Published:Updated:

``ஓப்பன் பண்ணா... சிம்பு ஒரு பாகிஸ்தானி...!?’’ - ஆதிக் ரவிசந்திரனின் திடுக் கதை

``ஓப்பன் பண்ணா... சிம்பு ஒரு பாகிஸ்தானி...!?’’ - ஆதிக் ரவிசந்திரனின் திடுக் கதை
``ஓப்பன் பண்ணா... சிம்பு ஒரு பாகிஸ்தானி...!?’’ - ஆதிக் ரவிசந்திரனின் திடுக் கதை

`AAA’ படத்துக்கு அப்புறம் சிம்புவை வெச்சு இன்னொரு படம் பண்றதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. ஆனால், அது `AAA’ படதோட ரெண்டாவது பாகமா இருக்காது...’’ - ஆதிக்

```டிரிப்பிள் ஏ’ படம் பண்ணும் போதே அந்தப் படத்தை முடிச்சுட்டு நானும் ஜீவி.யும் சீக்கிரமா ஒரு படம் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தோம். `டிரிப்பிள் ஏ’ முடிஞ்சதுக்குப் அப்புறம் ஜீவி போனில் படம் பண்ணலாம்னு சொன்னார். என்னோட முதல் படத்துலேயே என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவி. ஒரு நடிகரா `த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தன்னோட ரெண்டாவது படமா செலக்ட் பண்ணி நடிக்கிறதுக்கே ஒரு தனி தைரியம் வேணும். அதை ஜீவி அன்னைக்கு பண்ணினார். `டிரிப்பிள் ஏ’ படத்தோட ரிசல்ட்டைப் பார்த்துட்டு, `பரவாயில்ல விடு. மூணாவது படம் செமையாப் பண்ணலாம்னு அடுத்த பட வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்...’’ செம பாசிட்டிவ்வாகப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்.

இப்போ நானும் ஜீவி.யும் பண்ணப் போற படத்துல ஃபேன்டஸி, ஹாரர், லவ்னு பசங்களுக்குத் தேவையான எல்லாமே சரியான மிக்ஸிங்ல இருக்கும். ஜீவி.க்கு ஜோடியா அமைரா தஸ்தூர் நடிக்கிறாங்க. இந்தப் படம் மூலமா சோனியா அகர்வால் ரொம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுக்குறாங்க. சஞ்சிதா ஷெட்டி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறாங்க. மத்தப்படி கேமியோவுக்கு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.''

`அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் வந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு... அதை எப்படிப் பாக்குறீங்க..?

``ஒரு இயக்குநருக்கு அவரோட ரெண்டாவது படம்தான் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். முதல் படம் எவ்வளவு பெரிய வெற்றியானாலும் அதிர்ஷடத்துல வந்துட்டான்னு சொல்லுவாங்க. ரெண்டாவது படம்தான் ஒரு இயக்குநருக்கு தான் யாருன்னு மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய முக்கியமான படம். என்னோட ரெண்டாவது படத்துக்கு நான் மெனக்கெட்டும், என்னால அதைப் பண்ண முடியலை. அது மிகப்பெரிய வலியா எனக்குள்ள இருக்கு.

`டிரிப்பிள் ஏ’ படத்துக்கு அப்புறம் சிம்புவை வெச்சு இன்னொரு படம் பண்றதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. ஆனால், அந்தப் படம் `டிரிப்பிள் ஏ’வோட ரெண்டாவது பாகமா இருக்காது. ஏன்னா, அது நெகட்டிவ்வா மக்கள் மனசுல இருக்கு. `டிரிப்பிள் ஏ’ டைம்லேயே சிம்புவுக்கு ஒரு கதை சொன்னேன். சிம்புவை பாகிஸ்தானியா வெச்சு ஒரு ஸ்பை ஆக்‌ஷன் படம் ப்ளான் பண்ணுனோம். அடுத்து சிம்புவை வெச்சு படம் பண்ணுனா இந்தக் கதையைப் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு.’’

உங்களை ஹீரோவா வெச்சு `டிங் டாங் பெல்’னு ஒரு படத்தை சன்தோஷ் ஜெயகுமார் இயக்கப்போறதா ஒரு நியூஸ் வந்தது... அதுக்காகத்தான் வெயிட் குறைச்சிருக்கீங்களா..?

``நானும் அந்த நியூஸைப் பார்த்தேன். அதெல்லாம் உண்மை இல்லைங்க. அதுவும் படத்தோட பெயரைப் பாருங்களேன்... எனக்குன்னே யோசிச்சு வெச்சுப்பாங்க போல. நான் வெயிட்டை குறைச்சது என்னோட உடல்நலத்துக்காகத்தான். சில மாதங்களுக்கு முன்னாடி ஜீவி படத்துக்காக லொகேஷன் பார்க்க ஊட்டிக்குப் போனோம். அங்க ஒரு மலை அடிவாரத்துக்குப் போகும் போது, `அங்க மிருகங்கள் வரும்; நிறைய பேரை கொன்னுருக்கு. போகாதீங்க’னு சொன்னாங்க. சீக்கிரம் வந்துடலாம்னு கீழே இறங்கிட்டோம். கீழே போனதும், உடனே மேல வாங்க. போலீஸ் வராங்கனு சொன்னாங்க. என்கூட வந்தவங்க எல்லாரும் வேக வேகமா மலை ஏறிட்டாங்க. என்னால என் வெயிட் 117 கிலோவைத் தூக்கிட்டு ஏற முடியலை. அப்போதான் எனக்கு ஹெல்த் மேல கவனம் செலுத்தணும்னு தோணுச்சு. அதுக்கப்புறம் டயட்ல இருந்து இப்போ 78 கிலோல இருக்கேன். நான் வெயிட்டை குறைச்சதுக்கு இதுதான் காரணம். மத்தப்படி நான் ஹீரோவா நடிக்கலை.''

முழு பேட்டியைக் வீடியோவில் காண்க...

அடுத்த கட்டுரைக்கு