Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

டிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற செய்தி மட்டுமே உறுதியாகியிருந்தது. இதில் பத்திரிகையாளராக நடிக்கிறார் சமந்தா. அவர் கதைச் சொல்வது போலத்தான் படம் நகர்கிறதாம்.

‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து அடுத்த படவேலையில் வெங்கட்பிரபு பிஸி. ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ்தான் ஹீரோயின். ஹீரோவாக ‘கயல்’ சந்திரன் நடிக்கிறார். மற்றபடி, படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவும், பிரேம்ஜியும் இல்லாமலா?

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரே படத்தில் அண்ணனும், தம்பியும் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும் என்பது சூர்யாவின் பல நாள் ஆசை. சூர்யாவுக்கும் கார்த்திக்கும் இணையான கதாபாத்திரங்களுடன் ஒரு கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப் படத்தில் அப்பா சிவக்குமாரை கெஸ்ட் ரோலில் நடிக்கவைக்கவும் திட்டம். குடும்பப் படம்னு சொல்லுங்க!

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

விஷாலின் நெக்ஸ்ட் ப்ளான் அரசியலா?


தி
ருட்டு வி.சி.டி-க்கு எதிராகப் பொங்கிய விஷால், அடுத்து நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று அதைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தார். அப்போது அவர் செயல்பட்ட விதமே அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியை எழுப்பியது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்குப் பின்னாலும் பல அரசியல் காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் 600 உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியது, 1,000 உறுப்பினர்களுக்குத் தானே போன் மூலம் பேசியது என இவை எல்லாமே தேர்ந்த அரசியல்வாதிக்கு உரிய தேர்தல் முன்னெடுப்புகளாகவே பார்க்கப்படுகின்றன. சினிமா துறையில் பெரும் பிரச்னையாக இருக்கும் பைரசி, திருட்டு வி.சி.டி. விவகாரங்களுக்கு நல்ல தீர்வைக் கொண்டு வந்தால் அது இவரது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படும். அப்புறம் அரசியலில் அடிவைக்கலாம் எனத் திட்டமாம்!