மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடிகர் விக்ராந்த், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் திரைப்படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தில் இயக்குநர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதாலும், மிஷ்கின் - விக்ராந்த் - சுசீந்திரன் என்ற வித்தியாசமான காம்போ என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரைக்கதைப்படி விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் பணியில் இருக்கும்போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிதான் மிஷ்கின். இதுதான் படத்தின் ஒன்லைன்.