின் பெயர்கள் சமீப காலத்தில் பல படங்களின் டைட்டில்களாக மாறிவருவதற்குக் காரணம், மக்களிடம் எளிதில் ரீச்சாகும் என்பதுதான். ஏற்கெனவே ரஜினியின் ‘பாட்ஷா’ பட ஃபேமஸ் டயலாக்கான ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ என்பதை தன் படத்துக்கு டைட்டிலாகப் பயன்படுத்திய ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக ரஜினியின் ‘குப்பத்து ராஜா’ டைட்டிலை தேர்ந்தெடுத்திருக்கிறார். பிரபல நடன இயக்குநரும், தனுஷின் நண்பருமான பாபா பாஸ்கர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். பார்த்திபன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியாவ் பதில்

மிஸ்டர் மியாவ்

இலங்கைப் பயணம், மலேசிய அதிபருடன் சந்திப்பு என ‘ரஜினியும் அரசியலும்’ அடிக்கடி செய்தியாகிறதே?

இலங்கைத் தமிழர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே இலங்கைப் பயணத்துக்கு சம்மதித்தார் ரஜினி. அங்கு இருக்கும் ரசிகர்களும் அவரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் பயணத்தை ரத்து செய்தார். இரண்டாவதாக, மலேசியாவில் ‘கபாலி’ ஷூட்டிங் நடந்த நேரத்திலேயே அந்த நாட்டு அதிபரை சந்திக்க விரும்பினார் ரஜினி. சந்தர்ப்பம் அமையாததால், சென்னையில் அந்தச்சந்திப்பு நடந்ததே தவிர, மற்ற எந்த நோக்கமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களுக்குமே ரஜினியின் ஒரே பதில், ’எதையும் அரசியல் ஆக்காதீர்கள்’ என்பதுதான்.