பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

‘கொலையுதிர்காலம்’ படத்தில் நயன்தாரா மற்றும் ஜெர்மன் நடிகர் ஸ்டீபன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் தமன்னாவும், பிரபுதேவாவும் நடிக்கிறார்கள். ‘தேவி’ கெமிஸ்ட்ரி ஒர்க் - அவுட் ஆகுது!

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்காக சென்னையில் போட்ட செட், சிம்புவுக்குப் பிடிக்கவில்லை. ‘மாத்திட்டுப் புதுசா யோசிங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதில் தயாரிப்பாளருக்குப் பல லட்ச ரூபாய் நஷ்டமாம். ‘அ.அ.அ’ டப்பிங் பேச வராத சிம்பு, ‘‘ஷூட்டிங்கில் நடிச்சவன் இன்னும் என் உடம்புக்குள் வரலை... மேல இருந்து உத்தரவு வரணும்’’ என்கிறாராம். காப்பாத்துங்க பாபாஜி!

 தனுஷ் படம் என்றால், சீக்கிரமே ஷூட்டிங் முடிந்து படம் வெளியாகிவிடும். ஆனால், வெற்றிமாறன் இயக்கிவரும் ‘வடசென்னை’ படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பிறகு, ‘விஐபி 2’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’,  ‘பவர் பாண்டி’ என தனுஷ் பிஸியாகிவிட்டார். தற்போது, `வடசென்னை’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு