Published:Updated:

`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்!" - சூரி சர்ப்ரைஸ்

`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்!" - சூரி சர்ப்ரைஸ்

கடைக்குட்டி சிங்கம், சீமராஜா என டபுள் டோஸ் உற்சாகத்தில் இருக்கிறார் சூரி. அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு என்று சூரியிடம் பேசியதிலிருந்து...

`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்!" - சூரி சர்ப்ரைஸ்

கடைக்குட்டி சிங்கம், சீமராஜா என டபுள் டோஸ் உற்சாகத்தில் இருக்கிறார் சூரி. அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு என்று சூரியிடம் பேசியதிலிருந்து...

Published:Updated:
`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்!" - சூரி சர்ப்ரைஸ்

''ரொம்பப் பரபரப்பா இருக்கேன். இப்பக்கூட மதுரை ஃப்ளைட்டைப் பிடிக்க ஏர்போர்ட்லதான் இருக்கேன். சீக்கிரம் பேசிரலாமா?'' - மூச்சுவிடமால் பேசுகிறார் நடிகர் சூரி. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு... என்று சூரியின் பேட்டியிலிருந்து...

“பத்து வருஷங்களுக்கும் மேல் சினிமாவுல இருக்கீங்க. இந்தப் பயணத்தை எப்படிப் பார்க்குறீங்க?”

“சினிமாதான் என்னை பக்குவப்படுத்தியிருக்கு. நான் எந்தளவுக்கு பக்குவப்பட்டிருக்கேன்னு என்கூட வேலை செய்யும் டெக்னீஷியன்கள், இயக்குநர்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் இயக்குநர்கள் சொன்னதை அப்படியே வாங்கி நடிச்சிட்டு இருந்தேன். இப்ப ஸ்பாட்டுக்கு வந்தப்பிறகு ஸ்க்ரிப்ட் பேப்பரை வாங்கி என் ஸ்டைலுக்கு ஏற்றமாதிரி எப்படியெல்லாம் மாத்தலாம்னு யோசிப்பேன். இதுக்கும் காரணம் இயக்குநர்கள்தான். எனக்கான சுதந்திரத்தை அவங்க கொடுக்குறாங்க. உதாரணம் 'சீமராஜா' படம். பொன்ராம் சார் ஸ்க்ரிப்ட் பேப்பரை கொடுத்தவுடனேயே நானும் சிவாவும், ‘நம்ம மாடுலேஷனுக்கு ஏற்றமாதிரி எப்படிப் பேசலாம்’ என  டிஸ்கஸ் பண்ணுவோம். பிறகு அதை பொன்ராம் சார்ட்ட சொல்லுவோம். நாங்க சொல்லிட்டு இருக்கும்போதே அவர் சிரிச்சுட்டா, எங்க ஐடியா ஓகே ஆகிடும். சிரிப்பு வரலைனா அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செஞ்சிடுவோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தனை பேர்கூட நடிச்சாலும் சிவகார்த்திகேயன்கூட நடிக்குறது கண்ணை மூடிட்டு சிக்ஸ் அடிக்குற மாதிரி ரொம்ப எளிதான விஷயம். ஏன்னா சிவா எப்படி பந்து போடுவார்னு எனக்கு நல்லாவே தெரியும்.”  

`` `சீமராஜா' படத்துல உங்களுக்கு என்னமாதிரியான கேரக்டர்?”

``இதில் சிவகார்த்திகேயன், ராஜாவா நடிக்கிறார். அவர்ட்ட வேலைப் பார்க்கிற கணக்குப்பிள்ளைதான் என் கேரக்டர். `ராஜா’னு நான் அவரை  கலாய்ப்பேன். `கணக்கு’னு அவர் என்னைத் திருப்பிக் கலாய்ப்பார்!”

`` `வேதாளம்' படத்தைத் தொடர்ந்து மறுபடியும் அஜித்கூட நடிக்கப்போறீங்கனு சொல்றாங்க. எப்ப நடிக்கப்போறீங்க?” 

``கதையில கிராமம், சிறு நகரம்னு இருந்திருந்தா கண்டிப்பா அதுல எனக்கு கேரக்டர் இருந்திருக்கும். ஆனா `விவேகம்', ஹாலிவுட் லெவவல்ல எடுத்த படம். அதனால என்னால அதுல நடிக்க முடியலை. `என் அடுத்தப் படத்துல நீங்க கண்டிப்பா இருக்கீங்க சூரி’னு சிவா சார் சொன்னார். அவரோட அடுத்த படம் அஜித் சார் படமானு கூட எனக்குத் தெரியாது.”

``ஆனா முன்னமாதிரி இப்போ சூரியை அதிகப் படங்கள்ல பார்க்க முடியலையே?”

``ஹீரோவுடன் முழுநேரமும் ட்ராவல் ஆகுற மாதிரியான ஸ்க்ரிப்ட்ஸ்தான் என்னைத் தேடி வருது. டைரக்டர்ஸ் என்கிட்ட பேசும்போதே, ``உங்க கால்ஷீட் 35 நாள் வேணும்’னுதான் ஆரம்பிக்கிறாங்க. அப்படியிருக்கும்போது ஒரே நேரத்துல அதிகமான படங்கள்ல கமிட் ஆக முடியலை. `களவாணி' படத்துல என் மொத்த கால்ஷீட்டே நாலு நாள்தான். அந்த நாலு நாளுலதான் என் சீன்ஸ் எல்லாத்தையும் டைரக்டர் சற்குணம் சார் எடுத்தார். இப்ப, `களவாணி 2' படத்துக்காக சற்குணம் சார் என்கிட்ட, `படம் முழுக்க நீங்க விமல்கூட டிராவல் பண்ணுற மாதிரியிருக்கும்''னு சொன்னார். வெவ்வேற படங்கள்ல இருந்ததால என்னால கால்ஷீட் கொடுக்க முடியலை. ஆனா, எனக்கும் விமலுக்கும் ஏதோ மனக்கசப்பு. அதனாலதான் சூரி களவாணி-2வுல நடிக்கலைனு புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. விமல் முன்னணி ஹீரோவா வரணும்ங்குறதுதான் என் ஆசை. அது என் ஆசை மட்டுமல்ல... விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனோட ஆசையும்கூட. `பசங்க' படத்துல முதல்ல கமிட்டானது விஜய்சேதுபதிதான். ஆனா, `கொஞ்சம் சிவப்பா இருக்குற பையனா இருந்தா நல்லாயிருக்கும்’னு டைரக்டர் பாண்டிராஜ் சார் ஃபீல் பண்ணினார். அந்தச் சமயத்துல விமலை பாண்டிராஜ் சார்ட்ட அறிமுகப்படுத்தி வெச்சேன். விமல் எனக்கு எப்பவும் நல்ல நண்பர். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒரு பிரச்னைன்னா விமல்தான் முன்னாடி வந்து நிற்பார்.” 

``காமெடி நடிகர்கள்ல யார் உங்க இன்ஸ்பிரேஷன்?”

``எப்பவுமே எனக்கு நாகேஷ் சார்தான் பிடிக்கும். அவருடைய காமெடியைதான் ரசிச்சுப் பார்ப்பேன். நான் பண்ற காமெடியெல்லாம் எங்க அப்பாகிட்ட இருந்து எடுத்துக்கிட்டதுதான். அவர் பெரிய கலைஞர். ஆனா, சினிமாவுல அவர் அதிகமா நடிச்சது இல்லை. எங்க அப்பாவை ஒருமுறை இயக்குநர் சற்குணம்கிட்ட அறிமுகப்படுத்திவெச்சேன். கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தார். அவர் பேசுற விதம் சற்குணம் சாருக்குப் பிடிச்சிருச்சு. அதனால `வாகை சூடவா' படத்துல அவருக்கு ஒரு கேரக்டர் ரோல் கொடுத்தார். இப்போ, அப்பா உயிரோட இல்லை. அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்.” 

`` `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்குப் பிறகு விஜய்சேதுபதியோட சேர்ந்து நடிக்கலையே, ஏன்?”

``விஜய்சேதுபதி, என்னோட நெருங்கிய நண்பர். `என்னடா மாமா'னுதான் கூப்பிடுவேன். `சொல்லுடா மச்சான்'னு அவர் சொல்லுவார். கூத்துப்பட்டறை காலத்துல இருந்தே எங்களுக்கு நல்ல பழக்கம். சேர்ந்து நடிக்கணும்னு எங்களுக்கும் ஆசைதான். ஆனா, ஸ்க்ரிப்ட் அமையல. என்னைப் பார்க்கிறப்பல்லாம், `என்னடா.. எல்லாரோடவும் நடிக்கிற, என்கூட எப்படா நடிக்கப்போற’னு கேட்பான். அது என்னனு தெரியல `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்குப் பிறகு எங்களுக்கான ஸ்க்ரிப்ட் அமையல. யாராவது நல்ல ஸ்க்ரிப்ட் கொண்டு வந்தா கண்டிப்பா சேர்ந்து நடிப்போம். நாங்களும் அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.” 

`` `வெண்ணிலா கபடிகுழு-2' படத்தில் நடிப்பது பற்றி?”

`` `வெண்ணிலா கபடிகுழு', எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்த படம். `பரோட்டா சூரி’னு அந்தப் படம்தான் என்னை எல்லார்ட்டயும் கொண்டுபோய் சேர்த்துச்சு. இப்போ 'வெண்ணிலா கபடிகுழு-2'வுல முதல் பாகத்தைவிட அதிகமான காமெடி பண்ணியிருக்கேன். இதுல சொந்தமா பரோட்டா கடையை வெச்சிருப்பேன். அந்தப் படத்தை பற்றி போகப்போக இன்னும் நிறையப் பேசலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism