Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

அஞ்சிடாத மஞ்சி!

“நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கத்தான் திரையரங்குக்கு வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நல்ல தரமான படங்களைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆபாசத்தை அல்ல’’ என்று பொங்கியிருப்பவர் மஞ்சிமா மோகன். எப்போதுமே ட்விட்டரில் செம ஆக்டிவ்வான இவர், ரசிகர் ஒருவரின் ட்வீட்டுக்கு செம காட்டமாக அளித்த ரிப்ளைதான் இது. ட்விட்டரில் பெண்களைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும், முதல் ஆளாகக் கருத்து தெரிவிக்கிறார் மஞ்சிமா.

காத்திருந்து காத்திருந்து...

னுஷை வைத்துப் படம் இயக்குவதற்காக ஏழு மாதங்களுக்கு மேல் காத்திருந்து சோர்ந்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ‘வடசென்னை’, ‘விஐபி 2’ மற்றும் ஹாலிவுட் படம் ஒன்று என தனுஷ் செம பிஸி. அதனால், பிரபுதேவாவை வைத்துப் படம் இயக்க கார்த்திக் சுப்புராஜ் தயாராகிவிட்டார். தனுஷுக்கு எழுதிய கதையாகக்கூட இது இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பிரபுதேவாவுக்கு ஜோடி, கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே.

மிஸ்டர் மியாவ்

டஜன் பட நாயகன்!

மாதத்துக்கு ஒரு படம் என டஜன் கணக்கில் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ஜி.வி. தெலுங்கில் தமன்னா செய்த கேரக்டரில் தமிழில் நடிக்கப்போவது, ‘ஆஷிக்’ நாயகி ஸ்ரத்தா கபூர்.

சைலன்ட் காமெடி

‘கவுன்ட்டர் பஞ்ச்’கள்தான் காமெடி நடிகர்களுக்கு ப்ளஸ். அதுவும் சூரி, எல்லா படங்களிலும் அன்லிமிடெட்டாகப் பேசுவார். ஆனால், உதயநிதியுடன் நடித்துவரும் ‘இப்படை வெல்லும்’ படத்தில் சூரிக்கு வசனங்கள் குறைவு. பேசாமலே காமெடி செய்திருக்கிறாராம். சூரியை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

டைரக்டர் ஏ.ஆர்.ரஹ்மான்!

யக்குநர் அவதாரம் எடுக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான். கைவசம் இரண்டு படங்கள்! முதல் படத்தின் ஷூட்டிங் ரோம் நகரில் நடந்துவருகிறது. இசை சார்ந்த ‘லீ மஸ்க்’ என்ற இந்தப் படத்தில் வெளிநாட்டுக் கலைஞர்கள் நடிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்திய நடனம், கலாசாரம் சார்ந்த படம் ஒன்றை இயக்கவும் திட்டம். இந்த இரண்டு படங்களுமே Virtual Reality தொழில்நுட்பத்தில் உருவாகவிருப்பது ‘ஹைலைட்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியாவ் பதில்

‘‘மீண்டும் ஒரு பிரமாண்ட மேடைப் பேச்சுக்கு சிவகுமார் தயாராகிறாராமே?

‘‘இரண்டு மணி நேரம் தண்ணீர்கூட குடிக்காமல், ஒரு குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் மகாபாரத சொற்பொழிவாற்றி அசத்தியவர் சிவகுமார். மீண்டும் ஒரு சொற்பொழிவுக்குத் தயாராகிவருகிறார். இந்த முறை திருக்குறள் பற்றிப் பேச இருக்கிறார். அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 திருக்குறள்களுக்கு, தன் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை வைத்து, ஒரு குறளுக்கு ஒரு கதை என்ற விதத்தில் மேடையில் பேசப் போகிறார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism