Published:Updated:

ரம்பாவுக்கு சல்மான் கானின் ஸ்வீட் சர்ப்ரைஸ்..!

ரம்பாவுக்கு சல்மான் கானின் ஸ்வீட் சர்ப்ரைஸ்..!
ரம்பாவுக்கு சல்மான் கானின் ஸ்வீட் சர்ப்ரைஸ்..!

நடிகை ரம்பா, நடிகர் சல்மான் கானை சந்தித்தது குறித்து ரம்பாவின் சகோதரர் பகிர்ந்துகொள்கிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சில தினங்களுக்கு முன்பு நடிகை ரம்பாவை அவரது இல்லத்தில் சந்தித்ததுதான் லேட்டஸ் வைரல். மூன்றாவது குழந்தைக்குத் தாயாகவிருக்கும் ரம்பாவுக்கு இந்தச் சர்பிரைஸ் விசிட் நூறு ஜாங்கிரிகளை சாப்பிட்ட சந்தோஷத்தில் தள்ளியிருக்கிறது.

கணவன் - மனைவி இருவருக்குமிடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்க, ரம்பாவுக்கும் அவரின் கணவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வருடம் மார்ச் மாதம் அறிவுரை வழங்கியிருந்தது. கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரைக் கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தன்னை கணவருடன் சேர்த்து வைக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் ரம்பா. இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும் குடும்பம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டுள்ளதாகவும் தன் கணவரை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறியிருந்தார். இப்படித் தொடர்ந்து பல பிரச்னைகளுக்கு நடுவில் சிக்கித் தவித்த ரம்பா, அந்தச் சமயம் விஜய் டிவி-யில் 'கிங்க்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பிரச்னைகளுக்குப் பிறகு, ஒருவழியாக தன் கணவருடன் சேர்ந்தார். தற்போது, கனடாவில் தன் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ரம்பாவின் குடும்பத்தினரை சல்மான் கான், பிரபு தேவா டீம் சந்தித்த விஷயங்களைப் பற்றி சகோதரர் லட்சுமி ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். 

`என்ன திடீர் சர்ப்ரைஸ் மீட்டிங்?'

``ரம்பாவுக்கு ஏற்கெனவே லான்யா, சாஷா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மே மாதம் மூன்றாவது குழந்தையின் வரவுக்காகக் காத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்தியில் சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஆரம்பகாலத்தில் நடித்துள்ளார் ரம்பா. தற்போது கனடாவில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது தெரிந்து, அவருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நடிகர் சல்மான் கான். சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரீனா கைஃப், பிரபுதேவா போன்ற பலரும் `தபாங் டூர்' நிகழ்ச்சிக்காகக் கனடா வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் சர்ப்ரைஸ் விசிட்டாக ரம்பா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நலம் விசாரிப்புகள், டின்னர் என மறக்க முடியாத மீட்டிங்காக இருந்ததாகச் சொன்னார் ரம்பா.' 

'சல்மா கான் ரம்பாவிடம் பகிர்ந்துகொண்ட விஷயம்?'

"இத்தனை வருடம் கழித்து உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மூன்றாவது குழந்தைக்கு நீங்கள் தாயாகப் போறீங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நீங்களும் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரணும்'னு கேட்டாராம். 'நான் கேரிங்கா இருக்கிற இந்த நேரத்தில் எப்படி வரமுடியும்?' எனத் தயங்கினாராம் ரம்பா. 'அட நாங்க எல்லாம் கூட இருக்கோம். உங்களை விட்டுடவா போறோம். வாங்க'னு சொல்லிக் கூட்டிட்டுப் போனாராம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இவ்வளவுப் பெரிய மரியாதை கிடைச்சிருக்கு. அதுவும் சல்மான் சர்பிரைஸாக என்னை வந்து சந்திச்சது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு'னு சொன்னாங்க'.

'ரம்பாவின் குழந்தைகளுடன் ஃபோட்டோ எடுத்துக்கிட்ட நிமிடங்கள்?'

"பொதுவாகவே ரம்பா எல்லோர்கிட்டேயும் ரொம்ப அன்பா பழகக்கூடியவங்க. நம்பிட்டாங்கனா, அவ்வளவு திக் ஃபிரெண்டா மாறிடுவாங்க. அவங்க நட்பு வட்டாரம் ரொம்பச் சிறுசு. ஆனா, அவ்வளவு அன்பா இருப்பாங்க. தான் சந்தித்த நபர்கள் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துப்பாங்க. மீனா அவங்க குழந்தைகளும், ரம்பா குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிய படங்கள், ஃபங்ஷன் படங்கள் என இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடுவாங்க. அதே மாதிரிதான் ரம்பாவின் மகளை நலம் விசாரித்த சல்மான்கான் படங்கள், தங்களின் குடும்பப் படங்கள் என நிறைய படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தாங்க.'

'ரம்பா, இந்திரகுமாருடனான பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டதா?'

"ஒவ்வொரு கணவன், மனைவிக்குள்ளேயும் இருக்கும் மனஸ்தாபம், பிரச்னைகள்தான் இவங்களுக்குள்ளேயும் இருந்திருக்கு. மத்தபடி, இப்போ எல்லாப் பிரச்னைகளும் முடிவுக்கு வந்து சமாதானம் ஆகிட்டாங்க. பிரபலம் என்பதால் இந்த விஷயம் பலருக்கும் தெரிந்தது அவ்வளவுதான். இப்போ நல்லா இருக்காங்க. பழசைக் மறப்போம். இரண்டு பேருக்குமான பிரச்னைகள் முடிவுக்கு வராம இருந்திருந்தா, எப்படி மூன்றாவது குழந்தை...?! (சிரிக்கிறார்)."

அடுத்த கட்டுரைக்கு