Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

பிரிட்டிஷ் அழகி எமி ஜாக்ஸனை சென்னையில் சொந்தமாக வீடு வாங்க வைத்துவிட்டது கோலிவுட். அடுத்த கட்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி தாண்டி, கன்னடத்திலும் அறிமுகமாகிறார் எமி. கன்னட சூப்பர் ஸ்டார்களான சிவராஜ்குமார் மற்றும் சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ படத்தின் மூலம் அங்கு என்ட்ரி கொடுக்கிறார். தீபிகா படுகோனேதான் இவர் ரோலுக்கு முதலில் பேசப்பட்டார். ஆனால், காற்று இப்போது எமி பக்கம் வீசுகிறது.

மிஸ்டர் மியாவ்

சாமி 2’ ஷூட்டிங் ஜூலையில் தொடங்குகிறது. படப்பிடிப்புக்கான முதல்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டார் ஹரி. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என விக்ரமுக்கு இரண்டு நாயகிகள். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பதில், தேவி ஸ்ரீபிரசாத் இசை. பாலசந்தருக்குப் பதில், சிபு தமீன் தயாரிப்பு. ஆறுச்சாமியும் அடுத்தடுத்து வருவார்களோ?

ட்டி நடித்துவரும் ‘போங்கு’ படத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்குத்தான் முக்கிய ரோல்! கார் மெக்கானிக், கார் திருட்டில் ஈடுபடுவதுதான் களம். படத்துக்காக குஜராத்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை வரவழைத்திருக்கிறார்கள். அந்தக் காருக்கு வாடகை மட்டும், ஒரு நாளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்தக் காருடன் ஷூட்டிங் நடத்தியிருக்கிறது படக்குழு. வாடகையிலேயே ஒரு படம் எடுக்கலாம் போல!

மிஸ்டர் மியாவ்

‘காற்று வெளியிடை’ படத்திலேயே சாய் பல்லவி தமிழில் அறிமுகமாக வேண்டியது. இரண்டாவதாக விக்ரமின் ‘ஸ்கெட்ச்’சும் மிஸ்ஸாக, ‘சார்லி’ தமிழ் ரீமேக்கிலாவது நடித்துவிடலாம் என்று பார்த்தார். அதுவும் தள்ளிப்போனது. கடைசியாக, இயக்குநர் விஜய்யின் ‘கரு’ படத்தின் மூலம் சாய் பல்லவி தமிழில் நடிக்கப்போகிறார். அப்பாடா!

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி இணையும் நான்காவது படம் ‘மாமனிதன்’ என்று செய்திகள் வெளியாகின. ஆனால், சமீபத்தில் சீனு ராமசாமி ட்விட்டரில், ‘என் உயிர் விஜய் சேதுபதியும் நானும் இணைந்து படம் எடுக்க வாய்ப்பே இல்லை’ என்று ட்வீட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சில நிமிடங்களிலேயே அதை நீக்கியும் விட்டார். விசாரித்தால், இருவருக்கும் கருத்து வேறுபாடு என்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவன் படம் வெளியாகவிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் த்ரில்லர் ஹாரர் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. பொருளாதாரப் பிரச்னையில் சிக்கிய இப்படம், ஜூன் மாதம் ரிலீஸ் ஆவது உறுதி. சிம்பு நடித்த ‘கான்’ எப்போது ரிலீஸாகும் என்று விசாரித்தால், அது செல்வராகவனுக்கே தெரியாது என்கிறார்கள். சிம்புவுக்காவது தெரியுமா?

விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் இருப்பவர் ராஜ்கிரண். கமல் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராஜ்கிரணிடம் கேட்க, முடியவே முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அடுத்து மாதவனுக்குப் போன் செய்ய, அவரும் ‘நோ’ சொல்லி, எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

மியாவ் பதில்

‘திரைப்பட வர்த்தக சபை’ திடீரெனத் தொடங்கியதற்கும், தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தை வாபஸ் வாங்கியதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

சேவை வரியைக் குறைக்கவும், திருட்டு வி.சி.டி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் மே 30 முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். இதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்படத் தொழிற்சங்கங்கள் என அனைவரும் எதிர்ப்பு. ‘மூத்த தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் தனித்து விஷால் முடிவெடுக்கிறார்’ என்று கொந்தளித்தனர். நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்களில் விஷாலுக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் அமைப்புதான் ‘திரைப்பட வர்த்தக சபை’. இதன் எதிரொலியாகத்தான் விஷால் போராட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார்.