Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’ உட்பட கைவசம் உள்ள ஆறு படங்களில் நடித்து முடித்துவிட்டார் த்ரிஷா. ‘கர்ஜனை’ படத்தில், ‘டூப்’ போடாமல் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு நடிப்புக்கு ப்ரேக் கொடுத்துவிட்டு, இப்போது நியூயார்க் பறந்துவிட்டார். வழக்கமாக நண்பர்களுடன் செல்லும் த்ரிஷா, இந்த முறை தன் அம்மாவுடன் சென்றுள்ளார்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

‘ஹார்லி டேவிட்சன்’ பைக் ஓட்டிப் பழகிவருகிறார் ஆண்ட்ரியா. மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்துக்காக இந்தப் பயிற்சியாம். ‘ஆண்ட்ரியா நன்றாக பைக் ஓட்டுவதற்குப் பயிற்சிபெற்ற பிறகே ஷூட்டிங் ஆரம்பமாகும்’ என்று சொல்லியிருக்கிறாராம் மிஷ்கின்.

மிஸ்டர் மியாவ்

மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்த அருணாசலம் முருகானந்தம் என்ற கோவை தமிழரை நினைவிருக்கிறதா? பத்மஸ்ரீ விருதுபெற்ற இவரின் வாழ்க்கையைப் படமாக்குகிறார், இந்தித் திரையுலகின் பிரபல இயக்குநர் பால்கி. அதில், ‘2.0’ வில்லன் அக்‌ஷய் குமாரும், ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘துருவங்கள் 16’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படங்களின் இயக்குநர்கள், தங்கள் அடுத்த படங்களுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டனர். ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ அதர்வா. அரவிந்த்சாமியை வைத்து ‘நரகாசூரன்’ படத்தை இயக்குகிறார், ‘துருவங்கள் 16’ கார்த்திக் நரேன்.

மிஸ்டர் மியாவ்

ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் நடந்த ரெய்டு காரணமாக, ராதிகா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ பட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காளி’ படத்தில் நடிக்கத் தயாராகிறார் விஜய் ஆண்டனி.

மிஸ்டர் மியாவ்

‘‘ஐந்து வருஷங்களாக ஒரு ஷூட்டிங்கிலிருந்து இன்னொரு ஷூட்டிங் என விமானத்தில் பறந்து பறந்து களைத்துப் போய்விட்டேன். இப்போது எனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டும்’’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுஷ்கா. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், பழம்பெரும் நடிகை ஜமுனா கேரக்டரில் அனுஷ்கா நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

‘பாகுபலி’ போல பெரிய பட்ஜெட் படங்களுக்கு மலையாளத் திரையுலகமும் ரெடியாகிவருகிறதே?

வரலாற்றுப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு இயக்குநருக்கும் இருக்கும். ஆனால், பட்ஜெட்தான் பிரச்னை. பலமொழிகளில் படத்தை உருவாக்கி லாபம் பெற முடியும் என ‘பாகுபலி’ தந்த நம்பிக்கையால், தமிழ்த் திரையுலகில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் ‘சங்கமித்ரா’ தயாராகிறது. மலையாளத் திரையுலகில் ரூ.1,000 கோடியில் ‘தி மகாபாரதம்’ உருவாக இருக்கிறது. கூடவே இது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் உருவாகிறது. வேறு சில மொழிகளிலும் பிறகு டப்பிங் செய்யப்படுமாம். 2018-ல் ஷூட்டிங், 2020-ல் ரிலீஸ் என்று படத்துக்கான அறிவிப்பே மெர்சலாக இருக்கிறது. மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவ நாயரின், ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு, மகாபாரதத்தில் வரும் பீமனின் பார்வையில் இந்தக் கதை வடிவமைக்கப்பட்டுவருகிறது. வி.ஏ.குமார் மேனன் இயக்கவிருக்கும் இந்தப் படம், மலையாள சினிமாவின் அசாத்திய துணிச்சல்.