Published:Updated:

வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?

வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?

வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?

த்தாண்டுகளுக்குப் பிறகு ரஜினி, தனது மன்ற பொறுப்பாளர்களைச் சந்திப்பதற்காக ஏப்ரல் 12 முதல் 16-ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், தற்போது திடீரென அந்தச் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார். ரசிகர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த ரஜினி, திடீரென நெருங்கிவரக் காரணமென்ன? வந்தவர் அதை மீண்டும் தள்ளிப்போட்டது ஏன்?

வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?

ஜெ. மறைவுக்குப் பின் சிதறுண்டுகிடக்கும் அ.தி.மு.க., கருணாநிதி படுக்கையில் இருப்பதால் குழப்பத்தில் இருக்கும் தி.மு.க., எப்போதுமே கைகள் கோத்திடாத காங்கிரஸ், தேய்பிறையில் தே.மு.தி.க., - இப்படித் தமிழக அரசியல் களம் குழம்பிய குட்டையாக இருப்பதால் ரஜினியை முன்நிறுத்த முயற்சிக்கிறது பி.ஜே.பி. அதற்கு முன்னோட்டமாக தனது மன்றத்தினரின் ‘பல்ஸ்’ பார்க்கவே இந்தச் சந்திப்புக்கு அவர் ஒப்புக்கொண்டார் என்று தகவல்.

கடந்த மூன்று மாதங்களாகவே மன்றப் பொறுப்பாளர்கள் பலர், ‘‘ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரவில்லையென்றாலும் சமூக இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, தமிழகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வற்புறுத்தி வந்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

கடந்த மாதமே ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலா 10 பேர் கொண்ட பட்டியலை, சென்னையிலிருந்து கேட்டுப் பெற்றார்கள். கடந்த 2-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் சென்னை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைக்கப்பட்டனர். கலந்துரையாடலின்போது, ரஜினியைச் சந்திப்பதற்கு ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் வருவதற்கு அனுமதிச் சீட்டு தந்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?

அதன் பிறகு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கட்டளை வாட்ஸ்அப்பில் ரசிகர்மன்ற மாவட்டத் தலைவர்களுக்கு வந்தவண்ணம் இருந்தது. ‘குறித்த நாளில் காலை 8.00 மணிக்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திடவேண்டும், ‘சார்... நான் வெளியூரிலிருந்து வர்றேன், பஸ் கிடைக்கலை, ஆட்டோ கிடைக்கலை, சென்னை எனக்குப் புதுசு, இடம் தெரியாம எங்கேயோ போயிட்டேன்’ இப்படியெல்லாம் காரணம் கூறுவதைத் தவிர்த்துவிட வேண்டும். தலைவரோடு புகைப்படம் என்றால், கரும்பு தின்னக் கூலியா என்பதுபோல் சாரைசாரையாய் உறவுகள் வந்து விடுவார்கள். நீங்கள் வரும் முன்னே ஊடகங்கள் வந்துவிடும். ஆர்வக் கோளாறில் ஏதாவது கொட்டி விடாதீர்கள். நம் கையால் நம் கண்ணைக் குத்திக்கொண்டது போலாகிவிடும். தலைவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு நம்மைச் சந்திக்கிறார். குறைகள் சொல்லாமல், அவரது மனதைப் புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு ஆதங்கம் இருக்குமேயானால், இந்தச் சந்திப்புக்குப் பிறகு தலைமையிடம் கோரிக்கை வைக்கலாம்’ என நீண்டன கட்டளைகள். 

இப்படியெல்லாம் செய்திகள் வந்த நிலையில்தான் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டிருக்கிறது. 

இதுபற்றி நாகை மாவட்ட ரஜினி ரசிகர்மன்றத் தலைவர் ரஜினி பாஸ்கரிடம் கேட்டபோது, “சற்று ஏமாற்றம்தான். என்றாலும், இது தற்காலிகம்தான். மறுபடியும் தலைவர் சந்திப்பார்” என்றார்.

மயிலாடுதுறை நகரத் தலைவர் ராஜேஸ்வரன், “தலைவர் எதைச் செய்தாலும், அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இப்போதுள்ள நிலையில் தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய ஒரே நம்பிக்கை நட்சத்திரம், தலைவர்தான். அவர் நிச்சயம் வருவார்” என்றார்.

வாட்ஸ்அப் கட்டளை... வராத ரஜினி... சந்திப்பு தள்ளிப்போனது ஏன்?

நகரப் பொருளாளர் பவுன்.முருகானந்தம், “ஒரு நாளில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 பேருடன் புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டோம். எட்டு பேர் கொண்ட குழுவாகத் தலைவருடன் புகைப்படம் எடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதனை நாங்கள் ஏற்கவில்லை. ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் ஒவ்வொரு நாளில் வரவழைத்து, தனித்தனியாக புகைப்படம் எடுக்க தலைவர் முடிவு செய்திருக்கிறார். அதனால்தான் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வேறு காரணமில்லை” என்றார். 

ரஜினியுடன் சந்திப்புக்கு கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டை ஆர்வம்கொண்ட பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் விலைபேசி வாங்கிவிட்டதாகவும் ஒரு தகவல். இது ரஜினி காதுக்குச் சென்றதாம். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். 

எப்படியோ, ரஜினி என்றாலே பரபரப்பு. இன்னோர் அலை எழும்பி அடங்கியிருக்கிறது.

- மு.இராகவன்
படங்கள்: ஸ்ரீனிவாசுலு, க.சதீஷ்குமார்