Published:Updated:

``அன்பு குறைஞ்சுட்டே வருது... ரொம்பக் கஷ்டமா இருக்கு..!" - யுவன் ஷங்கர் ராஜா

``அன்பு குறைஞ்சுட்டே வருது... ரொம்பக் கஷ்டமா இருக்கு..!" - யுவன் ஷங்கர் ராஜா

'பேய்பசி' பட இசை வெளியீட்டு விழா.

``அன்பு குறைஞ்சுட்டே வருது... ரொம்பக் கஷ்டமா இருக்கு..!" - யுவன் ஷங்கர் ராஜா

'பேய்பசி' பட இசை வெளியீட்டு விழா.

Published:Updated:
``அன்பு குறைஞ்சுட்டே வருது... ரொம்பக் கஷ்டமா இருக்கு..!" - யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், 'பேய்பசி'. இது, பின்னணி இசையை மையப்படுத்திய த்ரில்லர் படம். இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பாடல்களைப் பாடியுள்ளார். பிரபல தயாரிப்பாளரும் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரி பாஸ்கர் இதில், ஹீரோவாக அறிமுகமாகிறார். சகோதரன் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால், இளையராஜாவின் குடும்ப உறவுகள் வெங்கட் பிரபு, ஸ்ரீகாந்த் தேவா, வாசுகி பாஸ்கர், கார்த்திக் ராஜா உட்பட பலர் கூடியிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் நலன் குமாரசாமி, கிருத்திகா உதயநிதி உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

`சூது கவ்வும்' படத்தில் நலன் குமாரசாமியிடம் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்த ஸ்ரீனிவாஸ் கவிநயம் பேசுகையில், ``இது, டிஜிட்டல் விர்ச்சுவல் உலகையும், நிகழ் உலகையும் மையமாகக் கொண்ட படம். ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள்ளேயே கதை நகரும் என்பதால், ஒளிப்பதிவு, கலை, படத்தொகுப்பு என அனைத்தும் மிகச் சவாலாக இருந்தது. யுவனின் பின்னணி இசை படத்துக்குப் பக்க பலமாக அமைந்துள்ளது" என்றார்.

ஒரு குடும்ப விழாவாகவே நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், பலரும் தங்களது சிறு வயது அனுபவங்களைப் பகிர்ந்தனர். இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, ``எங்க குடும்பத்துல ஹரி மட்டும்தான் சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆசைப்பட்டான். என் படங்கள்ல அறிமுகப்படுத்தச் சொல்லிக் கேட்டார். ஏற்கெனவே நான் பிரேம்ஜியை டார்ச்சர் பண்றேன். உன்னையும் கூப்பிட்டா குடும்பத்துல பிரச்னை. நீயாவே ஹீரோ ஆயிடு. பிறகு உன் கால்ஷீட் வாங்கி நான் படம் பண்றேன்’னு சொன்னேன். ஹரி ஹீரோ ஆயிட்டான். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யுவன் முதுகெலும்பு மாதிரி பலமா இருப்பார். 'சென்னை 600028' மாதிரி, இந்தப் படத்துக்கும் யுவன்தான் ஹீரோ!" என்றார்.
      
பின்னர் பேசிய கார்த்திக் ராஜா, ``அப்பா (இளையராஜா) எஸ்.ஏ.சி சார் படத்தோட ரெக்கார்டிங் போகும்போது, விஜய் சார் ஸ்டூடியோவுக்கு வெளியே இருப்பார். அப்போ அவர்கிட்ட ஜெயிச்சே தீரணும்னு ஒரு வெறி தெரியும். இப்போ, அவர் எங்கேயோ நிற்கிறார். அப்படி ஒரு வெறியை நான் ஹரிகிட்டேயும் பார்க்கிறேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ``என் முதல் இசை வெளியீட்டு விழாவுல வந்து சிறப்பிச்சவர், யுவன் ஷங்கர் ராஜா. இன்னைக்கு அவரோட பக்கத்துல உட்கார எனக்கு இடம் கொடுத்திருக்காங்க. இதைப் பெரிய பாக்கியமாகக் கருதுறேன். இயக்குநர் ஸ்ரீநிவாஸ் பார்க்க ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறார். ‘சூது கவ்வும்’ பட வேலைகளில் இருக்கும்போது ஒரு முறை, டியூனுக்காக நைட்டு 11 மணிக்கு வர்றேன்னு சொன்னாங்க. ஆனா, இவங்க வர லேட் ஆயிட்டதுனால, நான் தூங்கிட்டேன். அப்போ என் பால்கனியில யாரோ கல்லைத் தூக்கி போடுற சத்தம். மறுநாள் காலையில என்னனு விசாரிச்சா, என்னை எழுப்ப செங்கல் வீசியிருக்காங்க. அதைப் பண்ணது வேற யாருமில்ல, இந்தப் படத்தோட இயக்குநர் ஸ்ரீநிவாஸ்தான்!" என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், ``ஹரி நடிக்கணும்னு ஆசைபட்டுட்டே இருந்தான். திடீர்னு சிங்கப்பூர் கிளம்பிப் போயிட்டான். பிறகு அவனைக் கூப்பிட்டு, `நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன்’னு சொன்னேன். அப்படித்தான் எனக்கு ஸ்ரீநிவாஸ் பழக்கம். அதுக்குள்ள எங்களுக்கு வழக்கம்போல வர்ற சண்டையால, ஹரி திரும்ப ஸ்ரீலங்கா போயிட்டான். கொஞ்சநாள் கழிச்சு வந்து, ‘நீ மியூசிக் பண்ணு’னு சொன்னான். அப்படித்தான் இந்தப் படம் நடந்தது.

இன்னைக்கு உலகத்துல அன்பு கம்மியாகிட்டே வருது. நாம மத்தவங்க மேல வெச்சிருக்கிற அன்பை வெளிப்படுத்திக்கிட்டே இருக்கணும். எந்த நியூஸைக் கேட்டாலும் நெகட்டிவா இருக்கு. இதனாலேயே நான் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கிறது இல்லை. நாம எல்லோருக்கும் அன்பு செலுத்தணும்னு நினைக்கணும். அந்த ஒரு நினைப்புலதான், நான் படங்களைக் கமிட் பண்ணிக்கிறேன். இந்தப் படம் பெருசு, அந்தப் படம் சிறுசுனு பார்க்காம, மாஸ் ஹீரோ, அறிமுக ஹீரோனு பார்க்காம, சம்பளம் தருவாங்களா, மாட்டாங்களானு யோசிக்காம... எந்தத் தயக்கமும் இல்லாம வேலை செய்றேன். இதுக்குக் காரணம், சினிமா மேல எனக்கு இருக்கிற காதல்தான். இதையேதான், எல்லோரும் அவங்கவங்க துறைகளில் செய்யணும்" என்றார், யுவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism